எளிமையே வெற்றியைத்தரும்… கலாம் காட்டிய நேர்மை வழி!

Abdul kalam
Motivational articles
Published on

ம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். இந்தியாவில் இருந்த ஜனாதிபதிகளில் விஞ்ஞானியாக இருந்து ஜனாதிபதி யானவர் பெருமைமிகு அப்துல்கலாம் அவர்கள் மட்டும்தான். அவர் 400 டாலரும் 2500க்கும் மேற்பட்ட புத்தகங்களையும்தான் சேமித்து வைத்திருந்தார் என்று படித்திருக்கிறோம். அவர் பணத்தைப் பற்றி என்ன சொல்லிவிடப் போகிறார் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுவது இயல்பு .

அவர் நினைத்திருந்தால் பெரிய பணக்காரர் ஆகி இருக்க முடியும். ஆனால் அவர் பணத்தைவிட குணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். ஆடம்பர வாழ்க்கையை விட நேர்மையான வாழ்க்கைக்குதான் முக்கியத்துவம் கொடுத்தார் அப்படியே வாழ்ந்தார். அவர் பணம் சேர்வதற்கு சொல்லும் ஐந்து ரகசியங்களை இப்பதிவில் காண்போம்.

Social Capital:

கேரக்டர், பவர், பொசிஷன், அச்சீவ்மென்ட் இதை வைத்துதான் ஒருவர் மேல் நம்பிக்கை வரும். அவர்கள் செய்யும் தொழிலின் மீது நல்ல நம்பிக்கை ஏற்படும். அதுபோல் டாடா, ஆப்பிள் நிறுவனம், google மீது நமக்கு நம்பிக்கை வந்ததன் காரணம் அது செய்யும் செயல்கள்தான் அதன் மீது நம்பிக்கை நம் நம்பிக்கையை பதிய வைத்தது. அதுபோல் நாம் செயல்களால் உயர்ந்து ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்தால் அதன் மூலம் மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அப்படி ஏற்படுத்தியவர் அப்துல்கலாம் அவர்கள். இந்த சமூக தொடர்பு பணம் சேர வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறிய இலக்குகளை அடைந்து பெரிய கனவை வெல்வது எப்படி?
Abdul kalam

Money follows purpose:

அவர் படிக்கும் காலத்தில் சாதாரணமாக பேப்பர் போட்டு அதில் வரும் வருமானத்தில்தான் படித்தார். என்றாலும் தன் உயர்வை நோக்கி தொடர்ந்து பயணித்தார். பணத்துக்காக ஓடாமல் தன்னுடைய நோக்கத்துக்காக உழைக்கும்போதுதானே பணம் தன்னை வந்து சேரும் என்று நம்பினார். தான் உயர பறக்க ஆசைப்படுகிறேன் என்று கூறுவார். அதேபோல் தன் நோக்கத்துக்காக இலக்கை நோக்கி விடாமல் பயணித்தார்.

அதேபோல் மற்றவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியை பணியைத்தான் விரும்புகிறேன் என்று கூறுவார். அதே போல் தன் உழைப்பு, மற்றவர்களுக்கு சொல்லித் தருவது, அன்பான வார்த்தை கூறுவது, அறிவு நோக்கிய விஷயங்களை தொடர்ந்து படிப்பது அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் மிகவும் ஆவலாக இருந்தார்.

அதேபோல் தலைமை பொறுப்பை பக்குவமாக கையாண்டார். 1979_ல் ஏவுகணை ஏவிய பொழுது முதன்முதலாக தோல்வியைத் தழுவியது. அப்பொழுது அதற்கான பொறுப்பை தன் மீது சுமத்திக்கொண்டார். பிறகு அதை செவ்வனே செய்து வெற்றி அடைந்தபோது டீம் ஒர்க்தான் காரணம் என்று கூறினார். ஆதலால் உண்மையான தலைமை பதவி என்பது பொறுப்பை ஏற்பதில்தான் இருக்கிறது. அதை செவ்வனே செய்து வெற்றியை பகிர்ந்து அளிப்பதில்தான் தலைமை பண்பு மிளிர்கிறது. இப்படி செய்யும்பொழுது பணம் சேர வழிவகுக்கிறது.

Invest and share your knowledge:

நமக்கென்று ஒரு கனவு லட்சியம் இருக்கவேண்டும். அதை அடைவதற்கு தொடர்ந்து உழைக்கவேண்டும் தொடர்ந்து உழைக்கும் பொழுது எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் அவற்றையும் மீறி உழைப்பதற்குக் தயங்கக் கூடாது. கனவை, லட்சியத்தை அடையும்வரை உழைக்க வேண்டும். இப்படி உழைக்கும் பொழுது பணம் சேர வழிவகுக்கும்.

Earn with Ethics:

அப்துல் கலாம் எப்பொழுதும் எந்த பரிசையும் வாங்காதவர். அவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நேர்மையாக உழைத்து சம்பாதித்து வாழ்ந்தவர். அவர் பதவி விலகியதும் அரசாங்கம் கொடுத்த அத்தனையும் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பதும் நாம் அறிந்ததே. ஆதலால் எப்பொழுதும் நேர்மையை கடைப்பிடித்தால் பணம் வந்து சேரும் என்கிறார்.

இதையும் படியுங்கள்:
விவேகமும் நிதானமும்: வாழ்வில் வெற்றிக்கான வழி!
Abdul kalam

Simplicity Leads success:

எப்போதும் எளிமையாக வாழ்ந்தவர். எந்தவிதமான ஈகோவிற் கும் இடம் கொடுக்காதவர். தன்னுடைய நல்ல ஐடியாக்களே இன்வஸ்மெண்ட் என்கிறார்.

Missile Man, People's President என்று போற்றப்பட்டவர், மற்றவர்கள் வேலையை தேடுவத விட உருவாக்கச் சொன்னவர் அப்துல் கலாம் அவர்கள். அவர்களின் மைன்ட் செட் மற்றும் வாழ்க்கையை எதிர்நோக்கிய பண்பில் இருந்து

இதுபோல் மேலை நாட்டவர்களையும் பணக்காரர் களையும் பார்த்து நம்மால் மேலே உயரமுடியுமா? பொருளாதார முன்னேற்றம் அடைய முடியுமா என்று சிந்திக்கும் நடுத்தட்டு வர்க்கத்தினரும் இந்த ஐந்து ரகசியங்களையும் தெரிந்து வைத்துக்கொண்டால் பணம் வந்து சேரும் என்கிறார் அப்துல்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com