பகவத் கீதை கூறும் வாழ்வியல் ரகசியங்கள்!

Motivational articles
Bhagavad Gita...
Published on

கவத் கீதை என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததாகும். அர்ஜுனனுக்கு அவனது கடமையை உணர்த்துவதற்காக உபதேசித்த  மொழியாகும். ஆனால் அது எந்த காலத்திற்கும் ஏற்ற வகையில் இறைவனே உரைத்த வெற்றியின் விளக்கமாகும். மனிதர்களின் மனதில் ஏற்படும் அனைத்து விதமான கேள்விகள், குழப்பங்களுக்கும் இதில் பதில் உள்ளது.

எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்;

நாம் வாழ்க்கையில் என்னவாக ஆகவேண்டும் என முடிவு செய்து அதுவாக நிச்சயம் ஆவோம் என நம்பினால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

அமைதியாக இரு;

மனம் அமைதியாக இருப்பது நம்முடைய மன தூண்டல்களை கட்டுப்படுத்த உதவும். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது எண்ணத் தெளிவு அடைவதற்கு உதவுவதுடன் நேர்மறை எண்ணங்களை நோக்கி நம்முடைய ஆற்றல் முறையாக செலுத்தவும்.

கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே;

நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அந்த கடமையை மட்டும் செய்யுங்கள். ஆனால் அதனால் விளையும் பலன்  உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. இந்த செயலால் ஏற்படும் பலன் பற்றியோ அது நடப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். பலன் கிடைக்கும் என அதன் மீது பற்று வைக்காமல் உங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யுங்கள்.

சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்;

குருஷேத்திரப் போருக்கு முன், தனது செயலால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்ளாமல் தான் போரில் தோற்று விடுவோம் என எண்ணி போரிட மறுத்தான் அர்ஜுனன். நாம் என்ன செய்ய வேண்டும் எதற்காக அதை செய்ய வேண்டும் என்ற காரணத்தை சரியான கண்ணோட்டத்துடன் பார்த்து புரிந்து கொள்வது இக்கட்டான சூழலில் நாம் செயலாற்ற உதவி செய்யும்.

மாற்றம் என்பது இயற்கையின் விதி;

பகவத் கீதையின்படி அனைத்தும் மாறக்கூடியது உன்னுடைய உடல் உணர்வுகள் எண்ணங்கள் உள்ளிட்ட நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் மாற்றத்திற்கு உட்பட்டது. வெற்றியாளராக இருக்கவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் புதிய சூழல்கள் மாற்றங்கள் புதிய விஷயங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் முடிவு நல்லதாகவே வரும் .அதோடு புதிய வாய்ப்புகளும் வெளிப்படும்.

மனம் வலிமையானது;

உங்களின் எண்ணங்களால் ஒன்று உங்களை உருவாக்க முடியும் அல்லது அழிக்க முடியும். நீங்கள் சரியாக அதை கையாண்டால் உங்களால் வெற்றி பெற முடியும். ஒருவேளை இது உங்களால் முடியாது என நீங்கள் நினைத்தால் நிச்சயம் நீங்கள் தோற்றுப் போவீர்கள்.

இதையும் படியுங்கள்:
எந்த வயதிலும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் இந்த 10 முக்கியமான கோட்பாடுகள்...
Motivational articles

உடல் அழியக்கூடியது; ஆத்மா அழியாது;

நம்முடைய புற உடல் என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. அதே சமயம் நம்முடைய ஆத்மா நிரந்தரமானது. அது அழிவற்றது. இந்த உடலை அழித்துவிட முடியும். ஆத்மாவை யாராலும் அழிக்க முடியாது.

நிகழ் காலத்தில் வாழுங்கள்;

நிகழ்காலத்தின் முக்கியத்துவம் பற்றியும் பகவத்கீதை விளக்குகிறது. கடந்த காலம் நமக்கு பின்னால் உள்ளது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலம் தூரமாக உள்ளது. அதற்காக தயாராக இருங்கள்.நிகழ்காலம் மட்டுமே தற்போது உள்ளது. அதை வாழுங்கள்.

கற்றுக்கொண்டே இருங்கள்;

அறிவு மற்றும் ஞானத்தைப் பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் பகவத் கீதை விளக்குகிறது. நாம்  ஒவ்வொரு செயலில் இருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கீதை வலியுறுத்துகிறது. இன்றைய நவீன உலகில் பெற்ற தகவல்களை செயல்படுத்துவது எளிதானதல்ல. அதை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சிக்கான அறிவாக பயன்படுத்துவது அவசியமானது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் நிதானம்: இகிகாய் தரும் பாடங்கள்!
Motivational articles

சகிப்புத்தன்மையையும், மறதியையும் பழகுங்கள்:

கடினமான சமயங்களில் வாழ்க்கையை சமநிலையுடன் நடத்தவும். அந்த நிலையில் இருந்து மீண்டும் வரவும், சகிப்புத்தன்மை கற்றுத்தரும். அநீதி, பகைமை உணர்வை கடந்து வர மறதி நமக்கு உதவும். இந்த தகுதிகளை வளர்த்துக் கொண்டால் உறவுகளை பாதுகாக்க முடியும். அனுதாபம், அன்பு ஆகியவற்றை வளர்த்துகொள்ளுங்கள். வெறுப்பு உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com