கலாச்சாரச் சீர்கேடும், இன்றைய திருமண வாழ்வின் சவால்களும்!
நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில், வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி - என்ற கவிஞரின் பாடல் வரிகளுக்கேற்ப நிலைமாறுகின்ற உலகம்தான். அது தொிந்தும் தேவையில்லாத சிந்தனையால், நல்ல வாழ்வைத் தொலைப்பதும், வாழவேண்டிய வாழ்க்கையை வாழாமல் இருப்பதும் சந்தர்ப்ப சூழலால் நாமே போய் வலியச்சென்று சங்கடங்களை உருவாக்கிக் கொள்வதும் நடைமுறையாகிவிட்டது.
இன்று பல இடங்களில் புது கலாச்சாரம் எனும் புாியாத புதிரான, மனமாச்சர்யமான, அரக்கனின் பிடியில் சிக்கி இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழுகின்ற இன்றைய இளைய சமுதாயம் (இருபால்) கொஞ்சம் கொஞ்சமாய் அழிவுப்பாதையை நோக்கி நகர்வதைப் பாா்க்கும்போது மனது பதைபதைக்கிறது. எதனால், எப்படி, ஏன் இவையெல்லாம் வந்து போகின்றன புாியாத புதிராகவே உள்ளது.
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாருமில்லை? நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை என்ற பாடல் வரிகளுக்கேற்ப இன்றைய வளர்ந்து வரவேண்டிய இளைய தம்பதிக்களுக்கான பதிவுதான் இது.
பெற்றோா்கள் பாா்த்து வைத்த மாப்பிள்ளை, அல்லது பெண் வேண்டாம், நாங்களே பாா்த்துக்கொள்கிறோம் என தடம் மாறி பழைய கலாச்சாரத்தின் மகிமை தொியாமல் அவசர உலகத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன், என்ற நிலைபாடுகளால், பலர் அவசரமான விபரீதமான முடிவு எடுத்து காதல் திருமணம் போன்ற மாய வலையில் சிக்கி புாிதல் இல்லாத ஒப்பந்தங்களுடன் ஈஎம் ஐ (சுலபத்தவணை வாழ்வு) வாழ்க்கை வாழ்ந்து வருவது அபாயகரமான ஒன்றாகுமே!
நம்மை யாா் கேட்பது எனக்கே எல்லாம் தொியும் நான் ஒன்றும் பத்தாம் பசலி அல்ல, பாரதிகண்ட புதுமைப்பெண், என பெண்களும், அதேபோல நான் ஒரு புரட்சிப்பித்தன் புதுமையை விரும்பும் இளைஞன் என ஆண்களும் என்ன செய்வது என தொியாமல் திருமண பந்தங்களில் புாிதல் இல்லா ஒப்பந்தம் போட்டுவாழும் வாழ்வுக்கு பெயர் என்ன பந்தமா? பலர் இப்படிப்பட்ட வாழ்வை தோ்வு செய்து சுலபத்தவணை வாழ்வு வாழ்வது தேவையா!
இதற்கு கெளரவமான பெயர் "லிவிங் டு கெதராம்" கேட்கவே வேதனைதான் மிச்சம். பிடித்தால் தொடரலாம், இல்லாவிடில் பிாிந்துவிடலாம். இந்த நிலையில் உங்கள் பாவங்களுக்கான வரவு ஒரு குழந்தை. அதை என்ன செய்வது, அதற்கென்ன வழியா இல்லை திருமணம் ஆகி குழந்தைப்பேறு இல்லாதவர்கள், குழந்தை வளா்ப்பு தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் போதுமே!
இந்த வாழ்வு வாழ உங்கள் பாவங்களின் வடிகாலுக்கு வழி தேட குழந்தைதான் முதல் பலி! இதுபோல ஓராண்டு ஒப்பந்தம். கொஞ்சம் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்வரை மனவாழ்வு நீட்டிப்பு ஒப்பந்தம், அல்லது அட்ஜெஸ்ட்மென்ட் வாழ்வு இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? உங்கள் இருவரின் செயல்பாடுகளால் பெற்றவர்களின் நிலை நினைத்துப்பாருங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிா், இறைவன் கொடுத்த அழியாவரம், உங்களின் இளமைப்பசிக்கு புாியாத வாழ்வு வாழ்ந்து பலிகடாவாக ஆகிவிடாதீா்கள்.
காதல் திருமணமானாலும், பெற்றோா் பாா்த்து வைத்த திருமணம் ஆனாலும், சரியான புாிதலோடு வாழுங்கள். கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்க வேண்டாம். பிறப்பது ஒருமுறை, இறப்பதும் ஒரு முறைதான், மனதில் கொள்ளுங்கள் அதுவே அனைவருக்கும் நல்லது!