
இன்றைய காலகட்டங்களில் பய உணர்ச்சி முற்றிலும் உளவியல் சம்மந்தப்பட்டதே. கவலை, பயம், பதை பதைப்பு, அவமானப்படுத்தப் படுதல் எதிர்மறை கற்பனைகளினால் உருவானவையே. ஆனால் இந்த பயங்களைப் புரிந்துகொண்ட மாத்திரத்தில் அவை போய்விடாது.
பயம் என்பது வெகு உண்மையானது. பயம் என்பது வெற்றிக்கு முதல் எதிரி. பயங்களே மனிதர்களை சந்தர்ப்பங்களை உபயோகித்துக் கொள்வதிலிருந்து தடுக்குகிறது. பயமே உடல் வலிமையைக் குறைக்கிறது. பயமே நோய்களைக் கொண்டு வருகிறது. உடல் இயக்கத்தில் பெரும் இடையூறுகளைக் கொண்டு வருகிறது. வாழ்க்கையைக் குறுக்குகிறது. பேசவேண்டும் என்று நினைக்கும் வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவராமல் இருக்கச்செய்கிறது.
பயமே-அதாவது நிச்சயமற்ற நிலைமையும், நம்பிக்கையின்மையும் நாட்டிற்கு ஏன் பொருளாதார பின்னடைவைக் கொண்டு வருகிறது என்பதை விளக்குகிறது. பயத்தின் காரணத்தினாலேயே லட்சக் கணக்கானவர்கள் எதையும் சாதிக்க முடிவதில்லை என்பதையும் எந்த ஒரு சந்தோஷத்தையும் முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை என்பதையும் விளக்குகிறது.
உண்மையிலேயே பயம் என்பது அமானுஷ்ய வலிமையை கொண்டது. ஏதோ ஒரு வழியில் வாழ்க்கையில் அடைய நினைப்பதை அடையவிடாமல் தடுக்கிறது.
ஏதோ ஒரு வகையில் ஆட்கொள்ளும் இந்த பயம் ஒரு வகையான உளவியல் பூர்வமான தொற்று நோயே. எப்படி உடலில் ஒரு தொற்று நோய் ஏற்பட்டால் அதை உடனே கவனிக்க முற்படுகிறோமே. அப்படியே இந்தத் தொற்று நோயையும் குணப்படுத்தலாம். அப்பயத்தை குணப்படுத்த முறையான சிகிச்சைகள் இருக்கின்றன. நல் பலனளிக்கும் சிகிச்சைகள் இருக்கின்றன.
நிவாரண முயற்சிகளை எடுப்பதற்கு முன்பு, முதலில் தேவையான நம்பிக்கையை மனத்தில் உருவாக்கிக் கொள்ளுங்கள் எவருக்குமே பிறந்த அளவில் நம்பிக்கை தோன்றி வளர்ந்து விடுவதில்லை.
எவரெல்லாம் நம்பிக்கையை முகத்தில் பிரகாசிக் நடந்து கொள்கிறார்களோ, எவரெல்லாம் கவலைகளை விட்டொழித்திருக்கிறார்களோ, எங்கும் எந்த சூழலிலும் வெற்றி வாகை சூடி வருகிறார்களோ, அந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமா அடைந்தவர்கள்தாம்.
கடுமையான பிரச்னைகள் எதிர்நோக்கும்பொழுது, நாம் செயல்பட ஆரம்பிக்கும்வரை குழப்பத்திலேயே நீடிப்போம். நம்பிக்கை என்பது ஓர் ஆரம்பம். ஆனால் வெற்றி அடையவேண்டுமானால், நம்பிக்கை மட்டும் போதாது. செயல்பாடுகளில் சிரத்தையும் காண்பிக்கப்படல் வேண்டும்.
செயல்பாடுகள் தத்துவத்தை நடைமுறையில் காட்டுங்கள். அடுத்த முறை நீங்கள் பயத்தால் ஆட்கொள்ளப்படும்பொழுது, பெரிய பிரச்சினையோ அல்லது சிறிய பிரச்னையோ உங்களை முதலில் நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். 'இந்த பயத்தைப் போக்க நான் எவ்வகையில் செயல்பட வேண்டும்? என்று முதலில் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்கள் பயத்தைத் தனிமைப்படுத்துங்கள். அதைத் தொடர்ந்து உங்கள் செயல்பாட்டை ஆரம்பியுங்கள். உங்கள் பயத்தை விரட்டுங்கள். அதைத் தனிமைப்படுத்துங்கள். நீங்கள் எதைப் பற்றி பயப்படுகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானமாக அறிந்துகொள்ளுங்கள்.
அதற்குப் பின் பணியில் இறங்குங்கள். எந்த ஒரு பயத்தையும் போக்குவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது.
தயக்கம் பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பயப்பட வைக்கிறது. உடனுக்குடன் செயலில் இறங்குங்கள். வெகு தீர்மானமான உள்ளத்துடன் செயல்படுங்கள்.
ஆகவே, பயத்தை பயமில்லாமல் நம்பிக்கையோடு எதிர்கொண்டு செயல்பாட்டின் மூலம் செயலற்றதாக்கிவிடுங்கள்.