
வாய்ப்பு என்பது எல்லோருக்கும் கிடைப்பது அரிது. சிலருக்கு சீக்கிரம் கிடைக்கிறது. சிலருக்கு லேட்டாக கிடைக்கும்.
சாதாரண மனிதன் வாய்ப்பு கிடைத்தால் பயன் அடைகிறான். சிலர் வாய்ப்புகள் கிடைத்தால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பவர்கள் பலர் வாய்ப்புகள் வந்தாலும் சரியாக பயன்படுத்தாமல் இருப்பவர்களும் சிலர் உள்ளனர்.
திறமையை புரிந்து கொள்ளுங்கள். திறமையை அடையாளம் காண்பதற்கு அணுகுமுறை பொருந்தும் விளையாட்டு, ஓவியம், பாட்டு, பேச்சு, பலருக்கும் பல திறமைகள் இருக்கும். இவற்றில் எதில் ஒருவருக்கு சிறப்பான திறமை உள்ளதா அதில் வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எந்த நேரத்திலும் எந்த செயலையும் செய்ய தயாராக இருப்பவர்களை வாய்ப்பு சந்திக்கும்போது அவர்களுக்கு அதிர்ஷ்டம் அமைகிறது என்பார்கள். பலரும் தேவையற்ற காரணங்களால் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை தவற விடுகிறார்கள் தயாராக இல்லாம இருக்கவே புதிய விஷயங்களை செய்ய பயப்படுவது அல்லது சோம்பல் என எதற்கு பல காரணங்கள்.
வெளிநாட்டில் பல லட்ச ரூபாய் சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கிறது அடுத்த வாரமே செல்லவேண்டும். ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு வரக்கூடும் என்று தெரிந்தும் பாஸ்போர்ட் எடுக்காமல் இருந்துவிட்டு கடவுளை குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
நடந்தால் விழுந்து விடுவோம் என்ற பயத்தில் ஒரு குழந்தை நடக்க பழகாமல் தவழ்ந்துகொண்டே இருந்தால் என்ன ஆகும்? குழந்தை தவழ்ந்தால் கொஞ்சுவார்கள், ஆனால் 25 வயதிலும் தவழ்ந்தால் என்ன ஆகும்?
துரதிஷ்டமாக இங்கு பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் உடலால் இப்படி தவழ்வதில்லை. வாழ்வில் பல விஷயங்களை தவழ்கிறார்கள். ஒரு முறை தோல்வியை சந்தித்தால் பயம் வந்துவிடுகிறது. அதன்பின் அவர்கள் முயற்சி செய்யவே அஞ்சுகிறார்கள்.
வாழ்வில் வசந்தமாக வரும் வாய்ப்புகளை வசப்படுத்தி ஜெயித்தவர்களுக்கும் பயம் இருக்கும். ஆனால் அந்த பயம் தங்களை ஆக்கிரமிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தான் வெற்றி அவர்கள் வசமாகிறது!
தினமும் காலையில் இது நடக்கும். மதியம் இப்படி ஆகும், மாலையில் இதை செய்ய வேண்டும், இரவில் வாழ்க்கையை ஒரே மாதிரி கட்டமைத்துக் கொள்வதில் பலர் நிறைவடைந்து விடுகிறார்கள். புதிய விஷயங்களை செய்யவும், அவற்றில் கிடைக்கும் வெற்றி வாய்ப்புகளை அனுபவிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான வாய்ப்புகள் வருகின்றன. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் புதிதாக வேறொரு செயலை செய்வதற்காக வாய்ப்பாக அமைகிறது. எல்லோரும் எல்லா நேரங்களிலும் சரியான வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில்லை! இதுதான் சரியான வாய்ப்பு என்பதை அறிந்து கொள்வதிலேயே பலருக்கு குழப்பம் இருக்கிறது.
வெற்றிகரமான மனிதர்கள் பலரும் ஒரே நேரத்தில் பல இல க்குகளை தங்களுக்கு என உருவாக்கிக்கொண்டு அவற்றிற்கு வெவ்வேறு காலக்கெடுகளை நிர்ணயித்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட இலக்குகளை வாழ்வில் முன்னேற்றத்தையும் வாய்ப்பையும் தருகின்றன.
கடினமான சூழல்களிலும் மகத்தான வாய்ப்புகளை தேடிச்சென்று அடைபவர்களே வெற்றியாளர்களாக ஜொலிக்கிறார்கள்.
எதுவாய்ப்பு? என அடையாளம் கண்டு கொள்வது முதல் வேலை!
அந்த வாய்ப்பை அடைவதற்கு தேவையான கடின உழைப்பு செலுத்துவது இரண்டாம் வேலை! எனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை.
இதை சரியாக பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்கிறோம் என்பதே முக்கியம்!
பயத்தை ஒழித்து வாழ்க்கையில் வாய்ப்பு நம்மைத் தேடியோ, நாம் அதனைத் தேடியோ சென்று, வந்த வாய்ப்பை வசப்படுத்தி வாழ்வை வசந்தமாக்கலாம்! வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.