உங்கள் வாழ்வில் புத்துணர்ச்சி பெறவேண்டுமா? இந்த விஷயங்களை இப்போதே செய்யத் தொடங்குங்கள்!

ஜூலை - 24 தேசிய புத்துணர்ச்சி தினம்!
Motivational articles
Want to feel refreshed?
Published on

வாழ்வில் சூழ்நிலை உங்களை பதற்றப்பட வைக்கின்றதா? இல்லை சூழ்நிலயை பதற்றப்படாமல் நீங்கள் கையாளுகின்றீர்களா? என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கையின் வெற்றி அமைந்து இருக்கும். அதற்கு நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம். புத்துணர்வு என்பது உடல் மற்றும் மனதிற்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் அல்லது மறுமலர்ச்சி போன்ற உணர்வுகளை பெறுவதை குறிக்கிறது. சுருக்கமாக, இது சோர்வு நீங்கிய பின் ஏற்படும் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான உணர்வைக் குறிக்கிறது. நீங்கள் அன்றாடம் புத்துணர்ச்சியுடன் இருக்க...

தினசரி வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையாக இருப்பது முக்கியமானது. காலையில் எழும்போது நாம் செய்யும் சில செயல்கள் அந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். காலை நேரம்தான் ஆக்கப்பூர்வமான திட்டங்களையும், செயல்களையும் செய்ய உகந்த நேரம்.மகிழ்ச்சியும், புத்துணர்வும் தரும் நேரம் அது என்பதால் அதை நல்ல விதமாக பயன்படுத்தப் பழகுங்கள். காலை 5 மணி உங்கள் மகிழ்ச்சி தொடங்கும் நேரம் என்று சிந்திக்க தொடங்குங்கள்.

புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் நாள் முழுவதும் நல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் காலையில் எழும்போது மகிழ்ச்சியான நேர்மறை எண்ணங்களை தூண்டுவது அவசியமானது. அதற்கு தியானம் மற்றும் உடற்பயிற்சி உதவும். இவை இரண்டும் குழப்பமான சூழ்நிலையிலும் நம்மை நிதானமாக இருக்க உதவுகிறது. குழப்பமான மனநிலையிலும் நிதானமாக இருந்துவிட்டால் போதும். ‌நினைத்தது நிறைவேறிடும்.

நீங்கள் அன்றாடம் புத்துணர்ச்சியுடன் செயலாற்றி வர சில பயிற்சிகளை செய்ய வேண்டும் அவற்றில் உபயோகமான சிலவற்றை பார்ப்போம்.

தினமும் ஒரு நிமிடம்: அன்றைய நாளில் ஏதேனும் ஒரு நிமிடம் உட்கார்ந்து நிதானமாக யோசித்து அன்றைய நாளில் ஏதாவது நமது மனதிற்கு விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளதா? என யோசித்து ஒரு பேப்பரில் அல்லது செல்போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு அன்றைய நாளில் நேரம் கிடைக்கும்போது அந்த ஓய்வு நேரத்தில் அது ஏன் நடந்தது? அதனை எப்படி தவிர்க்கலாம் என யோசித்து அதை சரி செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது! இதைப் படித்தால் போதும்!
Motivational articles

தினமும் ஐந்து நிமிடம்: அன்றாடம் காலையில் தூங்கி எழுந்ததும் ஒரு 5 நிமிடங்கள் உங்கள் உடலை முறுக்கி ஸ்டிரிச் செய்து உங்கள் உடலை நெகிழ்வான நிலைக்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்யும்போது ஏற்படும் வலி அல்லது அசெளகரியம் தெரிந்தால், அதை சரி செய்ய முயலுங்கள். இது உங்களின் 5 நிமிட பாடி ஸ்கேன்.

தினமும் ஒரு மணி நேரம்: வாரத்தில்  அன்றாடம் ஒரு மணி நேரம் ஒதுக்கி தற்போது நீங்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்,அதை எப்படி முன்னேறலாம், நீங்கள் செய்யும் தவறுகள் என்ன என்பதை அலசுங்கள்.

வாரம் ஒருமுறை: வாரத்தில் ஒரு நாள் முழுவதும் முழுக்க முழுக்க உங்கள் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரம் செலவிட்டு ஆட்டம்,பாட்டம் என்று நேரத்தை செலவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள்.உங்கள் மன உளச்சல் குறையும், வாழ்வில் சுவாரஸ்யம் கூடும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் சொந்த பந்தங்கள்  மற்றும் உறவுகளை பார்க்க நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். நெருங்கிய நண்பர்களுடன் நேர செலவிடுங்கள். உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசு தர விரும்பினால், கடைகளில் வாங்கி தராமல் உங்கள் கைகளால் உருவாக்கியது வழங்கி பாருங்கள்.

உங்கள் அன்றாட வாழ்வில் சுவாரஸ்யம் கூட வேண்டுமா? அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் நவீன டெக்னாலஜி அயிட்டங்களிலிருந்து விடுபடுங்கள். அவ்வப்போது உங்கள் நேரத்தை இயற்கையை ரசிப்பதில் செலவிடுங்கள்.

வேலைக்கு தினமும் டூவீலர் மற்றும் பஸ்களிலுமே பயணப்படுகிறீர்களா? அதை தவிர்த்து கொஞ்ச தூரம் நடந்து போய்ப் பாருங்கள். முடியாத பட்சத்தில் மெதுவாக சைக்கிளில் சென்று பாருங்கள். வித்தியாசமான அனுபவங்களை பெற்று புத்துணர்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் வெற்றியடைய இலக்குகள் ஏன் அவசியம்? இதோ ஒரு எளிய விளக்கம்!
Motivational articles

அன்றாடம் புத்துணர்ச்சியுடன் இருக்க ஒவ்வொருவரும் இந்த மூன்றை தினமும் தவறாமல் செய்து வர வேண்டும். தினசரி எவ்வளவு நபர்களை சந்திக்க முடியுமோ அவ்வளவு சந்தியுங்கள், ஆற்றல் மிக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், நல்லதே நினையுங்கள், கெட்ட எண்ணங்களை வளரவிடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com