
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் 50 சதவீதம் பேர் அதிகாலையில் சீக்கிரமாகவே எழுந்தவர்கள்தான் என்கிறார். உலக கோடீஸ்வரர்களை பற்றி 5 வருடங்கள் ஆய்வு செய்த தாமஸ் சி கார்லே எனும் எழுத்தாளர். அவர்களில் 50 சதவீதம் பேர் தங்களது வேலையை தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே எழுந்தவர்கள்.
உலக கோடீஸ்வரர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு வங்கிகளில் கோடிக்கணக்கான பணம் இருந்தும் அவர்கள் எளிமையாகவே வாழ்ந்துள்ளனர். செலவுகள் எளிமையானதாகவே செய்துள்ளனர். வால் மார்ட் பல்பொருள் அங்காடிகள் தொடர் நிறுவனர் ஜிம் வால்டன் சாதாரண உடைகளைத்தான் அணிகிறார்.1979 மாடல் "டாகோடா" காரை தான் பயன்படுத்தி வருகிறார்,
புகழ் பெற்ற பேஸ் புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க் 30000 டாலர்கள் மதிப்புள்ள ஆரம்ப கட்ட சேடன் காரைத்தான் பயன்படுத்தினார். பில்கேட்ஸ் சாதாரண கமர்சியல் விமானங்களில்தான் பயணம் செய்வார். பள்ளி படிப்பை பாதியில் விட்டு விட்டு வந்து 15 வயதில் சுயமாக தொழில் ஆரம்பித்த வர்ஜின் விமான கம்பெனி நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் டெல்லி வந்தால் குதிரை வண்டியில் பயணம் செய்வார்.
பிரிட்டன் மொபைல் வர்த்தகத்தில் முன்னணி தொழிலதிபர் தன் அலுவலகத்திற்கு சைக்கிளில்தான் சென்றார். சாதாரண உடைகளைத்தான் அணிகிறார். இந்தியாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி சாதாரண உடைகளைத்தான் விரும்பி அணிகிறார். விமானத்திலும் சாதாரண வகுப்பு இருக்கையில்தான் பயணம் செய்வார்.
உலக கோடீஸ்வரர்களில் பெரும்பாலானோர் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ் புக் நிறுவனர் இரண்டு வாரங்களுக்கு ஒரு புத்தகம் படிப்பவர், "ராக்கெட் எப்படி வடிவமைப்பு செய்ய கற்றுக் கொண்டீர்கள் "என்று ஒரு முறை தொழில் அதிபர் எலன் மாஸ்கிடம் கேட்ட போது அவர் கூறியது "நான் புத்தகங்கள் படிக்கிறேன்" என்றார்.
வாழ்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களில் பலர் தங்கள் வாழ்நாளில் தவறாது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஷார்க் டேங்க் நிறுவனர் மார்க் கூபன் தினமும் ஒருமணி நேரம் உடற் பயிற்சி செய்வாராம்.
உலகின் பெரும் கோடீஸ்வர வெற்றியாளர்கள் தங்களுக்கு பின் திறமை உள்ளவர்கள் முன்னேறுவதற்கு உதவியுள்ளனர். ஹெரால்டு ரமீஸ் தன்னிடம் இருந்த திறமையாளர் பில் முர்ரேயை வெற்றி கானவைத்தார்.ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் - ஸ்டீவ் வாநீக்,காரிக் சில்வர் ஸ்டிக், லாரி பேஜ் மையும், கன்னியா வெஸ்ட், ஜாய் இசட் போன்றவர்கள் வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.
வெற்றி பெற்ற கோடீஸ்வர சாதனையாளர்கள் பலர் தவறாமல் தினமும் தியானம் செய்கிறவர்கள். பிரிஜ் வாட்டர் நிறுவனர் "ரே டாலியான்" தன்னுடைய வாழ்க்கை வெற்றிக்கு தியானம்தான் காரணம் என்கிறார். டூவிட்டர் மற்றும் ஸ்கொயர் நிறுவனங்களின் சி.இ.ஓ ஜாக் போர் சே , அமெரிக்க டிவி புகழ் ஒபேரா விட்னி போன்றவர்களும் தினமும் யோகா செய்கிறவர்கள்.
வெற்றியாளர்களில் பலர் சமூக சேவையிலும் ஆர்வம் உள்ளவர்கள். பிலம் பெர்க் மீடியா நிறுவனர் மைக்கேல் பிலம் பெர்க் தன் வாழ்நாளில் 3 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். வாரன் பபெட், பில் கேட்ஸ், மிலின்டா கேட்ஸ் போன்றவர்கள் தங்களது சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கியவர்கள். இன்னும் சில கோடீஸ்வரர்கள் தங்களது வருமானத்தை பெரும் பகுதியை பேங்க்களில் சமூக சேவைக்காக டெபாசிட் செய்துள்ளனர்.
சர்வதேச கம்பியூட்டர் மன்னன் எனப்புகழப்படும் பில்கேட்ஸ் முதல் பல பிரபலங்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள்தான். கல்லூரியில் பட்டம் வாங்காமல் விலகியவர்கள். ஆனால், வாழ்க்கையின் குறிக்கோளை எட்டிப்பிடித்து சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச பிரபல ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரி படிப்பை முடிக்காதவர். ஆரகிள் சாப்ட்வேர் கண்டுபிடித்து கோடீஸ்வரான லாரி எலிசன் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக இறுதித் தேர்வை புறக்கணித்து வந்தவர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை அவர்களின் உள்ளே ஒளிந்திருக்கும் அதை வெளிக்கொண்டு வந்து தங்களுக்கு பிடித்த துறைகளில் ஆர்வம் காட்டி செயலாற்றினாலே, ஹோட்டல் தொழில் முதல் விமானத் தொழில் வரை செய்யவோ, நிர்வாகிக்கவோ, சர்வ தேச அளவில் சாதிக்கவோ முடியும். அதற்கு பட்டப்படிப்புகள் தேவையில்லை. தான் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஆர்வமும் கடினமான உழைப்பு மட்டும் போதும் என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.