

வாழ்க்கையில் நமக்கு எந்த அளவுக்கு மற்றவர்களிடம் உரிமை இருக்கு என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை புரிந்து நடந்துகொள்ளுங்கள். நாமே அதனை தீர்மானித்துவிட்டால், நமக்கு சிலநேரங்களில் அவமானங்ஙளும், நம் மதிப்பு இழக்கும் நிலையும் மட்டுமே மிஞ்சும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் பிரச்னைகளைப் பற்றியே சிந்தித்து கால விரயம் செய்தால், அது கூடுமே தவிர குறையாது. தீர்வுக்கான காரணத்தைப் பற்றி சிந்தித்தால், நிம்மதியும், வாய்ப்புகளும் தானாக வரும்.
வாழ்க்கையில் எல்லோரும் நம்மைவிட அவுங்க அவுங்க காரியத்தில் சரியாகத்தான் இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நாம்தான் கண்மூடித்தனமாக அன்பு, பாசம் எல்லாம் வைத்து, வாழ்வில் ஏமாந்து, தவிக்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை புரிந்துகொள்ளுங்கள்.
அளவுக்கு அதிகமாக போனால் அமிர்தமும் நஞ்சாகும். நண்பர்கள் இடத்திலோ, அல்லது பணி புரியும் இடத்திலோ வேறு எந்த இடத்திலும் சரி, தேவையில்லாமல் உரசுவதும், நம்முடைய இயலாமையை எடுத்துச் சொல்வதும் மிக மிக தவறான அணுகுமுறை என்பதை முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில் தயக்கம் என்ற வார்த்தையை தவிருங்கள். தயக்கம் இலாலாத மனதில் தான், தூணிவு எனும் ஆற்றல் திறன் செயல் பட எத்தனிக்கிறது. ஆகவே எந்த நேரத்திலும் தயக்கமில்லாமல் உங்கள் திறமையை வெளிப்படுத்தி, வெற்றிகாணுங்கள்.
வாழ்க்கையில் நேற்றைய திறமைகள் வீணாகிப் போய்விட்டதே என்று வருத்தப்படாதீர்கள். நாளைய பொழுதுகள் தேனாக இனிக்க, இன்றைய தினமே உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து, போராட்டக் குணமுடன் துவங்குங்கள். வெற்றிக்கான பாதை திறக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கும் எண்ணமும் அன்றாடம் செய்யும் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாகவும் இருக்க வேண்டும். அணுகுமுறையில் தவறை பற்றிக்கொண்டு, தடம் பதித்தால் முன்னேற்ற வாழ்க்கைப் பயணம் கரை சேராது.
நம்முடைய தோற்றம் இப்படி இருக்கே என்று கவலை படாமல், வாழ்வில் சாதிக்க நினைக்கும் எண்ணங்களில் அழகாக இருக்கப் பாருங்கள். ஏனெனில் சாதனைப் படைக்கும் உள்ளங்களே உயர்வானது என்பதை உணர்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
கடிகார முட்களைப் போல் தடம் மாறாமல் வாழ்க்கை பயணம் அமையுங்கள். கடிகாரத்திற்கு நேரத்தை மட்டுமே காட்டத்தெரியும். அந்த நேரத்தை, வாழ்க்கையில் நல்ல நேரமாகவும் கெட்ட நேரமாகவும் மாற்றும் சக்தி, நமக்கு மட்டுமே தெரியும். இதில் நல்வழியில் நடந்து, நல்வினை தேடிக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் வெற்றி இலக்கை அடையும் வரை போராடுங்கள். இறுதியில் புகழ் வரும், மனதார கொண்டாடுங்கள். ஆனால், எல்லாமே நம்மை நாமே வெல்வதுதான் என்ற அர்த்தத்தை புரிந்து கொண்டால், நமக்குள் இருக்கும் மனிதத்தன்மை எல்லை மீறாது.
வாழ்க்கையில் விழிப்புணர்வு மிக அவசியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முன்னேற்றத்திற்கு முன்னே பல இன்னல்களை தாண்ட வேண்டி இருக்கும். அதனால் ஒவ்வொரு முயற்சியிலும், விழிப்புணர்வுடன் தங்களுடைய தடங்கள் பதியட்டும். அந்த தடங்கள் யாவும் வெற்றியின் இலக்கை நோக்கி பயணிக்கும். வெற்றி மாலை சூடும்!