
'கூடுதலாய் இன்னொருமைல்' போவதென்பது உண்மை யிலேயே ஒரு எளிய கொள்கையாகும். அதுவேறொன்றுமல்ல, வாடிக்கையாளரின் இடத்தில் உங்களை வைத்துப் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.
நாம் கூடுதலாய் ஒன்றைச் செய்வதற்கு ஏன் தயங்குகிறோம்? தன்முனைப்பு (Ego) தான் காரணம். நம்மிடம் எதிர்பார்க்கப் படுவதற்கு மேல் செய்தால் நாம் மற்றவர்களுக்குக் கீழ்ப்பட்டு வேலை செய்பவராகி விடுவோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
விளைவு? தேவைப்படுவதற்கு மேல் செய்வதில்லை என்பது ஒரு பழக்கமாகவே உருப்பெற்றுவிட்டது. பிறகு அதை மாற்றிக் கொள்வது கடினமாகிறது.
மற்றவர்களுடனான உறவை, தொடர்புகளை நாம் பாழ்படுத்திவிடுகிறோம். புதிதாய் எதையும் கற்றுக்கொள்வதில்லை. 'நாம் செய்வதுதான் சரி' என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
தாமஸ்கார்ஸன் பத்திரிக்கை விற்கும் பையனாகவும், சில்லறை வேலைகள் செய்தும் தொழிலுக்குத் தேவைப்படும் சிறப்பியல்புகளில் முக்கியமானதைக் கற்றார். தொழில் உலகில் தமக்கென்று ஒரு தகுதியான இடத்தைப் பெறுவதற்கு வெகுகாலம் முன்பே அவர் கற்றுக்கொண்ட அந்த விஷயங்கம் பிற்பாடு அவருக்குக் கைகொடுத்தது. "மக்கள் சேவையையும் மனோபாவத்தையும் பாராட்டுவார்கள்" என்பார் . வாடிக்கையாளர்கள் விரும்புவது இன்முகத்தோடு வழங்கப்படும் சேவையையும், நம்பகத் தன்மையையுந்தான். நீங்கம் பேப்பர் விற்கும் பையனாயிருங்கள், நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்குத் தலைவராயிருங்கள் நம்பகத்தன்மையை உருவாக்கிக் கொள்வது முக்கியம்.
கார்ஸன் 1954-ல் கோச்மென் இண்டஸ்ட்ரியை தொடங்கினார். 5000 ச.அடியில் தொழிற்கூடம் உருவானது முதல் ஆண்டில் 3 தொழிலாளர்களுடன் உற்பத்தி தொடங்கியது. அப்போதைய விற்பனை டாலர்கள்23,653 டாலர்கள். 1985-ல் விற்பனை 350 மில்லியன் டாலர்களை எட்டியது.
அந்த வளர்ச்சிக்கு அடிப்படையாய் இருந்தது நேர்வழியில் செல்வதுதான் ஊழியர்களிடமும், பங்குதாரர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் ஒளிவு மறைவில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.
கார்ஸன் கூறுவார்: "நான் எந்தச் சூழ்நிலையிலும் வாய்ப்புகளைக் கண்டறிவதன் மூலம் எனது ஊழியர்களுக்கு ஒரு நல்லுதாரணமாயிருக்க முயல்கிறேன். ஒருவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கு வாரத்தில் நாற்பது மணிநேரங்கள் போதும். ஆனால், வெற்றிகரமான தொழிலதிபர்கள் வாரத்துக்கு அறுபது முதல் எண்பது மணிநேரம் உழைக்கிறார்கள்.
"நான் எந்த அளவு சக்தியைச் செலவிடுகிறோமா" அந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் அனுகூலமடைகிறார்கள்.
'எங்கே வரவேற்பிருக்கிறதோ எங்கே அக்கறையுடன் கவனிக்கப்படுகிறதோ அங்கே வியாபாரம் செழிக்கும்' ஊழியர்களின் தகுதியை மேம்படுத்த நிறுவனம் உதவவேண்டும். ஊழியர்கள் நிறுவனத்துக்கு உதவியாயிருக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையை வழங்க முடியும்.
சிலர் மட்டும் பெருவெற்றிகளைப்பெற முடிவதற்கும், அதே அளவு படிப்பும் திறமையும் உள்ள வேறு சிலர் தங்கள் தகுதிக்குக் குறைவான வேலையில் இருப்பதற்கும் என்ன காரணம் என்று நெப்போலியன் ஹில் ஆராய்ந்திருக்கிறார். 'இன்னொருமைல்' (கூடுதல் உழைப்பு) கொள்கையை செயற்படுத்துகிறவர்கள் நல்ல பதவியையும், நல்ல ஊதியத்தையும் பெறுகிறார்கள்' என்பதே அவருடைய முடிவு.
உங்களால் முடிந்த அளவு சிறப்பான சேவையை நீங்கள் வழங்கும்போது முந்தைய முயற்சிகளை மிஞ்ச முடிகிறது. மன ஆற்றல்களை உச்ச அளவில் பயன்படுத்த முடிகிறது. கூடுதலாய் இன்னொரு மைல் போவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உலகம் நீங்கள் செய்வதைவிட பலமடங்கு திருப்பித்தரத் தயாராயிருக்கிறது.