
சந்தோசம், சந்தோசத்திற்குள் வருத்தம், வாழ்வில் துன்பம், துயரம் எல்லாம் நாம் செய்யும் செயல்களினால் பெறப்படுவதாகும். மனிதர்களுக்குள் உழைப்பும், உண்மையும் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். வெளியேதான் பந்தா இருக்கவேண்டும். இதுதான் வாழ்வாகும்.
வழிமுறைகளைப் பொறுத்துதான், கல்வியும், செல்வமும், வீரமும், இருக்குமென்று கூறமுடியாது. வாழ்வுக்கு இது மூன்றும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் தேவைப்படுகிறது. அதனை கவனமாக செயல்படுத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். வழிமுறை தெரிந்தவர்களுக்கு, எது வேண்டும், எதை போற்ற வேண்டும் எதை காட்டி எதை பெருக்கவேண்டும், எந்த இடத்துக்கு எது பொருந்தும் போன்றவைகளும் தெரியும்.
மக்கள் வாழ்வில் திணறாமல் வாழவேண்டுமானால் வாழ்வின் ஒரு பகுதியை பக்திக்கு ஒதுக்கி வைத்தே ஆகவேண்டும். குடும்பத்தில் ஒருவர் உரத்த குரலில் பேசினாலும் இன்னொருவர் மெதுவாக பேசுவது சாலச்சிறந்தது. ஒவ்வொரு கட்டங்களிலும் பிரச்னை இல்லாது பேசுதல் அவசியமாகும்.
ஒருவரோடு ஒருவர் பேசும் சத்தமும் மெதுவாக இருக்கவேண்டும். நேரடியாக பேசி, தேவையானதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுவதே சிறப்பானது. மனதில் நல்லதோ, கெட்டதோ, வேண்டியோ, வேண்டாமலோ, எதையாவது வைத்துக்கொண்டு பேசினாலும் குழப்பம்தான்.
வழிமுறை என்பது வாழ்வின் இருளை மாற்றுவதாகும். வாழ்வில் நல்லபடியாக சாப்பிடுவதே சந்தோசமான விஷயமாகும். ஆனால் சமையலில், சாப்பாட்டில் இது இது கண்டிப்பாகச் சேர்க்கவேண்டும் என்பது முக்கியமாகும். வாழ்வின் வெற்றிக்கு வழி அன்பேயாகும். இதுபோன்று முன்னேற்றத்திற்கு சில திறமைகளை அவ்வப்போது வெளிக்கொணர வேண்டியது அவசியமாகும். வாழ்வில் வழிமுறைகளைக் கையாளுவது என்பது தாங்கமுடியாத கஷ்டங்கள் வராமல் இருக்கவேயாகும். இதில் பிஞ்சு முகம் பார்த்து சந்தோஷப்படுவது மக்கள் ஒவ்வொருவரின் பெரிய சந்தோஷமாகவும்.
வாழ்வில் கணவரும், மனைவியும் ஒருவரை ஒருவர் பாதுகாப்பதுதான் மிகவும் உத்தமமானதாகும். வாழ்வில் யார் எதை கூறினாலும் கேட்டுகொண்டு கடைசியாக நம் சொந்த மூளைக்கு இடம் கொடுப்பது நல்லது. அனுபவிப்பு என்பதுதான் வாழ்வது. ஒரு வேலையை பற்றி நாம் நினைக்கும்போது கண்டிப்பாக இவ்வளவு நேரம் தேவை எப்படி முடிக்கலாம் என்று நினைத்து செயல்படுவதே முக்கியம்.
வாழ்வில் பலம்தான் தேவை. பணவரவு சிறிதாயிருந்தாலும் உடல் நலத்தை பேணுவது நல்லது. அதன் பின் அமைதியை தேடுவது நல்லது. சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் இடம் தரித்திரமானது. ஒரு வேலை அறிவு, ஆற்றல், அழகு ஆகிய மூன்றும் கலந்து உருவாக்கப்படுமாயின் அந்த வேலை மிகவும் சிறப்புடையதாகிறது.
மாத வருமானம் என்பதையே அனைவரும் விரும்புவதாகவும். நிரந்தர வரும்படியை உருவாக்குவதே புத்திசாலித் தனம். இதுதான் அனைவரையும் கொடிய பட்டினியிலிருந்து பாதுகாப்பதாகும்.
வாழ்வில் எப்போதும் ஒருவருக்கொருவர் சரியையே, நல்லவற்றையே உணர்த்த வேண்டும். அன்பையே உணர்த்துங்கள். அதுவும் பலவிதமான சக்தியை கொடுப்பதாகும்.