
உங்களை மற்றவர்களைவிட ஒரு படி உயர்வாகக் காட்ட உதவும், உங்களிடம் இருக்க வேண்டிய, ஏழு வகையான திறமைகள் என்னென்ன தெரியுமா?
நாளுக்கு நாள் மாற்றம் கண்டு கொண்டிருக்கும் தற்போதைய உலகில் தொழில்நுட்ப அறிவு பெற்றிருப்பது மட்டும் போதுமானதாகாது. மாற்றங்களுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும் திறன், மனதில் பட்டதை துல்லியமாக வெளிப்படுத்த உதவும் பேச்சுத்திறன், நெருக்கடியான நேரங்களில் யோசித்து முடிவெடுத்தல் போன்ற குணங்களும் உங்களை தனித்துக்காட்ட உதவும். வாழ்வில் வெற்றி பெறவும், பெற்ற வெற்றியை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ளவும் தேவையான முக்கியமான 7 வகை திறமைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.வாய் வழியாக அல்லது எழுத்துருவில் மனதில் உள்ளதை வெளிப்படுத்த முழுத்திறன் பெற்றிருப்பது என்பதானது, பிறருடன் கலந்து பேசி முடிவெடுக்கவும், தொழில் முறையில் ஈமெயில் அனுப்பவும், உங்களைப் பற்றின உண்மைகளை தெளிவாக வெளிப்படுத்தவும் உங்களுக்கு உதவி புரியும். இது நீங்கள் சம்பந்தப்பட்ட துறையில் உங்கள் மீதான நம்பிக்கையை உயர்த்தும்.
2.சவால்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றை அணுகும் முறையில் உள்ள வேறுபாடு கவனத்தை ஈர்க்கும். பிரச்னைகளை யோசித்து, பகுத்தாராய்ந்து, நெருக்கடிகளை சமாளித்து, விரைவில் நல்லதொரு தீர்வு காணக்கூடியவரை, எல்லோரும் எப்பொழுதும் விரும்பி ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பர்.
3.தன்னுடைய மற்றும் பிறரது உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் செய்யலாற்றுதல் உங்களின் தலைமைப் பண்பு அதிகரிக்கவும், மற்றவர்களுடனான உறவை பலப் படுத்தவும், கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணவும் உதவி புரியும். அதிகளவு EQ உள்ளவர்களால் மட்டுமே தன் குழுவை திறமையுடன் முன்னெடுத்துச் செல்லவும் உடனுக்குடன் முடிவுகளை எடுக்கவும் முடியும்.
4.புதுப்புது தொழில் நுட்பம் மற்றும் தொழிற்சாலைகளின் வரவால் அதிகளவிலான புதுப்புது விஷயங்களைக் கற்றுத் தெளிவதும் அவற்றுடன் கை கோர்த்துப் பயணிக்கத் தயாராவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தைரியமானவர்கள் களத்தில் இறங்கலாம். பயந்தவர்கள் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்பதே இன்றைய சூழ்நிலை.
5.வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை திறம்படச் செய்து முடிப்பது உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும் உதவும். சரியான முறையில் திட்டமிட்டு, திட்டமிட்டபடி செயல்புரிந்து வேலைகளை முடிப்பது குறைந்த உழைப்பில் அதிக பலன்பெற உதவும்.
6.உங்களின் தனிப்பட்ட திறனையும் உழைப்பையும் மட்டுமே மனதில் வைத்து செயல் புரியாமல், உங்களைப் போன்ற ஒத்த திறனுடைய வேறு சிலருடனும் பலமான தொடர்பை உண்டுபண்ணிக் கொள்வது மிக அவசியம். அதன் மூலம் நீங்கள் புதிய வாய்ப்புகளும், தொழிலில் முன்னேற்றமும் பெறமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
7.வாழ்க்கையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டிருப்பவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை. எனவே தொடர்ந்து புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், வகுப்புகளுக்கு சென்று புதிதாக அறிமுகமாகியுள்ள தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வதன் மூலமும் அறிவை வளர்த்துக் கொண்டே இருப்பது காலத்தின் கட்டாயம்.