அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் பேசுவதை எப்படி எளிதாக்கலாம்?

Motivational articles
When talking to new people
Published on

றிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் பேசுவதற்கு சிலர் தயங்குவார்கள். பேசவேண்டும் போல் தோன்றும் ஆனால் தயக்கம் அதனை தடுத்துவிடும். புதிய நபர்களிடம் பேச ஆரம்பிக்க வேண்டும் என்றால் சமீபத்திய நிகழ்வுகள் பற்றி மெல்ல பேச்சைத் தொடங்கலாம். அல்லது இன்னிக்கி ரொம்ப வெயிலாக இருக்கே என்று பேச்சை மெதுவாக ஆரம்பிக்கலாம். அவர்கள் நம் பேச்சில் ஆர்வம் காட்டினால் மெல்ல பேச்சைத் தொடரலாம். அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து மேலும் பேச்சை வளர்க்க ஆரம்பிக்கலாம்.

புதிய நபர்களுடன் பேசும்பொழுது ஒரு சிறு புன்னகையுடன் பேசுவது அவர்களை அணுகுவதற்கு எளிதான முறையாகும். நாம் நம்பிக்கையுடன் பேசுவது பிறருக்கு நம்மைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணும். அத்துடன் அவர்கள் தரும் பதில்களை கவனமாக கேட்பதும், அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பதும் பேச்சை வளர்க்க உதவுவதுடன், சுவாரஸ்யமாகவும் ஆக்கும். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ளவும் தயங்காமல் பேச்சை தொடங்க இது உதவலாம்.

சில நேரங்களில் நாமே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காமல் அமைதியாக இருந்து அவர்கள் பேசுவதை கேட்பதும் ஒரு நல்ல முறையாகும். அவர்களைப் பேசவிட்டு குறுக்கே பேசாமல், அவர்களுடைய கருத்துகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்தால்  எதிர்தரப்பினர் நம்முடன் பேச்சை வளர்க்க விருப்பப்படுவார்கள். புதிய நபர்களுடன் பேசும் பொழுது அவர்களுடைய கண்களைப் பார்த்து பேசுங்கள். அது நாம் உண்மையிலேயே அவர்களுடன் பேச ஆர்வமாக உள்ளோம் என்பதைக் காட்டும். அத்துடன் அவர்கள் நம்மை நம்புவதற்கும், நம்முடன் தொடர்புகொள்ள விரும்புவதற்கும் இது பெரிதும் உதவும்.

இதையும் படியுங்கள்:
காற்றாடியைப் போலத்தான் நம் வாழ்க்கையும்..!
Motivational articles

இருவருக்கும் பொதுவான ஆர்வங்கள் ஏதேனும் இருந்தால் அது பேச்சை வளர்க்க உபயோகமாக இருக்கும். எனவே ஒருவருக்கொருவர் ஏதாவது பொதுவான விஷயம் இருக்கிறதா என்று பார்த்து அந்த பொதுவான ஆர்வங்களைத் தேடினால் பேசுவதற்கும், பேச்சை தொடர்வதற்கும் எளிதாக இருக்கும். அவர்களின் பின்னணி என்ன, அவர்களுடைய ஆர்வங்கள் என்ன, அவர்கள் என்ன செய்கிறார்கள் போன்ற கேள்விகளை கேட்கலாம். அவர்கள் தரும் பதில்களில் இருந்து நம்மால் பேச்சைத் தொடரமுடியும்.

முக்கியமாக அதிகம் அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் பேசும் பொழுது பதட்டமோ, சீரியஸான உணர்வோ தேவையில்லை. நாம் நாமாக சாதாரணமாகவே இருக்கலாம். அவர்களை ஈர்க்கும்  விஷயங்களைப் பேசலாம். அத்துடன் அவர்கள் பேசும்போது அதிக ஈடுபாடு காட்டலாம். இதன் மூலம் பேச்சு இயல்பாக, இயற்கையாகவே தொடரும். அத்துடன் பேசும் நபரைப் பற்றி நல்ல விஷயங்களை, நேர்மறையான விஷயங்களைச் சொல்லலாம். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதன் மூலம் பேச்சு தொடர வாய்ப்பு அதிகமாகும்.

அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் பேசும்போது தயங்காமல் இருப்பது நல்லது. அத்துடன் சூழலுக்கு ஏற்ப பேசத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்திற்கு தகுந்தவாறு பேச்சை அமைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு ஒத்த கருத்துடையவர்களிடம் நம்மால் இயல்பாக பேசி பழகி வட முடியும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கை குலுக்கும் போதே நம்மைப் பற்றிய நல்ல எண்ணம் தோன்றும் வகையில் நம்பிக்கையை அவர்களுக்குள் விதைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!
Motivational articles

சில நபர்களுடனான பேச்சு வெகு சீக்கிரமே முடிவடைந்து விட வாய்ப்புள்ளது. அந்த உரையாடலை மேலும் நீட்டிக்க அந்த நபர்களுக்கு பிடித்தமானவற்றை தெரிந்துகொண்டு அதை பற்றி பேசலாம். அவருக்கு கவிதை எழுதுவதில், இசையில் ஆர்வம் இருக்கும் என்றால் அந்த ஆர்வம் அவருக்கு எப்படி வந்தது என்று தொடங்கி அது தொடர்பான விஷயங்களைப் பேச அவர்களின் விருப்பமான ஒருவரில் நாமும் ஒருவராக மாறிவிடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com