
வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இந்த மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் தவிக்கிறோம்.
சிலர் புதிய வேலையை தேடுகிறார்கள். சிலர் ஊரை மாற்ற நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான மாற்றம் உங்களுக்கு வெளியே இல்லை. உங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது. அந்த மாற்றத்திற்கான ரகசியம் மிகவும் எளிமையானது.
என் வாழ்க்கை ஏன் இப்படியே இருக்கிறது? நான் முன்னேறவே மாட்டேனா? எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் தேங்கி நிற்கிறேன்? இந்தக் கேள்விகள் உங்கள் மனதிற்குள் எப்போதாவது ஒலித்துக்கொண்டிருக்கிறதா? வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம். அதற்குரிய வழிகள்.
உங்கள் உடலே உங்கள் பாதுகாப்பு
"நீ உண்பது எதுவோ, அதுவாகவே நீ இருக்கிறாய்"
என்பது புகழ்பெற்ற பழமொழி.
உங்கள் உடல் வலிமை நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் ஏன் உங்கள் தோட்டத்தின் பொலிவுடன் நீங்கள் உண்ணும் உணவோடு பின்னி பிணைந்து இருக்கிறது.
செய்யும் தவறு
பசிக்கும்போது கையில் கிடைத்த ஜங்க் ஃபுட்களை உண்பது சத்தான உணவுகளை தவிர்ப்பது.
விளைவுகள்
உடல் பருமன், சோர்வு அடிக்கடி நோய்வாய்ப்படுதல் தன்னம்பிக்கை குறைதல்.
விதியை பின்பற்றுங்கள்
முதலில் உணவு பழக்கத்தை ஒரே நாளில் அதிகமாக மாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது கடினமானது. விரைவில் சோர்வடைந்து பழைய நிலைக்கு திரும்பிவிடுவீர்கள். பதிலாக தினமும் ஒரே ஒரு நல்ல மாற்றத்தை செய்யலாம்.
இன்று முதல் சாப்பிடும் உணவில் எண்ணெய் உணவுக்கு பதில் கடலை, ஆப்பிள் சாப்பிடலாம். மதிய உணவில் சாலட், கீரை சாப்பிடலாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சின்ன மாற்றமும் உங்கள் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் செய்யும் ஒரு பெரிய முதலீடு.
மனதின் குப்பையை தவிருங்கள்
உடலுக்கு உணவுபோல மனதிற்கு உணவு என்பது நீங்கள் பார்க்கும் கேட்கும் படிக்கும் மற்றும் பழகும் விஷயங்கள்தான்.
மனிதர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் படிக்கும் செய்திகள், சமூக வலைதள பக்கங்கள், இவை அனைத்தும் உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்கள் பழக்க வழக்கங்களையும் அணுகுமுறையையும் குணத்தையும் தீர்மானிக்கின்றன.
தவறுகள்
அடுத்தவர்களைப் பற்றிய புறணி பேசுவது, எதிர்மறையான செய்திகளை பார்ப்பது, சோகமான பாடல்களை கேட்பது சமூக வலைதளங்கள் நேரத்தை வீணடிப்பது.
இதன் விளைவு. -மன அழுத்தம், பதட்டம், தாழ்வு மனப்பான்மை எதிலும் எதிர்மறையான பார்வை.
இதற்குதீர்வு -ஒரு நாள் முழுவதும் நீங்கள் எதையெல்லாம் உங்கள் மனதிற்குள் அனுப்புகிறீர்கள் என்று கவனியுங்கள்.
உங்கள் மனதின் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயங்களைக் கண்டறிந்து அவற்றை மெல்ல மெல்ல தவிருங்கள். குப்பையான எண்ணங்களால் உங்கள் மனதை கெடுக்காதீர்கள்.
சரியான வழிகாட்டிய அணுகுங்கள்
உங்கள் துறையில் நீங்கள் வியந்து பார்க்கும் ஒருவரை கண்டறியுங்கள். அவரைப் பற்றியும், அவருடைய சாதனைகளைப் பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள். அவருக்கு ஒரு நாகரீகமான மின்னஞ்சல் செய்தி அனுப்புங்கள். உங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன் பத்து நிமிடம் பேச முடியுமா? என்று நேரடியாகவோ மரியாதையாகவும் கேளுங்கள்.
வெற்றியாளர்கள் அடுத்தவர்களின் நேரத்தை மதிப்பார்கள். எனவே நீங்களும் அவர்களின் நேரத்தை மதித்து கேட்க விரும்பும் கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்துகொண்டு செல்லுங்கள். ஒரு நல்ல வழிகாட்டியின் பத்து நிமிட உரையாடல் உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றும் சக்தி கொண்டது.
சிறந்த விளையாட்டு வீரராக இருங்கள்
ஒரு சிறந்த விளையாட்டு வீரர் அவர் தன் உடலை மட்டும் பேணுவதில்லை. அவர் மனதையும் ஒருநிலைப் படுத்துகிறார். ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார். செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு முதல் தரத்தை வெளிப்படுத்துவார்.
உங்கள் வாழ்க்கை மாற்றம் என்பது ஒரே நாளில் நடக்கும் ஒரு மேஜிக் அல்ல. அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நீங்கள் எடுக்கும் சின்ன சின்ன முடிவுகளின் தொகுப்பு. உங்கள் அடுத்தவேளை உணவிலும் அடுத்த எண்ணத்திலும் உங்கள் மாற்றம் தொடங்குகிறது. உங்கள் தோற்றம் உடல் மனம் என அனைத்திலும் ஒருபோதும் தொய்வில்லாத நிலையை உருவாக்குங்கள். நீங்கள் உங்களை எப்படி மதிக்கிறீர்களோ? அப்படியே இந்த உலகம் உங்களை மதிக்கும்.