
நமது வாழ்க்கையில் நாம் தினசரி கடைபிடித்துவரும், மற்றும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. பல்வேறு விஷயங்களில் தலையாய ஒன்றுதான் பக்குவம்.
அதை சில சமயங்களில் நாம் கடைபிடிக்க தவறி விடுவதும் சந்தர்ப்ப சூழ்நிலையால் பக்குவமில்லாமல் நடந்து கொள்வதும் தவிா்க்க இயலாத ஒன்றுதான்.
உதாரணமாக ஒருவர் நமக்கு அவரையும் அறியாமல் சங்கடம் கொடுத்துவிட்டாா், அல்லது கோபம் வரும் வகையிலான செயலை செய்துவிட்டாா் என வைத்துக்கொள்வோம், முதலில் அவர் ஏன் இப்படி நடந்து கொண்டாா்? அப்படி நடப்பவர் இல்லையே இதில் ஏதோ ஒன்று குறுக்கே பூனைபோல வருகிறதே, என்ற சிந்தனையை சீா்தூக்கி அவரை அவரது செயலை பக்குவத்தோடு கையாளும் வித்தையை நாம் தொிந்து கொள்ளவேண்டும்.
பிறகு தங்களைப் பாா்க்கவேண்டும், சில விஷயங்கள் மனம் விட்டு பேசவேண்டும், என் மனதில் எதுவுமில்லை, தங்களுக்கு தொிந்தோ தொியாமலே இது நடந்திருக்கிறது. நீங்கள் ஓய்வாக இருந்தால் சொல்லுங்கள் நானே தங்கள் வீட்டிற்கு வருகிறேன் என பக்குமாய் பேசும்போதே நமக்கு பாதி வெற்றி வந்தது போலத்தான்.
அதேபோல அவரது வீட்டிற்குச்சென்று அவரைப்பாா்த்து நடந்த விஷயங்களை அலசி மனம் விட்டு பேசினாலே போதுமே!
அவரும் நான்தான் சரிவர புாிந்து கொள்ளாமல் தவறாக பேசிவிட்டேன், என கூறும் நிலையில் எனக்குத் தொியும் நீங்கள் அப்படிப்பட்டவர் அல்ல என நாம் பக்குவமாக பேசினால், இருவருக்கும் இடையிலான மனமாச்சர்யம் குறைந்து போக வழியுண்டு.
இதைத்தான் அறிஞர் -"டொனால்ட் லயா்ட்" என்பவர் தனது கருத்தாக "உங்களை கையாள மூளையைப் பயன்படுத்துங்கள். மற்றவர்களைக் கையாள, இதயத்தைப் பயன்படுத்துங்கள் என சொல்லியுள்ளாா். அவரது வரிகளுக்கு ஏற்ப இதயத்தின் வாா்த்தைகளை பயன்படுத்தினால் நம்மீது வீன் பழி சுமத்தியவர் பக்குவமடையலாமே! "மன்னிக்கத்தொிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோவில்தானே."
அதுசமயம் நமது தன்மானத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது.
அடுத்த விஷயமாக, மனைவி சமையல் செய்து சாப்பிடும்போது ,நாம் சில விஷயங்களில் பக்குவமாய் இங்கிதம் தொிந்து, நடந்து கொள்வதே நல்லது. சாப்பாடு நல்லாவே இருக்கு! எங்க அம்மா கைப்பக்குவம் அப்படியே இருக்கு, என சொல்லிப்பாா்ப்பதுடன் இன்னும் கொஞ்சம் சரி செய்துகொள் அப்புறம் நீதான் கெட்டிக்காாி என பக்குமாய் சொல்லுங்களேன்.
அப்புறம் நளபாகம்தான், கூடுதல் சுவைதான்!
அதே போல மருமகள் சமையல் செய்து அனைவரும் சோ்ந்து சாப்பிடும்போது ஏதேனும் ஒரு பதாா்த்தத்தில் குறை இருந்தால் நோிடையாக குறை சொல்லாமல், சாம்பாாில் கொஞ்சம் உப்பு குறைவாக உள்ளதா, அல்லது எனக்குத்தான் சுவை உணர்வு கம்மியா, இருக்கிறதா, தொியலயே. உப்பு கம்மியா இருந்தாலும் பரவாயில்ல, உடம்புக்கு நல்லதுதான் என மேனேஜ் செய்து பக்குவமாய் பேசிப்பாருங்கள், அப்போது நமக்கு அனைவரிடமும் மதிப்பு கூடுமே!
அது நமக்கான மதிப்பல்ல நமது பக்குவத்திற்கான மதிப்பே சரிதானே. அதை விடுத்து என்ன சாம்பாா் வச்சிருக்கே இதை எப்படி சாப்பிடுவது நீ எதைப்போட்டாலும் உன்னோட புருஷன்தான் சாப்பிடுவான் மனுஷன் சாப்பிடுவானா? எனச்சொல்லிப்பாருங்க அவ்வளவுதான், பிரளயம்தான், அங்கு நமது பக்குவம் நாட் அவுட்டா, அம்ப்பயா் முடிவுதான், நடுவர் யாரு நம்ம திருமதிதான்.
இப்படி பொது விஷயம், நட்பு வட்டம், உறவுகள் இப்படி பல இடங்களில் நமக்கு ஏற்படும் சின்ன சின்ன விஷயங்களை, பூதாகரமாக்காமல் பலூனை ஊதி ,பொிதாக்கி உடைக்காமல் ,கையாள்வதே சிறந்த ஒன்றுதான். அங்கே நமக்கு பக்குவம் என்ற பரமபத விளையாட்டின் ஏனியே ஏற்றிவிடும்.
பக்குவம் இல்லாத நிலையில் எடுத்தேன், கவிழ்தேன் என நிதானம் தவறி சில காாியங்களைச் செய்துவிட்டால் தாயம் விழுந்து பரமபத விளையாட்டின், பாம்பு நம்மை இறக்கி விட்டுவிடும்.
இதுதான் நாம் பக்குவமில்லாததால் எதிா்கொள்ளும் சங்கடம். எனவே எங்கும் நிதானம், எதிலும் நிதானம், என்ற நிலைபாடுகளோடு பக்குவம் கடைபிடிப்போம். சிறப்பான வாழ்வை வாழ்ந்து காட்டுவோம்!!