முயற்சிகளுக்கு என்றுமே தோல்வியில்லை..!

Efforts never fail..!
bill gates
Published on

மக்குள் உருவாகும் ஆழமான சிந்தனைகளை கவனமாக கையாண்டு இடைவிடாமல் முயற்சி செய்தால் எந்த இலக்கையுமே ஈசியாக அடைந்து விடலாம். இந்த உலகில் பல வெற்றியாளர்கள் அப்படித்தான் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றிக்கொடியை ஏற்றினார்கள். 

ஒரு சிந்தனை உருவாகிறது என்றால் அந்த சிந்தனைக்கு முதல் காரணம் ஆர்வம். அந்த ஆர்வம் இருந்தால்தான் புதுப்புது சிந்தனைகள் உருவாகும். அப்படி புது சிந்தனை உருவாகும் பொழுது அதை வைத்து எப்படி நாம் அடுத்தது காய் நகர்த்தலாம் என சாமர்த்தியமாக காய் நகர்த்தி வெற்றி காணும் ஒரு இலக்கு இந்த உலகில் பல வல்லுனர்களையும் உலகமே கண்டு ஆச்சரியப்படும் மனிதர்களையும் உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் பில்கேட்ஸ் இவரின் திறமையும் இவரது விடாமுயற்சியும் இவரது புகழை உலகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பால் ஆலன் என்னும் தன்னுடைய நண்பன் வீட்டில் இருந்த பழைய கணினிப் பெட்டி ஒன்றைக் கூர்ந்து ஆராய்ந்தார்கள் பில்கேட்சும், அவரது நண்பரும். பல்வேறு ஆய்வுகளைச் செய்து 1975ஆம் ஆண்டில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தைத் தொடங்கினார்கள். Alter 8600 என்ற கணினி மென்பொருள் எழுதும் ஒரு நிறுவனத்தை உருவாக்கி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போட்டியாக மௌஸ் வைத்து இயக்கும் கணினிகளை ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்து புகழ் பெற்றது.

இதையும் படியுங்கள்:
போராடுவதும் ஒரு சுகமே!
Efforts never fail..!

பில்கேட்ஸ் நிறுவனம் காலி என்று நினைத்தபோது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற அடுத்த புயலைக் கிளப்பி உலகப் புகழ்பெற்றார் பில்கேட்ஸ். குறுகிய காலத்தில் உலகின் முதல் பணக்காரர் ஆன வரலாற்றைப் படைத்தார். இன்றளவும் ஒரு மகத்தான சாதனையை மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகில் புரிந்துகொண்டுதான் உள்ளது. முயற்சிகளுக்குத் தோல்வியில்லை என்பது புலனாகிறது.

தங்களுக்கு உருவான சிந்தனையை, ஆர்வத்தை இடைவிடாமல் முயற்சி செய்து அதை நடைமுறைப் படுத்திப் பார்த்தார்கள் இந்த மனிதர்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் திறமையை மட்டும் பயன்படுத்துங்கள்!
Efforts never fail..!

அவர்களது இந்த முயற்சி உலகத்தையே மாற்றிவிட்டது. கணிப்பொறிப் பயன்பாடில்லாத உலகம் இன்று சாத்தியமில்லை என்னும் அளவுக்கு அபாரமாக சாதித்துள்ளது பில்கேட்ஸ் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சிகள்

"ஒரு சாதனை எவ்வளவுக்கு எவ்வளவு பிரமிப்பாக உள்ளதோ அது அவ்வளவு கடினமானதும் கூட."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com