
நாம் ஒவ்வொருமே வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால், நாம் கூறும் பதில் என்ன தெரியுமா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பதில்தான். ஆனால் அந்த மகிழ்ச்சியை எப்படி கிடைக்கும் அதை எப்படி நாம் தேடவேண்டும். அது நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும். என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா? நம்முடைய இலக்கு மகிழ்ச்சி அதை நோக்கி பயணிக்கிறோம் அந்தப் பயணம் சரியான பாதையில் இருக்க வேண்டும்தானே...
எப்போதுமே சிலர் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். அவர்களுடைய வாழ்வியலை கொஞ்சம் பாருங்களேன். அவர்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்திதான் அந்த மகிழ்ச்சியை பெற்று இருப்பார்கள். சரி நாமும் அந்த மகிழ்ச்சியை பெற என்ன செய்யவேண்டும் என்றுதான் யோசிக்கிறீர்கள். ரொம்ப ரொம்ப சிம்பிள் இப்பதிவில் உள்ளவற்றை கடைபிடியுங்கள் போதும் மகிழ்ச்சி உங்களிடம் குடிகொண்டிருக்கும்.
1. ஒரு மனிதனிடம் என்னென்ன சொத்து இருக்கிறது என்பது சந்தோஷமல்ல, அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷமாகும்.
2. பணத்தால் உணவை வாங்கலாம், ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம், ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம், ஆனால் விசுவாசத்தைப் பெறமுடியாது.
3. ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் படைத்துள்ளார். சந்தோஷமாகத்தான்
4. சந்தோஷம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.
5. இல்லாத ஒன்றாக தாங்கள் ஆக முயற்சித்து தங்களால் முடியாத ஒன்றை செய்ய முயற்சிப்பவர்கள்தான் அதிருப்தியோடு இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்பதை அறிந்து செய்வதுதான் முக்கியம். வாழ்வின் முழுமைக்கு நம்மை நாமே அர்ப்பணித்து, வாழ்வு நம்மூடே செல்ல அனுமதிக்க வேண்டும்.
6. வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே, தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும், விவேகமுமாகும்.
7. வாழ்க்கையை எதிர்காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும், பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
8. வாழ்வு வாழ்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளின் மணி நேரத்தின் சதையில் இருக்கிறது என்பதை காலம் கடந்தே அறிகிறோம்.
9. வாழ்வதை ஒத்திப்போடுவதுதான் நமக்குள்ள கெட்ட பழக்கம். தொடுவானத்திற்கு அப்பால் உள்ள மந்திர மாய ரோஜாத் தோட்டத்தைப்பற்றி நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். இன்று நம் ஜன்னலுக்கு வெளியே இருக்கும் ரோஜாக்களை அறிவதில்லை.
10. பணத்தையும், வெற்றியையும் பேராசையுடன் தேடுவதால் துன்பமே மிஞ்சும். காரணம் இப்படிப்பட்ட வாழ்வு தங்களுக்கு வெளியே உள்ள பேராசைக்காரரோடு சம்பந்தப்படுவதால் இறுதியில் துன்பமான முடிவோடு நிற்கிறது.
11.பணத்தைச் சேர்ப்பது, அதிகாரத்தைச் சேர்ப்பது இவைகளால் வாழ்வுக்கு பயனில்லை. வாழ்வு இவை எல்லாவற்றையும் விட மேலானது.
12.சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன். வெறுமையான மனமே சந்தோஷத்தை அற்ப சுகங்களில் தேடுகிறது.
13. சந்தோஷத்தின் அடிப்படை நேர்மையின் அடிப்படையைப் போன்றதுதான். அது பொருட்களை சார்ந்ததல்ல. அது ஒருவருடைய ஆளுமையைச் சார்ந்தது.
14.உங்களை சந்தோஷப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பதைவிட காலம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது.
15. வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ, அடுத்த வருடமோ, நாம் இறந்த பின்போ வருவதில்லை.