
இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் நாம் நினைத்தது நடக்கவில்லையே? என்ற ஆதங்கம்தான் நிறைய பிரதான காரணங்கள். இதனை தூக்கி எறிந்தால் வெற்றி நிச்சயம். அது என்ன என்று பார்ப்போம்.
1.கோபம்.
ஒரு எதிர்பாராத விபத்து யாரோ செய்த தவறு என்ற சூழலிலும் கோபம் தலைக்கேறும். எங்கோ எழும் கோபத்தை இயலாமையால் மனதுக்குள் அனுப்பி வைத்து வீட்டில் காட்டுவதும் தவறு. குழந்தைகள் விளையாடப் போகும் இடத்தில் பக்கத்து வீட்டுகுழந்தைகள் மீது சீற்றம் காட்டலாம். அந்த கோபத்தை சுமந்து கொண்டு வீட்டுக்குப் போகும் அவை, அந்த வீட்டில் அதை சொல்லி வைக்கும். கோபம் தொற்று நோயை விட அபாயகரமானது. அதை பரப்பும் ஆபத்தான ஆசாமியாக நீங்கள் மாறிவிடாதீர்கள். கோபத்தை குறையுங்கள்.
2.சோகம்.
வாழ்க்கையில் முழுக்க மகிழ்ச்சியை மட்டுமே பார்த்தவர்கள் என யாரும் இல்லை. வேலையில இழப்பு வியாபாரத்தில் நஷ்டம் உறவுகளில் துயரம் என சந்திக்காத மனிதர்கள் இல்லை வாழ்வில் சோகத்தை தரக்கூடிய நிகழ்வுகள் நிறைய நடக்கும் வாழ்க்கை என்பது இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த கலவை .பழைய வரலாற்றை நினைக்காமல் ரசனையான விஷயங்களில் கவனத்தை செலுத்தி சோகத்தை துரத்துங்கள்.
3.கவலை.
ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்பே இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது? என்று சிலர் கற்பனை செய்து கொண்டு கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். கவலையிலிருந்து விடுபட முதலில் உங்களுக்கு சுய விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஒரு சம்பவம் நடந்த சூழ்நிலையை ஆராய்ந்து ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? அதற்கு மாற்று வழி என்ன? இதை எப்படி சமாளிப்பது? நம்முடைய பங்கு என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொண்டாலே கவலைகள் பறந்தோடி விடும். கவலை தரக்கூடிய சூழலில் இருந்து விடுபட கற்றுக்கொள்ளுங்கள்.
4.தாழ்வு மனப்பான்மை.
பலருக்கும் இருக்கிற பொதுவான பிரச்னை இது. தங்களைக் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டு 'நம்மால் எதுவும் முடியாது' என்ற மாயையில் மூழ்கிக் கிடப்பார்கள்.சிலர் தாழ்வு மனப்பான்மையை போக்க நீங்கள் செய்ய வேண்டியது பிறருடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்ப்பது.
யானைக்கு அழகான துதிக்கை இருக்கிறேதே ..... நமக்கும் அது போல் இல்லையே? என முதலை கவலைப்பட்டால் எப்படி இருக்கும். துதிக்கை இருந்தால் தண்ணீரில் அதனால் ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது. எல்லோருக்கும் இது பொருந்தும். உங்களால் முடிகிற ஒரு விஷயத்தை நூறு சதவீதம் முழுமையாக உங்களால் செய்ய முடியும் என்ற நேர்மறையான எண்ணத்தை வளரவிட்டால் தாழ்வு மனப்பான்மை வராது.
5.குற்ற உணர்வு.
ஆபீஸ் புறப்படும் அவசரத்தில் ஆசையாக பேச வந்த மகன் அல்லது மகளை திட்டிவிட்டு அவர்கள் கண் கலங்கினால் அந்தக் குற்ற உணர்ச்சியில் சிலர் என்னால் வேலை செல்ல முடியலை என்று சிலர் புலம்புவார்கள் தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு இருந்தால், உடனே மனம் திறந்து மன்னிப்பு கேட்பதில் தவறு கிடையாது. இனி இப்படி நடக்காது என்று சொல்லிவிட்டு ஆபீஸ் கிளம்பினால் அதன் பின் குற்ற உணர்வு உங்கள் மனதில் குடியிருக்காது இதை செய்யாமல் சும்மா மனதில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தால் எதிர்மறை எண்ணங்கேளே தோன்றும். குற்ற உணர்வை தூக்கி எறியுங்கள்.
6.புரிதல் இல்லாமை.
யாரோ ஒருவரிடம் உதவி கேட்க போகிறீர்கள். ஆனால் மனதில் தயக்கம் இருக்கிறது. கேட்பதற்கு முன்பு அவர் நமக்கு எங்கே உதவி செய்யப் போகிறார் என்று நீங்களாகவே முடிவெடுத்து கேட்காமல் இருந்து விடுவீர்கள்.
உதவ வேண்டும் என்ற இந்த எண்ணம் அவருக்கு எப்படி இருக்கும்? முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள் அவரிடம் வாய் திறந்து கேட்காமலேயே நமக்கு யாரும் உதவவில்லையே? என்று மனதுக்குள் புலம்பினால் பிரச்னை தீர போவதில்லை. அதற்கு நண்பர்களை நீங்கள் புரிந்துகொள்ளுதல் மிக அவசியம்.
7. பொறாமை.
அவர்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறேதே? நாம ராசியில்லாத ஆளா போயிட்டோமே? என்று நண்பர்கள் மீது சிலர் பொறாமைப்படுவார்கள். இதுவும் ஒரு வகையான எதிர்மறை சிந்தனைதான் ஒருவர் சாதனை செய்யும்போது நாமும் அதைப்போலவே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்கு தோன்ற வேண்டும். அவன் மட்டும் செய்து விட்டானே? என்று சதா நினைத்துக் கொண்டிருந்தால் மன அழுத்தம்தான் ஏற்படும் பொறாமை வளர்ந்து நண்பரை எதிரியாகக் கருதுகிற நிலைமை வந்துவிடும். எனவே பொறாமையை தூக்கி எறியுங்கள்.
இந்த ஏழு உணர்வுகளுக்கும் விடை கொடுக்க முடிவு செய்து விட்டீர்களா? இனி உங்கள் பாதையில் நீங்கள் சந்திக்க போது வெற்றிகளை மட்டுமே!