
மனித வாழ்வில் நாம் எவ்வளவோ விசித்திரங்களை சந்திக்க வேண்டிய சூழல் நிலவி வருவதே நிஜம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் நண்பர்கள் இருப்பதுபோல, விரோதிகளும், தொிந்தும், தொியாமலும், இருக்கத்தான் செய்கிறாா்கள்.
பொதுவாகவே எதிா்ப்புகள் இல்லா வாழ்க்கையே இல்லை. எதிாிகளைநாம் இனம் கண்டு, சாதுா்யமாய் சமாளிக்க, எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
எத்தகைய எதிா்ப்பாய் இருந்தாலும் அதை நமது புத்திசாலித்தனத்தால் வெல்லவேண்டும்.
அந்த நேரத்தில் நமக்கு உறுதுணையாக இருப்பது நமது விவேகமும், விடாமுயற்சியுமே.
மேலும் நமக்குள்ளேயே உள்ள எதிாிகள் நம்மை ஆட்டிப்படைப்பதும் உண்டு. அது நம்மிடம் வாடகை இல்லாமல் குடியேறிய கோபம், சினம், நயவஞ்சகம், இவைகள்தான்.
அதிகமாக கோபம் கொள்பவர்களின் முகத்தில் அழகு, முகத்தின்களை, வசீகரம், தேஜஸ், இவைகள் நாளாக நாளாக விலகிவிடும்.
அந்த கோபமானது விரைவிலேயே வயோதிகத்தன்மையை முகப்பொலிவில் காட்டிவிடும் என்பதும் நிஜம்.
ஆக, கோபதாபங்கள் வஞ்சகமனப்பான்மையை நாம் அறவே தவிா்ப்பது நல்லது.
அன்பே நல்வழி. அன்பே முலதனம், அன்பு விலை மதிப்பில்லாதது, அன்பால் எதையும் சாதித்து விடலாம். அன்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இவைகளே நமது அணிகலன்களாகும். இவைகளை கடைபிடித்தாலே வாழ்வில் வெற்றியின் உச்சம் தொடலாம்.
சிலர் தனது பிடிவாத குணங்களாலும் கோபதாபங்களாலும் உறவு மற்றும் நட்புகளை இழந்துவிடுவதும் உண்டு.
அதேபோல் ஆத்திரமும் நமது வெற்றியை குலைக்க வரும் முட்டுக்கட்டையே.அன்பு செலுத்தும் நபர்களை யாராலும் எளிதில் வீழ்த்தமுடியாது.
இதுபோலவே ஆத்திரப்படுபவர்களை யாராலும் காப்பாற்ற இயலாது. சிலாிடம் தர்மசிந்தனை இருக்காது, தானும் தர்மம் செய்யாமல், தர்மம் செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுப்பாா்கள்,தர்ம சிந்தனையே நல்லது, தர்மம் தலை காக்குமல்லவா.
மகிழ்ச்சிதான் வாழ்க்கை. நாம் தெய்வ சிந்தனையோடு நல்ல நெறிமுறைகளோடு கோபதாபங்களை விட்டு விலகிவாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கடவுள் பேதம் பாா்ப்பது இல்லை நம்மை வேண்டுபவா், வேண்டாதவா்கள் என பாா்த்து தரம் பிாிப்பது இல்லை, அவரவர் செய்த, செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப காலச்சக்கரம் சுழல்கிறது.
ஆக மனிதனின் மகத்தான சாதனைகளுக்கும், வெற்றிகளுக்கும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அன்பு நெறி கடைபிடித்தல், நோ்மை தவறாமை, ஆத்திரம் தவிர்த்தல், மனசாட்சி கடைபிடிப்பது, அடுத்துக்கெடுக்காத தன்மை, இவைகளே தாரக மந்திரம். இவைகளை தொடர்ந்து கடைபிடிப்போம். வாழ்வில் தொடர் வெற்றிகளை குவிப்போம்.