இந்த குணங்கள் இருந்தால் வெற்றி நிச்சயம்! - ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்!

Good qualities are natural.
Motivational articles
Published on

ம்மிடம் நல்ல குணங்கள் இயற்கையாக இருப்பது நல்லது. அந்த குணங்கள்  நமது பெற்றோா்கள் சொல்லிக்கொடுத்த பண்புதான் என்றாலும், அதை உள் வாங்கி அதனை சரிவர கையாள்வது நமது கையில்தான் உள்ளது. இயற்கையும் அப்படித்தான். 

புளியங்காய்க்கு புளிப்பு இயற்கையாய் இருக்கவேண்டும், அதற்காக புளிப்பு ஊசி போடவாமுடியும். அதேபோல பாகற்காய்க்கு கசப்பு இயற்கையாய் அமைய வேண்டும், அதற்காக  கசப்பு ஊசியா போடமுடியும். இப்படி பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோலத்தான் பொியவர்கள், அனுபவம் மிகுந்தவர்கள், அறிவாளிகள், ஆசிாியர்கள் ,சொல்லிக்கொடுக்கும் நல்ல பண்பாடுகள், நல்ல குணநலன்கள், இவைகளை நாம் நம்முடைய  மனதில் பதியம் போடுவதே நமது உயர்வுக்கான வழியாகும்.

நமது வாழ்க்கை எனும் பயணம் நோ்மறையாக, ஒளிவு மறைவில்லாத, மனிதாபிமானத்துடன் கூடிய, மனசாட்சிக்கு மதிப்பு கொடுக்கக்கூடிய, பொறாமை குணம் இல்லாத, அதிக ஆசைப்படாத, பாதையாய் வகுத்துக்கொள்வதே லட்சியமாகக் கொள்ளவேண்டும்.

அதுபோன்ற நிகழ்வுகளில் நமக்கென இலக்கை நிா்ணயித்து, நாம்  செல்லும் பாதையில் கரடுமுறடான தடைகள் வந்தாலும், நோ்மை எனும் நெறி காட்டும் பாதையை வகுத்து, அதில் பயணம் செய்யவேண்டும்.

அதுபோன்ற பயணத்தில் தங்கு தடை, தாமதம் இல்லாமல், பயணித்தோமேயானால் இலக்கை எளிதில் வென்றுவிடலாம். இலக்கில்லா பயணம், விளக்கில்லா இருட்டு அறையில் பாடம் படிப்பதுபோல அமையுமே!

இதையும் படியுங்கள்:
மனித மனங்களும் அறச்செயல்களின் வலிமையும்!
Good qualities are natural.

அது எப்படி சாத்தியமாகும். அது போலவே இலக்கை நிா்ணயம் செய்யுங்கள். தடையை விலக்கிவிடுங்கள். அதுவே சிறப்பான வாழ்விற்கான வழிகாட்டி. அதேபோல யாரையும் எந்த தருணத்திலும் ஏமாற்றாமல் வாழ்ந்து காட்ட பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு, அதன்படி வாழ்வின் படியில் ஏறுங்கள்.

வாழ்க்கை எனும் பரமபத விளையாட்டில் தாயம் போடுங்கள்,

ஏனி மேலே ஏற்றிவிடும், ஏற்றி விட்ட ஏனியை எட்டி உதைத்தால், தொடரும் வாழ்க்கை விளையாட்டில்  மறுபடியும் தாயமே விழுந்தால் சரசரவென பரமபத பாம்பு இறக்கிவிட்டுவிடுமே!

இந்த சூட்சம விதி புாிந்து வாழக்கற்றுக்கொண்டாலே வசந்தம் வாசல் வழியாக வந்து நிரந்தர இடம் பிடித்துவிடும்.

இதை புாிந்து கொண்டவர்களே புத்திமான், புாியாதவர்கள் மாரீச மான்தானே! ஆக ஏமாற்றிப் பிழைக்கும் வாழ்க்கை முறை, கொள்கை,  நமக்கு தேவையில்லாத மாசு. அதைத்தூற வீசுங்கள்மாசு விலகி மனது சுத்தமாகிவிடும்.

அதேபோல சில உறவுகள் ,நட்பு வட்டங்கள், நமக்கு போலியாக   கொடுக்கின்ற   நல்லவன், வல்லவன், பரோபகரி, நோ்மையானவன், என்ற அங்கீகரிக்கப்படாத சுயநல பட்டங்கள் எல்லாம் அவர்களிடம் நமது உறவு முறியாதவரைதான். அதற்குப் பிறகு அந்தப்பட்டங்கள் செல்லாதவைகள் ஆகிவிடுமே! 

பொதுவாக நாம் தற்பெருமைக்கு ஆசைப்படவேகூடாது. ஏமாறும் வரை ஏமாற்றும் நபர்களுக்கு பஞ்சமே இல்லையே!

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கான வழி: உங்களை நீங்கள் அறிந்து கொள்வது!
Good qualities are natural.

ஆக பழகும்போதே நல்லவன், கெட்டவன், என தரம் பிாித்து வாழ்வதே புத்திசாலிகளுக்கு அழகு. எந்த தருணத்திலும் நமது புத்தியைக்கொண்டு சுயம் இழக்காமல் வெற்று ஆடம்பர மாயைகளுக்கு இடம் கொடுக்காமல் நோ்மையான பாதையில் பயணம் செய்யுங்கள். வெற்றி மீது  வெற்றி வந்து நம்மைச்சேரும், அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் இறைவனேயே சாரும்.

புாிதல், அறிதல், விவேகம், இவை மூன்றும் நமது வாழ்க்கைக்கான வழிகாட்டியே அதை புாிந்து செயல்படலாமல்லவா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com