புன்னகை சூடிய முகம் பொன்னகைக்குச் சமம்!
பணியில் வெற்றி பெறவேண்டும் என்று முதலில் விரும்புங்கள். வெற்றியின் கதவுகளைத் திறக்கும் சாவிதான் அணுகுமுறை,
ஆரோக்கியமான அணுகுமுறையால் நீங்கள் எதை வேண்டுமானாலும் அடையலாம். முறை என்ற அன்புப் பாதையில் ஒவ்வொரு நொடியும் பயணப்படுங்கள்.
அப்பொழுது உங்களை எல்லோரும் மனதார ஏற்றுக்கொண்டு, உங்களுடைய பாதையில் வெற்றிப் பூக்களைத் தூவுவார்கள். சுகமான அணுகுமுறை நிறைவான வெற்றியினை நிரந்தரமாகக் கொடுக்கிறது. வாழ்க்கையில் பல்வேறு விதமான குணங்களை, பண்புகளை, எதிர்பார்ப்புகளை, எண்ணங்களை, சிந்தனைகளை, கொள்கைகளைக் கொண்டுள்ள சக பணியாளர்களையும், மனிதர்களையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.
அவர்களை எளிதில் புரிந்துகொண்டு, அவர்களின் தேவையறிந்து, அவர்களைத் திருப்திப்படுத்துவதோடு, நாநயம் மிக்க இனிய சொற்களால், அன்பான செய்கையால் கவர நீங்கள் முயல வேண்டும்.
இதைத்தான் நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை என்கிறோம்.மற்றவர்களிடம் அன்பாகப் பழகுவது ஒரு கலை. அறிந்த நபர்களிடம் பழகவே பலர் சிரமப்படுகிறார்கள். கருத்து மோதலில் சிக்கித்தவிக்கிறார்கள்.
உண்மை இவ்வாறு இருக்கையில், முன் பின் தெரியாத நபர்களிடம், அதாவது புதுப்புது நபர்களிடம் பழகுவது, அவர்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெறுவது மிகவும் கடினமானதுதான்.
என்றாலும் மற்றவர்களிடம் எவ்வாறு பழகுவது என்ற பண்புகளைப் பெற்றவர்கள், முதல் சந்திப்பிலேயே வெற்றி பெற்றுச் சாதனை படைத்துவிடுகிறார்கள்.
இத்திறமைகளைக் கைவரப் பெற்றவர்கள் மக்களின் மனங்களில் இதமாகப் புகுந்து விருப்பம்போல விளையாடுவதோடு, அன்புக்கடலில் மூழ்கித் திளைக்கிறார்கள்.
முறையான பயிற்சியின் மூலமும், முன்னெச்சரிக்கையான நடத்தையின் மூலமும் எல்லோராலும் விரும்பத்தக்க அணுகுமுறையை வியக்கத்தக்கவாறு விரைவில் வளர்த்துக் கொண்டு வேகமாக முன்னேறலாம். மற்றவர்களிடம் அன்பாகப் பழகுவது ஒரு கலை. அறிந்த பழகவே பலர் சிரமப்படுகிறார்கள். கருத்து மோதலில் சிக்கித் தவிக்கிறார்கள்.
உண்மை இவ்வாறு இருக்கையில், முன் பின் தெரியாத நபர்களிடம், அதாவது புதுப்புது நபர்களிடம் பழகுவது, அவர்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெறுவது மிகவும் கடினமானதுதான்.
என்றாலும் மற்றவர்களிடம் எவ்வாறு பழகுவது என்ற பண்புகளைப் பெற்றவர்கள், முதல் சந்திப்பிலேயே வெற்றி பெற்றுச் சாதனை படைத்துவிடுகிறார்கள்.
இத்திறமைகளைக் கைவரப் பெற்றவர்கள் மக்களின் மனங்களில் இதமாகப் புகுந்து விருப்பம்போல விளையாடுவதோடு, அன்புக்கடலில் மூழ்கித் திளைக்கிறார்கள்.
முறையான பயிற்சியின் மூலமும், முன்னெச்சரிக்கையான நடத்தையின் மூலமும் எல்லோராலும் விரும்பத்தக்க அணுகுமுறையை வியக்கத்தக்கவாறு விரைவில் வளர்த்துக் கொண்டு வேகமாக முன்னேறலாம்.