
கேட்டதை சரிவர புரிந்துக்கொள்ளவிட்டால் பிரச்னைகளையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரும் என்பதை உண்மை நிகழ்வின் அடிப்படையில் நடந்தவை பற்றி காண்போம்.
நெடுந்தூர ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய முக்கிய ரயில் நிலையங்களில் சென்று வரிசையில் நின்று பல தினங்களுக்கு முன்பே முன் பதிவு செய்யவேண்டும்.
நண்பர் ஒருவர் குடும்பத்துடன் மும்பையிலிருந்து, கல்கத்தா செல்ல முடிவு செய்தார்.
அவருக்கு கல்கத்தாவில் இருந்து திரும்பிவர முன்பதிவில் டிக்கெட்டுக்கள் கிடைத்துவிட்டன. அவற்றை வாங்கிவிட்டார். ஆனால் மும்பையிலிருந்து கல்கத்தா செல்வதற்கான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமால் திகைத்து நிற்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவருக்கு தெரிந்த ஒரு நபர் அந்த பக்கமாக வந்து கொண்டிருந்தார்.
இவரை சந்தித்த அவர் நலம் விசாரித்துவிட்டு என்ன விஷயமாக இங்கு வந்தீர்கள் என்று வினவ, அதற்கு இவர் வந்த காரியம், நடந்த விவரம் கூறினார்.
அந்த நபர் கூறியது இவருக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்தது.
கவலைபடாதீர்கள். என் நண்பன் இங்கு வேலை செய்கிறான். அவன் மூலம் டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று டிக்கெட் தேவையான நபர்கள் பெயர்கள், வயது, பயணிக்க வேண்டிய தேதி இவைகளை கேட்டு தெரிந்துக்கொண்டார். தேவையான பணம் பெற்றுக்கொண்டார். படிவங்களை அவரே அவர் நண்பனிடம் கூறி எழுதிக்கொள்வதாக கூறிவிட்டு இரண்டு நாட்களில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன் வந்து சந்திப்பதாவும், கவலை கொள்ள
வேண்டாம் என்றும் உறுதி கூறிவிட்டு சென்றார்.
பயணம் செய்ய வேண்டியவரும் நிம்மதியாக வீடு திரும்பினார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மும்பையிலிருந்து கல்கத்தா செல்வதற்கு கிடைத்தது. அந்த நண்பர் டிக்கெட்டுகளை கொண்டு வந்த சமயம் இவர் வீட்டில் இல்லை.
இரவு இவர் திரும்ப நெடுநேரம் ஆகிவிட்டதால் டிக்கெட்டுகளை பார்க்கவில்லை.
அடுத்த நாள் டிக்கெட்டை பார்க்க எடுக்கும்பொழுது, உள்மனது எச்சரித்தது சரியாக சரி பார்க்கவும் என்று.
அவ்வாறு பார்க்கும்பொழுது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவர் போகவேண்டிய தேதி அந்த வருடம் ஏப்ரல் 18. திரும்பி வருவதற்கு மே 12 க்கு டிக்கெட்டுக்கள் புக் செய்தாகிவிட்டது.
இவருடைய நண்பர் வாங்கி கொடுத்த டிக்கெட்டுக்கள் தேதி ஜூன்18.
அதை பார்த்ததும் ஆடிப்போய்விட்டார். சம்மர் சீசன் வேறு. டிக்கெட்டுகள் ஏப்ரல் 18 க்கு கிடைப்பது குதிரை கொம்பு மாதிரி. என்ன செய்வது என்று புரியவில்லை.
மீண்டும் அவர் நண்பரை சந்தித்து நிலைமையை விளக்கினார்.
அப்பொழுதுதான் அவர் நண்பருக்கு. புரிந்தது அவர் ஏப்ரல் 18 என்பதற்கு பதிலாக ஜூன் 18 என்று தவறுதலாக கூறிவிட்டது.
மன்னிப்பு கூறிய அவர் கவலைவேண்டாம் என் ப்ரெண்ட் மேனேஜ் செய்து புதிதாக டிக்கெட்டுக்கள் புக் செய்து தருவான் என்று ஜூன் 18 க்கு பதிவு செய்த டிக்கெடுக்களை பெற்றுக்கொண்டார்.
அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த தகவலும் இல்லை.
பயணிக்க வேண்டிய நபருக்கு பதட்டம், டென்ஷன் அதிகிரித்தது. சரியான தூக்கம் காணாமல் போயிற்று.
ஒரு வழியாக ஐந்தாம் நாள், 18 ஏப்ரல் கல்கத்தா செல்லும் ரயிலில் முன் பதிவு செய்த டிக்கெட்டுகள் கைகளில் கிடைத்ததும் நிம்மதி பெருமூச்சு வந்தது. ஒருமுறைக்கு பலமுறை சரி பார்த்துக்கொண்டு அவர் நண்பருக்கு நன்றி கூறினார்.
இந்த அனுபவம் தவிர்த்து இருக்கலாம். வாய் மொழியாக கூறுவதற்கு பதிலாக ரிசர்வேஷன் படிவத்தில் முழு விவரங்கள், செல்லவேண்டிய தேதி ஆகியவற்றை சரியாக எழுதி சரிப்பார்த்து கொடுத்து இருந்தால் இந்த இக்கட்டை தவிர்த்து இருக்கலாம்.
வாழ்க்கையில் சில நேரங்களில் இந்த மாதிரி செய்து அவதிபடுபவர்களுக்கு இந்த குறிப்பிட்ட அனுபவம் பாடமாக எச்சரிக்கையுடன் செயல்பட வழி காட்டும் என்று நம்பலாம்.