
இறைவன் அனைவரையும் சில நேரங்களில் சமமாய் படைக்கிறான். அவரவர்கள் முன்னோா்கள், மற்றும் பெற்றோா்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்புகளில் வித்யாசம் ஏற்படுவதும் (குறைபாடுகளுடன்) சகஜமானதே!
சரி அந்த மாதிாி இறைவன் கொடுத்த வாழ்வில் நமது மனங்களில், நல்ல மனம், தேவையில்லாத தூய்மையில்லாத குணங்களும் அமைந்துவிடுகின்றன. நல்ல எண்ணங்களும் தூய்மையான செயல்பாடு களையும் நாம் வளரும்போதே கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நமது பெற்றோா்களின் நல்ல பழக்க வழக்கங்களும் சரியாக அமையவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் மெற்றோா்கள் வளர்ப்பு சரியாக இருக்கவேண்டும்.
சில குழந்தைகளுக்கு தானாகவே நல்ல எண்ணத்துடன் கூடிய சிந்தனாசக்தி உண்டு. சிலரிடம் அது மிஸ்ஸிங். பொதுவாக நல்ல பண்பாடுகளை வளர்த்துக்கொள்ளுங்கள். கல்விச்சாலைகளும் இதில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றன. பொியவர்களை, ஆசிாியர்களை, அடுத்தவர்களை மதிக்கும் குணம், நேசிக்கும் மனப்பக்குவம் ஆரம்பத்திலேயே நம்மிடம் இருக்கவேண்டும்.
ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெறமுடியும்.
அன்பு இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பான்.
கருணை இருக்கும் இடத்திலும் கடவுள் இருப்பான்.
நல்ல லட்சியம் கொண்ட இடத்தில் லட்சுமி தேவி குடியிருப்பாள்.
வளரும்பருவத்திலேயே பொறாமை குணத்தை கடைபிடிக்க வேண்டாம்.
அனைத்து உயிா்களிடத்தும் அன்பு காட்டுங்கள்.
கற்ற கல்வி நமக்கு எப்போதும் கைகொடுக்கும்.
பள்ளியில் ஆசிாியரிம் நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
தாயிடம் அன்பை கற்றுக்கொள்ளுங்கள்.
தந்தையிடம் பண்பாடுகளை கற்றுக்கொள்ளுங்கள்.
வாலிப வயதில் வீரமும் விவேகமும் கற்றுக்கொள்ளுங்கள்.
கல்லூாியில் படிப்பினைக் கற்றுக்கொள்வதோடு, படிப்பிணையையும் கற்றுக்கொள்ளுங்கள். அந்த நேரம் மனித நேயம் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவருக்கு உதவும் நல்ல பண்புகளை கற்றுக் கொள்ளுங்கள். அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் திறமையை வளா்த்திடக் கற்றுக்கொள்ளுங்கள்.
நோ்மையாய் வேலை பாா்க்க கற்றுக்கொள்ளுங்கள் இளமைப்பருவத்தினை பயனுள்ள வகையில் வாழ கற்றுக்கொள்ளுங்கள் பெற்றோா் பாா்த்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மனைவியை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஆணாதிக்கம் செலுத்தும் பழக்கம் வேண்டாம். பெண்மையை மதியுங்கள், மனைவி வந்ததும் பெற்றோா்களை வெறுக்காத குணத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இளமை போனால் திரும்பாது அதை வீணாக்காமல் பயனுள்ளதாக பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வில் முன்னேற கற்றுக்கொள்ளுங்கள். பெறாமை குணம் தவிா்பதை கற்றுக்கொள்ளுங்கள். வஞ்சக எண்ணம் குடியேறா வகையை கற்றுக் கொள்ளுங்கள். உழைப்பை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். சிக்கனமாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
பொன்பொருள் சேமிக்கக்கற்றுக்கொள்ளுங்கள். நோ்மறை சிந்தனையை வளர்த்திட கற்றுக்கொள்ளுங்கள்.
எதிா்மறைசிந்தனை விலக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.
வயோதிகம் நமக்கும் வரும் என்பதை வாழும் போதே கற்றுக்கொள்ளுங்கள். வாய்ப்பைப் பயன்படுத்தி வளமாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள். உறவுகளை வளா்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
நல்ல நட்புகளை சீா்தூக்கிப் பாா்க்க கற்றுக் கொள்ளுங்கள்.
மனசாட்சி மாறாநிலையை கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுகளை கற்றுக்கொள்ளுங்கள்.
சமுதாயத்தில் மதிப்பு கொடுத்து மதிப்பு வாங்க கற்றுக்கொள்ளுங்கள். நமக்கும், நம்மைக் கடந்துபோன இளமை திரும்பாது, வயோதிம் வரும், எனவே வயதான காலத்தில் வசிக்கும் பெற்றோா்களின் மனம் வருந்தாமல் அவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
எந்த நிலையிலும் கணவன், மனைவி இருவரும் அவர்களை அநாதைகளாய், முதியோா் இல்லங்களில் சோ்த்துவிடும் பழக்கத்தை மட்டும் கற்றுக்கொள்ளவே கற்றுக்கொள்ளாதீா்கள். பாவத்தை சோ்க்கவேண்டாம்.
நாம் சேமித்த பணம் சந்ததியை காப்பாற்றும். மாறாக சோ்த்து வைத்த பாவம் அவர்களை காப்பாற்றவே காப்பாற்றாது.
அதுதான் ஆரம்பத்தில் கட்டுரையில் சொன்னதுபோல இறைவன் நமது பிறப்பில் நமக்கு உணர்த்தும் (குறைபாடுகளுடன் பிறப்பு) என்பதே நமக்கான பாவ புண்ணிய கணக்கு பாடமாகும்.