மனதிற்கான 'சுவிட்ச் ஆஃப்' பட்டன்! இதோ ஒரு எளிய ‘ஷட்-டவுன்’ (Shutdown) ரகசியம்!

Motivational articles
Motivational articles
Published on

லுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து, காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். அருகில் குடும்பத்தினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்கள் மனம் மட்டும் எங்கோ இருக்கிறது. ‘அந்த ஈமெயிலுக்கு பதில் அனுப்பிட்டோமா?, நாளைக்கு காலையில அந்த மீட்டிங் இருக்குமே! "பாதி வேலையை அப்படியே போட்டுட்டு வந்துட்டோமே!" - இப்படி வேலை தொடர்பான எண்ணங்கள் உங்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறதா?

அப்படியானால், நீங்கள் ‘ஜீகர்னிக் எஃபெக்ட்’ (Zeigarnik Effect) என்னும் உளவியல் சிக்கலில் சிக்கியிருக்கிறீர்கள். அதாவது, ஒரு வேலையை முழுமையாக முடிக்காதபோது, நம் மூளை அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டி நம் நிம்மதியைக் கெடுத்துக்கொண்டே இருக்கும். இதிலிருந்து தப்பிக்க எழுத்தாளர் கால் நியூபோர்ட் ஒரு அற்புதமான தீர்வைச் சொல்கிறார். அதுதான் ‘ஷட்-டவுன் ரிச்சுவல்’ (Shutdown Ritual).

ஷட்-டவுன் ரிச்சுவல் என்றால் என்ன?

வேலை முடிந்ததும் கணினியை ஷட் டவுன் செய்வது போல, மூளையில் இருக்கும் ‘வேலை’ என்னும் பட்டனை அணைக்கும் ஒரு மனப்பயிற்சியாகும்

இதை எப்படிச் செய்வது?

1. விடுபட்ட வேலைகளைப் பட்டியல் இடுதல்: முதலில் உங்கள் மின்னஞ்சல்கள், நோட்ஸ் மற்றும் டைரியைச் சரிபார்க்கவும். இன்னும் முடிக்காத வேலைகள் அல்லது திடீரெனத் தோன்றும் புதிய யோசனைகளை ஒரு காகிதத்திலோ அல்லது மொபைல் ஆப்பிலோ குறித்து வையுங்கள். "எதுவும் என் நினைவில் இருந்து தப்பவில்லை, எல்லாம் பாதுகாப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது" என்ற உறுதி உங்கள் மூளைக்குத் தேவை.

இதையும் படியுங்கள்:
நிம்மதி உங்கள் கையில்: பதற்றமில்லாத வாழ்விற்கு 5 எளிய வழிகள்!
Motivational articles

2. திட்டமிடல்: நாளை காலை ஆஃபிசுக்குப் போனதும் செய்ய வேண்டிய முதல் மூன்று முக்கியமான வேலைகள் எவை என்பதை இப்போதே தீர்மானியுங்கள். மறுநாள் காலையில் எதைத் தொடங்குவது?’ என்ற பதற்றத்தைக் குறைத்து, வேலையில் சட்டென இறங்க உதவும்.

3. திருப்தி: வாராந்திரத் திட்டம் அல்லது காலண்டரைப் ஒருமுறை பாருங்கள். இன்றைய நாளை நீங்கள் ஓரளவுக்குத் திட்டமிட்டபடி முடித்துவிட்டீர்கள் என்பதையும், மீதமுள்ள வேலைகளைச் செய்ய உங்களிடம் ஒரு நல்ல திட்டம் இருக்கிறது என்பதையும் நினைத்து திருப்தி கொள்ளுங்கள்.

4. மந்திரச் சொல்: இதுதான் மிகவும் சுவாரஸ்யமான பகுதி. மேற்கூறிய அனைத்தையும் முடித்த பிறகு, உங்கள் லேப்டாப்பை மூடிவிட்டு அல்லது டைரியை மூடிவிட்டு, வாய்மொழியாக உரக்க "ஷட்-டவுன் கம்ப்ளீட்" என்று சொல்லுங்கள். அல்லது உங்கள் டைரியில் ஒரு பெரிய 'டிக்' குறியைப் போடுங்கள். இது உங்கள் ஆழ்மனதிற்கு "வேலை முடிந்தது, இனி கவலைப்படத் தேவையில்லை" என்று சொல்லும் அதிகாரப்பூர்வமான கட்டளை.

இதனால் என்ன பலன்?

அலுவலகக் கவலைகள் இல்லாமல் உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் முழுமையாக நேரத்தைச் செலவிட முடியும். படுக்கையில் படுத்தவுடன் வேலை நினைவுகள் வராது என்பதால், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். முந்தைய நாள் இரவே திட்டமிட்டுவிட்டதால், அடுத்த நாள் காலையில் எந்தக் குழப்பமும் இல்லாமல் வேலையைத் தொடங்கலாம்.

இதையும் படியுங்கள்:
நண்பர்களை விடப் புத்தகமே சிறந்தது என நினைப்பவரா நீங்க... உளவியல் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
Motivational articles

ஒரு முக்கியமான எச்சரிக்கை!

இந்தச் சடங்கை முடித்த பிறகு, மீண்டும் ஒருமுறை மொபைலில் மெயில் செக் செய்வதோ அல்லது ஒரு சின்ன வேலையை மட்டும் பார்ப்பதோ கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் மூளை மீண்டும் 'வேலை' மோடுக்குத் திரும்பிவிடும்.

நவீன உலகில் வேலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. அவற்றுக்கிடையே ஒரு தெளிவான எல்லையை வகுக்க இந்த 'ஷட்-டவுன் ரிச்சுவல்' ஒரு மந்திரக்கோல் போலச் செயல்படும். இன்று மாலையே உங்கள் அலுவலகத்தில் "ஷட்-டவுன் கம்ப்ளீட்" என்று சொல்லிப்பாருங்கள். அந்தச் சுகமான விடுதலையை நீங்கள் உணர்வீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com