
நாம் பார்க்கும் பார்வையில்தான் நம் வாழ்க்கையே அமைந்திருக்கிறது. 'உண்மைகளைவிட முக்கியமானது வாழ்க்கையை எப்படி பார்க்கிறோம் என்பதுதான் என்கிறார், கார்ல்மென்னிங்கர் என்ற அறிஞர்.
'சுத்தி கணணாடியை உடைக்கும் ஆனால் அதுவே எஃகுத் தகடுகளை ஒன்றாக இணைக்கும்' என்று ஒரு ரஷ்ய பழமொழி உண்டு. இது போன்றதுதான் சந்தர்ப்பம்.
நாம சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். எதையும் பார்க்கும் கோணத்தில் இருந்து மாறுபட்டு சிந்திக்கும் போது அந்தப் பொருளின் தனித்தன்மையும் முக்கியத்துவமும் நன்கு புலப்படும். எனவே அறிஞர்கள் மற்றவர்களைவிட வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகளை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கலிலியோவிவிற்கு அப்போது வயது 17. அவர் ஒருநாள் மாலை நேரத்தில் கோயிலுக்கு வழிபாட்டிற்குச் சென்றார். அப்போது அங்கு கோவிலின் மேலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு விளக்கு முன்னும் பின்னும் ஆடி அசைந்து கொண்டிருந்தது. அதன் வேகமும் அது சென்றுவரும் தொலைவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும் அது சென்றுவரும் நேரத்தின் கால அளவு மட்டும் சமமாக இருந்ததை கலிலியோ தம் நாடித்துடிப்பால் கண்டறித்தார். அந்த கொண்டு அவர் ஸ்டெதஸ்கோப், பல்ஸ்மீட்டர், சுவர் கடிகாரம் ஆகியவற்றை கண்டுபிடித்தார்.
அப்போது நியூட்டனுக்கு வயது 23. அவர் விடுமுறையைக் கழிப்பதற்காக உல்ஸ்தோப் என்னும் ஊருக்குச் சென்றார். மாலைப்பொழுது பூங்காவில் அமர்ந்திருந்தார்.
திடீரென்று ஆப்பிள் பழம் கீழே விழுந்தது அது ஏன் மேலே விழவில்லை என்ற கேள்வி நியூட்டன் மனதில் எழுந்தது. அதன் விளைவாக அவர் கண்டு பிடித்ததுதான் புவியீர்ப்புத் தத்துவம்.
சி.வி.ராமனுக்கு 43 வயது நடந்து கொண்டிருந்தபோது கழகங்களின் ஒரு மாநாடு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்கு கப்பல் மூலம் இங்கிலாந்து சென்றார். பிரயாணத்தில் கப்பலின்மேல் தளத்தில் நின்று கொண்டு அவர் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் உள்ளத்தில் வானமும் பனிப்பாறைகளும் கடல் நீரும் என் நீல நிறமாக இருக்கின்றன? என்ற கேள்வி எழுந்தது அதன் பயனாக ராமன் விளைவு என்ற அறிவியல் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி அறிஞர்கள் பலருக்கு நிகழ்ச்சிகள் உதவி செய்திருக்கின்றன. அவர்கள் நுனிப்புல் மேய்வதுபோல் இல்லாமல். ஒரு தெளிவு ஏற்படும் வரையில் அதைப் பற்றிய உண்மைகளைத் தேடிக் கொண்டேயிருந்தார்கள். அதனால் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.
கேட்கும் செய்தியிலும், பார்க்கும் பொருளிலும் ஒரு தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காரண காரியங்களை நம்மால் கண்டறிய முடியும்.
'நல்ல சந்தர்ப்பங்களை நான் உண்டுபண்ணுகிறேன்' என்று வெற்றியாளர் பெர்னாட்ஷா கூறுகிறார்.
வாழ்க்கையில் அடுக்கடுக்கான சந்தர்ப்பங்கள் வந்து போகின்றன. வெற்றி பெறுபவன் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.