
இன்றைய இளைஞர்கள் உயிரோட்டத்தோடும், சிறந்த இலட்சியங்களோடும், ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். அதிக சக்தி உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த உலகில் ஆக்கபூர்வமான வேலைகள் நடக்க வேண்டுமென்றால் இளைஞர்களால்தான் முடியும். அதேநேரத்தில் நாசகரமான வேலைகள் நடக்க வேண்டுமானாலும் அவர்களால்தான் முடியும். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால் அவர்கள் சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்.
நமது கல்விமுறை 100 சதவீதம் தகவல் அளிப்பதாக இருக்கிறது. அது தூண்டுகோலாக, ஊக்கம் அளிப்பதாக இல்லை. தகவல் தொடர்பைப் பொறுத்தவரை ஒரு ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியாது. புத்தகமும், வலைதளமும் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்யும். ஆசிரியரின் பங்கு மாணவனை அறிவு தாகத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டும் தகவல் தொடர்பு சாதனங்கள் அந்த மனிதரை விட சிறப்பாக இந்த வேலையைச் செய்யும். கல்விமுறையை முற்றிலும் தகவல் தொடர்புடையதாய் செய்திருப்பது ஏராளமான சேதத்தை ஏற்படுத்துகிறது.
பொதுவாக உலகத் தலைவர்கள் எல்லாம் வெளிப்புறத்தில் ஒரு எதிரியை உருவாக்கியதே மக்களை ஈர்த்திருக்கிறார்கள். ஆனால் உண்மையான எதிரி உங்களுக்குள்ளேயே இருக்கிறான். உங்களுடைய எல்லைகள்தான் உங்கள் பெரிய எதிரி, பயம், கோபம், வெறுப்பு போன்ற குறைபாடுகள் உங்களை துன்பத்தில் தளளுகின்றன. துரதிஷ்டவசமாக அர்ப்பணிப்பு, பொறுப்புணர்ச்சி இந்த உலகத்தில் பற்றாக்குறை ஆகிவிட்டது.
எல்லோரும் ஒரு நாளில் கோலாகலமான விழா நடத்தி இளைஞர்களை ஊக்குவிப்பது பற்றி நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி நடக்காது. பொறுப்புணர்ச்சயும், அர்ப்பணிப்பும் தினசரி செய்யத் தேவை இருக்கிறது.
இந்த அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு பெரியவர்களிடம் இருக்குமானால் இளைஞர்களால் பல அற்புதமான வேலைகள் செய்ய முடியும். ஆனால் அது பெரியவர்களிடம் இல்லாததால் இளைஞர்கள் திசை மாறி தங்களுக்குத் தோன்றியதை செல்கிறார்கள்.
இளைஞர்களிடம் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் மனிதன் பற்றிய அடையாளம் முழு சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நவீன கல்விமுறை மக்களைத் தொடர்ந்து தங்களைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.
சுயநலமாக அவரைப்பற்றியதாக மட்டும் இருக்கக் கூடாது. இந்த முழு விஞ்ஞான செயல்முறையே எப்படி நம் இன்பத்திற்கும், நலத்திற்கும் பயன்படுத்துவது என்பதில்தான் உள்ளது. எல்லோரையும் நம் நலனுக்காகவே நாம். நாடுகிறோம். நமது இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு நேரம், வளங்கள், சக்தி முதலியவற்றை முதலீடு செய்ய வேண்டும். இது நடந்து விட்டால் உலகம் உண்மையிலேயே அழகான இடமாக மாறும்.