
பல நேரங்களில் சரியான சமயத்தில் சரிவர முடிவு எடுக்காமல் தாமதிப்பதால் பலருக்கு ரிசல்ட்டுகள் சாதகமாக அமைவதற்கு பதிலாக பாதகமாக அமைந்து விடுவதை கண்கூடாகக் கண்டு
கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் அல்லது தொழில் நிமித்தமோ முடிவுகள் எடுக்க வேண்டியது கட்டாயம் ஆகின்றது. முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடலாம். ஆனால் பெறும்பாலும் தவிர்க்க முடியாத ஒன்று.
முடிவு எடுக்க தயங்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெறும் பாலும் இயல்பான பயம். முடிவு எடுத்து ஒரு வேளை தோல்வியில் முடியுமோ, காலதாமதம் ஆகி பணம், நேரம் விரயம் ஆகுமோ, பிறர் என்ன கூறுவர்களோ போன்ற கற்பனைகள் தடை கற்களாகின்றன பலருக்கு முடிவுகள் எடுப்பதில் அச்சம், தயக்கம் ஏற்படுவதற்கு.
சிலருக்கு தங்கள் திறமை மீதே நம்பிக்கை இல்லாமை முடிவு எடுக்க மறுப்பதற்கு காரணமாக அமைக்கின்றன. எடுத்துக்கொள்ளும் தொழில் சம்பந்தப்பட்ட விவரங்கள் பற்றி அறியாமை தடைக்கல்லாக இயங்குகின்றது.
எதைப்பற்றி, எதற்காக, எந்த வகை முடிவு எடுக்கவேண்டும் என்ற முழு புரிதல் இல்லாமை அவர்கள் தயங்கு வதற்கு காரணமாக அமையக்கூடும்.
ஒருவர் முடிவு எடுக்க தயங்கினால் அல்லது அஞ்சினால் பெரும் பாலும் குறைகள் அவரிடம் இருக்கிறது என்று புரிந்துக் கொள்ளலாம்.
ஒருவர் முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் எடுக்காமல் இருந்தால், காலமும், நேரமும், குறிப்பிட்ட சூழ்நிலையும் காத்துக் கொண்டு இருப்பவை அல்ல. வேறு யாராவது வேறு விதமாக முடிவு எடுத்து பணி நகர்ந்துக்கொண்டேயிருக்கும்.
முதலில் பாதுகாப்பின்மை உணர்வை தகர்த்தெறிய வேண்டும். ( Get rid of the sense of insecutity) தாழ்வு மனப்பான்மையில் (inferiority complex) இருந்து வெளிவர வேண்டும். படிப்படியாக தன்னம்பிக்கையை ( develop self confidence) வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்
குறிப்பிட்ட தொழில் சம்பந்தமான விவரங்கள் சேகரிப்பது, படித்து தெரிந்துக் கொள்வது, புதுப்பிதுக் கொள்வது (updating) இவற்றை தொடர்ச்சியாக கடைபிடிப்பதை கடமையாகவும், ஆர்வத்தோடும் செய்ய வேண்டும்.
நாட்டு நடப்பு, உலக நடப்பு இவற்றை பற்றி தேவைக்கு ஏற்ப தெரிந்து வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
முடிவு எடுத்தால் அந்த முடிவினால் எந்த வகை ரிசல்ட்டுக்கள் வரக்கூடும் என்பதை சிந்தித்து, அலசி , ஆராயந்து, தேவைப்பட்டால் அந்த துறை சம்பந்தப்பட்ட அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் அறிந்து முடிவு எடுக்கவேண்டும்.
குறிப்பாக விருப்பு, வெறுப்பின்றி முடிவுகள் எடுக்க பழகிக் கொண்டுப் பின் பற்றுவது சால சிறந்தது.
மேலும் முடிவுகள் எடுக்கும் சமயதத்தில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை உபயோகிக்கும் வாடிக்கையாளர் தரப்பில் என்ன தேவையிருக்கும் என்பதையும் முடிவு எடுப்பவர் கூடிய மட்டும் சிந்தித்து எடுத்தால் தொழிலில் முன்னேற்றம் அடைய பெரிதும் உதவும்.
நம்மால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்துடன், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, போதிய விவரங்களுடன் தைரியமாக முடிவு எடுக்க களத்தில் இறங்கினால் நாளடைவில் தேர்ச்சி பெற்று முடிவுகள் எடுத்து அசத்தலாம். காலப் போக்கில் அனுபவமும் துணை நின்று முடிவுகள் எடுப்பதை இயல்பான செயல்களாக மாற்றிவிடும்.