
வாழ்க்கையில் முன்னேறிச்செல்ல பலர் விரும்பினாலும், ஒரு சிலரால் மட்டும்தான் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடிகின்றது.
பல தடைக்கற்களில் முக்கியமான இடத்தில் இருப்பது தயக்கம் ஆகும்.
தயக்கம் என்ற தடைக்கல்லை தகர்த்து எறிந்தால் முன்னேற்ற பாதை முன்னேற வழிகாட்டும்.
தயக்கம் காட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்கள் தயக்கம் காட்டுவது உண்டு.
பயம் காரணமாக தயக்கம் மேலோங்கி இருப்பதும் உண்டு.
நாம் ஏதாவது சொன்னாலோ அல்லது செய்தலோ பிறர் என்ன கூறுவர்களோ எப்படி ரியாக்ட் செய்வார்களோ என்ற எண்ணம், தயக்கம் ஏற்பட வைக்கும்.
செயல்பட நினைக்கும்பொழுது அல்லது சமயத்தில் பிறர் குறை கூறி, மட்டம் தட்டி பேசி சிலருக்கு தயக்கம் ஏற்படுவதற்கு வழி வகுக்கலாம்.
நம்மால் முடியாது என்ற எதிர்மறை எண்ணம் வளர்த்துக்கொண்டு தேவையான முயற்ச்சி செய்யாமலேயே தயக்கம் ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதித்து அதிலிருந்து விடுபடாமல் தவிப்பவர்களும் உண்டு.
தங்கள் மீதும், தங்கள் திறமைகள் மீதும் தன்னம்பிக்கை வைத்துக் கொள்ள தவறி தயக்கம் என்ற எதிர்மறை செயல் வலுவாக வளரவிட்டு அதன் பலனை அனுபவிப்பவர்களும் இருக்கிறார்கள்.
தடங்கலாகவும், தடைக்கல்லாகாவும் இருக்கும் தயக்கத்தை தகர்த்தெறிக்கவும், அதிலிருந்து விடுபடவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி காண்போம்.
தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளும் முயற்ச்சியில் ஈடுபட வேண்டும்.
நம்மால் முடியும் என்று நம்பவேண்டும்.
தயக்கமின்றி செயல்படுபவர்களின் நடவடிக்கை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் பேசும் திறமை இவைகளை கூர்ந்து கவனித்து அவ்வாறு செயல்பட முழு ஈடுப்பாட்டுடன் பயிற்சி செய்துக்கொள்ள வேண்டும்.
பயம் என்பது நிரந்தரம் கிடையாது என்பதை உணர்ந்து அதை கடந்து செல்ல பழகிக்கொள்ள வேண்டும்.
தயக்கம் காட்டாமல் பேசவும், செயல்படவும் மனதை தயார் செய்து கொண்டு செயலில் காட்டவேண்டும்.
அவ்வாறு செய்யும்பொழுது சந்திக்கும் பிறரின் ஏளன பேச்சுக்கள், கேலி, கிண்டல்கள், உன்னால் முடியாது என்று கூறும் வாக்கியங்கள் இவற்றை துச்சமாக மதித்து புறக்கணிக்கவும், ஒதுக்கவும் பழகி செயல்படுத்தவும் வேண்டும்.
உங்களுடைய கருத்துக்களை தெளிவாக எளிமையான மொழியில் எடுத்துக்கூறவும், பதிவு செய்யவும் மறக்க கூடாது.
ஆரம்பக் கட்டங்களில் தயக்கம் என்ற பிடியிலிருந்து விடுபடுவது அவ்வளவு சுலபமில்லை போன்று தோற்றம் அளித்தாலும் நாளடைவில் அந்த தடையை வென்று முன்னேறுவது தங்களால் முடியும்.
முடியும் என்ற தங்களது ஆழ்மனது நம்பிக்கையும், உங்கள் இடை விடாமுயற்சியும், மனோதைரியமும் தயக்கம் என்ற தடைக்கல்லை தகர்த்து முன்னேற்றம் என்ற வளர்ச்சி பாதையில் மேலும் மேலும்.செல்ல கட்டாயம் உதவும் என்பது உறுதி.