வாழ்க்கையில் எளிதாக முன்னேற்றம் + வெற்றியைத் தரும் 5 வழிகள்!

Easy progress in life
Motivational articles
Published on

1-இணக்கமான உறவு

உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் மனநிலையை நன்றாக புரிந்துகொண்டு அவர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் பேசவேண்டும். இந்த இணக்கமான உறவினை மேற்கொள்ள விரும்புபவர்கள் சில அத்தியாவசியமான நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது ஒருவர் பேசும் பேச்சுக்களில் இருந்தே பேசுபவர் எந்த துறையைச் சேர்ந்தவர், அவர் எப்படிப்பட்டவர், எந்த வழியில் பேசினால் அவரை ஈர்க்க முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் திறமையை வளர்க்கவேண்டும். 

2-குழப்பங்களை நீக்கும் தெளிவு

நம் மனதை எப்பொழுதும்- தூய்மையானதாகவும், தன்னம்பிக்கையுடனும், குழப்பங்களை நீக்கி தெளிவாகவும் வைத்திருக்க வேண்டும். எந்த காரியத்தையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும். நாம் ஏதேனும் பிரச்னைகளில் சிக்கிக்கொண்ட நிலையிலும் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமல் அந்த இடத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்து அந்த சிக்கலை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வேலையை ரசித்து செய்யும்போது மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

3-ஒருநிலைப்படுத்துதல்

எப்பொழுது ஒருவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெறமுடியும். குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும்.

முதன் முதலில் நீங்கள் முழுமூச்சாக ஒரு காரியத்தில் ஈடுபட்டு அதில் முழுமையான சந்தோஷம் மற்றும் வெற்றியைப் பெறும் பொழுது நீங்கள் உங்கள் உண்மையான மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் கை விரல்களை மடக்கி முழங்கையை கீழ்நோக்கி இழுத்து உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

இதையும் படியுங்கள்:
விவேகானந்தரின் அற்புதமான பொன்மொழிகள்!
Easy progress in life

இது மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தானாக வெளிப்படும் உணர்வுகளின் செயல்பாடாகும். ஆனால் எப்பொழுது உங்கள் வேலை சரியாக அமையவில்லையோ அப்போது உங்களுக்குள் இதுபோன்ற உணர்வுகள் தோன்றாது.

4-ஒருங்கிணைத்து முடிவெடுத்தல்

ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையை செய்யும்போது சில குழப்பங்கள் ஏற்படும். இந்த சமயங்களில் தங்கள் நண்பர்களிடம் இருந்தோ அல்லது ஏற்கனவே இந்த வேலையை செய்து முடித்துள்ள அனுபவசாலிகளிடம் இருந்தோ உதவிகளை பெற வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல்களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து முடிவெடுக்கும்போது நல்ல தீர்வு கிடைக்கிறது.

5-சிறந்த மொழி வெளிப்பாடு

பேசும்போது சில வார்த்தைகள் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கிவிடும். குறிப்பாக ஆனால் என்ற வார்த்தையானது எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்தும் வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசும்போது, 'நான் உங்கள் நலனை விரும்புகிறேன். ஆனால்...' என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வார்த்தையில் இருந்தே அவரது உடல் நலனில் நீங்கள் அக்கறையில்லாமல் இருப்பதுபோல ஆகிவிடுகிறது.

இதைக் கேட்டதுமே உங்கள் நண்பருக்கு இதுவரை பேசியது அனைத்தும் பயனற்றுப் போய்விட்டது என்ற எண்ணம் தோன்றிவிடும். இதனால் நீங்கள் எந்த காரியத்தை பேசிக்கொண்டிருந்தீர்களோ அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிடும்.

இதையும் படியுங்கள்:
கூடுதலாய் செய்து பலரை திரும்பிப்பார்க்க வையுங்கள்!
Easy progress in life

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com