நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்..!

A sense of humor...
Lifestyle stories!
Published on

முடியாதது என்று ஒன்றும் இல்லை. முதலில் நம்பிக்கை  வேண்டும். கூடவே முயற்சியும் செயல்பட வேண்டும்.

அழுத்தங்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் அவற்றில் இருந்தது மறந்து வெளிவர பெரிதும் உதவுவது நகைச்சுவை.

இறுக்கமான சூழ்நிலையை  மாற்றி புன்சிரிப்பில்  துவங்கி பெரிதாக மனம் மகிழ்ந்து சிரிக்க தூண்டும் சக்தி படைத்தது.

அவ்வாறு சிரிப்பதினால்  மனது  லேசாகி, கவலையை மறந்து அழுத்தத்தில் இருந்து வெளிபட்டு  வேறு  செயல்பாடுகளில் முழு ஈடுப்பாட்டுடன்  கவனம் செலுத்த பெரிதும் உதவுகின்றது நகைச்சுவை.

சிலரால் இயல்பாகவே நல்ல நகைச்சுவையை ரசிப்பது மட்டுமல்லாமல் நகைச்சுவையாக பேசவும் முடியும்.  கூடியிருப்பவர்களை சிரிப்பில்  ஆழ்த்தவும் முடியும்.

ஒரு சிலரால் இயற்கையாகவே நகைச்சுவை என்ற ஆயதத்தின் ( humour as a tool) துணைகொண்டு எந்த  வகை சூழ்நிலையையும் திறன் பட மாற்றி அந்த இடத்தை பிறர் விரும்பும்படி இனிதாக இருக்கும்படி அமைக்கவும்  முடியும்  அதிக சிரமமின்றி. (change the situation and surroundings into a happy one without much difficuty)

அப்படி பட்டவர்கள் நேர்மறை சிந்தனை உள்ளவர்களாக   (positive thinkng cum attitud ) காணப்படுவார்கள்.

நகைச்சுவை உணர்வுமிக்க இவர்களால் தங்கள் பேச்சு  திறமையால் மற்றவர்களையும் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக செதுக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
வியாபாரத்தில் வெற்றி பெற திறமையானவர்களைத் தேர்ந்தெடுங்கள்!
A sense of humor...

இவர்கள் தங்களுடைய நகைச்சுவை பேச்சால் பிறரை கவர்ந்து இழுப்பதுடன் அவர்களுக்கும் நகைச்சுவை உணர்வை பின் பற்ற வேண்டும் என்ற ஆவலையும், ஆர்வத்தையும் வளர்க்க வைக்க முடியும்.

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள் அனாவசிய  டென்ஷன்கள், பட படப்புக்கள், பதட்டங்கள் இவைகளுக்கு  அடிமையாகி அவதிப்பட மாட்டார்கள்.

நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் வாழ்க்கையையும், எதிர் வரும் பிரச்னைகளையும் சுலபமாக எடுத்துக் கொண்டு விடிவுகாண  முற்படும் அளவிற்கு மனம் பக்குவப்படுத்திக் கொண்டு இருப்பார்கள்.

எதற்கு எடுத்தாலும்  கவலை கொள்வது என்பது நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டவர்கள் அகராதியிலேயே   இடம் பெறாது.

இத்தகையவர்கள் பொதுவாக கூர்ந்து கவனிப்பார்கள், அதிகம் பல்வேறு தலைப்புகளில் படிப்பார்கள். பொது மற்றும் உபயோகம் அளிக்கக் கூடிய அறிவை வளர்த்துக் கொள்வதில் கவனம்  செலுத்துவார்கள். குறிப்பாக அதிகம் நபர்களுடன் கலந்து உரையாடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
மனிதனை மதித்தால் அவன் செயல்பாடு அதிகரிக்கும்!
A sense of humor...

பிறரின் நகைச்சுவைகளை மனதார பாராட்டுவதுன், திறந்த மனத்துடன் விரும்பி கற்றுக்கொள்வார்கள். (willing ti learn more with open mind)

மேலும் இவர்கள் பிறரை  ஊக்கப்படுத்துவார்கள். (motivating others ) அதே சமயம் மறக்காமல் தங்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com