
திரும்பி பார்ப்பதற்குள் அடுத்தநாள் உங்களை வரவேற்க காத்திருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். எல்லாம் அவ்வளவு வேகமாக நகர்ந்து மறைகின்றது. வேகம், விவேகம் மட்டும் போதாது. சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள்தான் முன்னேறுவதில் தனித்து நிற்கிறார்கள்.
சுறுசுறுப்பாக செயல்படுவது உடனே நடைபெறாது. தனிப்பட்ட நபர் முயற்ச்சி எடுத்துக்கொண்டு விடா முயற்சியாக்கி சுறுசுறுப்பாக இருக்க பழகிக் கொள்ளவேண்டும். அப்படிபட்டவர் அவருடைய திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். மாற்றி விடாமுயற்சி துணையுடன் சுறுசுறுப்பாக செயல் பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வேலை, காரியம் என்று அல்லாமல் எப்பொழுதும் எந்த வகை சூழ்நிலையிலும் அவ்வாறு இருக்க முடியும் என்று உணர்ந்து சுருசுருப்புடன் இருக்க பழகிக்கொண்டால் அந்த குறிப்பிட்ட நபரால் நாளடைவில் அந்த சுருசுருப்பு குணம் எப்படிபட்ட நேர்மறை முடிவுகளை அளிக்கின்றது என்று கண்கூடாக காணவும், அனுபவிக்கவும் முடியும்.
அது மட்டும் அல்லாமல் திறம்பட பழகிக்கொண்டு விட்டால் அத்தகைய சுறுசுறுப்பு தன்மை அவரை விட்டு விலகாது. அவருடைய குணாதிசியங்களில் ஒரு பகுதியாகி அந்த குறிப்பிட்ட நபரின் செயல்களில் பிரதிபலிக்கும். அவரை அறியாமலேயே ஊக்கமுடன் செயல்பட தூண்டவும் செயல்பட வைக்கவும் செய்யும்.
சுறுசுறுப்பை பழகிக்கொண்டவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் அருகில் சோம்பல் என்ற சொல்லே அண்டாது.
பெரும்பாலான சுறுசுறுப்பாக செயல்பட்டு பழகிக் கொண்டவர்கள் வெட்டியாக பொழுதை போக்க மாட்டார்கள். கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது உபயோகமாக பயன்படுத்துவதில் ஈடுபடுவார்கள். உதாரணமாக தங்களை மேம்படுத்த தேவையானவற்றை படித்தல், கற்றுக் கொள்வது, வேகமாக மாறி வரும் சூழ்நிலைகளுக்கும், எதிர்வரும் மாற்றங்களுக்கு தோதாக தங்களை தயார்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவது போன்றவைகளில் முழுவதாக தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.
அப்படி சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் செய்யும் தியாகங்கள், காட்டும் ஆர்வங்கள் அவர்களை மேலும் மேண்மை படுத்திக்கொள்ள உதவுகின்றது. இவை அனைத்திற்கும் இழை ஓட்டமாக இருப்பது சுறுசுறுப்பான செயல்பாடுகள் என்றால் மிகையாகாது .
எத்தகைய வகை தொழில் அல்லது பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும் தொய்வு ஏற்படாமல் முன்னேறி செல்ல கட்டாயமாக சுறுசுறுப்பான விரைந்து செயல் படுவது மற்றவர்களிடம் இருந்து சிறப்பாக எடுத்துக் காட்டும்.
சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உன்னால் முடியும் என்ற தாரக மந்திரத்தை நாளடைவில் உருவாக்கிக் கொண்டு மேலும் விரிவாக்கிக் கொள்வார்கள் அறிவு பூர்வமாக கற்கவும் ஆக்கப் பூர்வமாக உபயோகிக்கவும்.
அவர்களுக்கு வேகமாக செயல்படவும், சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும் வந்து விடும். பரந்த மனதுடன் உள் வாங்கி வேகத்துடன், விவேகம் பயன்படுத்தி செயல்படுத்தி சாதகமான முடிவு பெறவும் தேர்ச்சி பெற்றுயிருப்பார்கள்.
சுறுசுறுப்பாக செயல்பட முயற்சி மிகவும் வலிமையான அஸ்திவரமாக அமையவேண்டுவது அவசியம் ஆகின்றது.
அத்தகையை முயற்சிக்கு ஓய்வு கிடையாது என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் சுறுசுறுப்பு என்ற கட்டிடம் கட்டப் படுகின்றது என்பதை உணர்ந்து அதை செயலில் காட்டினால் வரும் முடிவுகள் மேலும் சாதிக்க ஊக்கம் அளிக்கும்.