ஒருவர் சாதிக்கப் பிறந்தவர் என்பதைக்காட்டும் 9 அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Motivational articles
Motivational articles
Published on

'விளையும் பயிர் முளையிலே' என்றொரு பழமொழி உண்டு. அதாவது ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து கொண்டிருக்கும்போதே அதன் குணாதிசயங்களை பிறர் கண்டுகொள்ள முடியும் என்பதே அதற்கான அர்த்தம். அதன் அடிப்படையிலேயே அது எதிர்காலத்தில் ஜொலிக்குமா, சோடை போகுமா என்பதை கண்டுகொள்ளலாம். சாதிக்கப் பிறந்தவர்களிடம் காணப்படும் 9 அறிகுறிகளை இப்பதிவில் பார்க்கலாம்.

1. அவர்கள் எப்பொழுதும் சுய விழிப்புணர்வு கொண்டவர் களாயிருப்பர். அவர்களின் பலம், பலவீனம்  மற்றும் உணர்ச்சிகளை நன்கு உள்வாங்கி அதற்கேற்ப நடந்து கொள்வது அவர்களின் முக்கியப் பண்பாக இருக்கும். தன்னை அறிந்து நடந்து கொள்பவன் தனித்துவம் மிக்கவனாகவே இருப்பான்.

2. ஏதாவது ஒரு நிலையில் தோல்வியைத் தழுவ நேரும்போது துவண்டு போகாமல், தோல்விக்கான காரணத்தை பகுப்பாய்வு செய்து அதை ஏற்றுக்கொண்டு, மீண்டுமொருமுறை  அதே தவறை செய்யாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். வளர்ச்சி ஒன்றையே மனதில் இருத்தி மேலும் கடினமாக உழைக்கத் தயாராயிருப்பார்கள்.

3. அவர்களின் உள்ளுணர்வு அவர்களை ஊக்குவிக்கும். பேரார்வம் காரணமாக தனது தனிப்பட்ட விருப்பம் ஒன்றை நிறைவேற்ற அவர்கள் நினைக்கும்போது அவர்களின் உள்ளுணர்வு அவர்களை எச்சரிக்கும். அதற்கு அடி பணிந்து எது நியாயமோ அதற்கு முன்னுரிமை தர தயங்கமாட்டார்கள் அவர்கள்.

4. சாதிக்கப் பிறந்தவர்களிடம் உள்ள மற்றொரு நற்குணம் வாழ்நாள் முழுக்க புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் அவர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளவர் களாய் இருப்பது எனலாம்.

இதையும் படியுங்கள்:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
Motivational articles

5. அவர்கள் தனிப்பட்ட இலக்கை அடைவதை மட்டுமே  குறிக்கோளாகக் கொண்டிருக்கமாட்டார்கள். தொலை நோக்குப் பார்வையுடன், தான் எந்த அளவு உயரவேண்டும், எதில் நமக்கு முழுமையான திருப்தி கிடைக்கும் என்பதையெல்லாம் ஆராய்ந்து, அர்த்தமுள்ள, பெரிய பெரிய செயல்களை செய்து  முடிப்பதிலேயே ஆர்வம் காட்டுபவர்களாயிருப்பார்கள்.

6. அவர்கள் கூட்டத்தில் ஒருவராக இருக்க ஒருபோதும்  விரும்ப மாட்டார்கள். தனித்துவம் பெற்று, படைப்பாற்றல், தலமைப் பண்பு மற்றும் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடிய வல்லமை போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

7. தாம் செய்யும் நற் செயல்களால் அவர்கள் சுலபமாக  முழு திருப்தி அடைந்து விட மாட்டார்கள். எனவே, மேலும் மேலும் நற்செயல் புரிந்துகொண்டேயிருப்பது அவர்கள் வழக்கம். அது அவர்களை உயர் நிலைக்கு எடுத்துச்செல்ல ஒருபோதும் மறுக்காது. 

8. சாதிக்கப் பிறந்தவர்கள், தன்னை சுற்றியுள்ளவர் களுக்கு வழி காட்டவும், அவர்களுடன் இணைந்து செயல் படவும், அவர்களின் வாழ்கைத் தரம் உயர்வதற்கு உழைக்கவும் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். இது அவர்களின் முன்னேற்றத்திற்கும் வழி கோலும்.

9.அர்த்தமுள்ள புதுப்புது விஷயங்களை எப்பொழுதும்  செய்து கொண்டிருக்கும்படி அவர்களின் உள்மனம் அவர்களுக்கு கட்டளை இட்டுக்கொண்டே இருக்கும். அதை தவறாமல் பின்பற்றி வாழ்வில் படிப்படியாக முன்னேறுவதும் பல நம்ப முடியாத செயல்களைப் புரிந்து வெற்றிகளைக் கொண்டாடுவதும் அவர்கள் வாழ்க்கையில் மிக சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுயமாய் தொடங்கும் திறன் - குறிக்கோளை அடையவதற்கான எளிய வழி!
Motivational articles

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com