

ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும் வேலையிலும், தொழிலிலும், வியாபாரத்திலும், வாழ்விலும் வளர்ச்சி அடையவேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் வேகமாக வளர்ச்சி அடைய செய்ய வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. எதைச் செய்தாலும் நேசித்து, தன்னுடைய தனித்திறமையை காட்டுவதோடு, எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தன்னுடைய அடையாளத்தை தனியாக உணர்த்துங்கள் .இது உங்களை முதன்மையானவர் எனக்காட்டும்.
2. வெற்றி கதைகளில் இருந்து கற்றுக்கொள்வதைவிட, தோல்வி கதைகளில் இருந்து நிஜமான படிப்பினையை, அதாவது ஏன் தோற்றார்கள்? என்பதை தெரிந்து கொண்டால் அதை செய்யாமல் தவிர்க்க முடியும் என்பதால் உங்கள் துறையின் தோல்வி கதைகளைதேடி படியுங்கள்.
3. பெரிய இலக்கோ, சிறிய இலக்கோ எது என்றாலும் அதற்கான சரியான செயல் திட்டத்தோடு உழைப்பது இலக்கை அடைய எளிதில் உதவி புரியும்.
4. நீங்கள் கனவாக அடைய நினைக்கும் விஷயத்தை முழுமையாக செய்யும்போது வெற்றி அடைவீர்கள்.
5. கனவில் மிதந்தபடி இல்லாமல் நிஜ வாழ்வில் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
6. உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழில் வாழ்க்கைக்கும் தன்னம்பிக்கை வளர்க்கும் நூல்களை படிப்பதோடு அதை பொருத்திப் பார்க்கவேண்டும்.
7 எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் இருக்கும் என்பதால் அதனால் மனஉளைச்சல் அடையாமல் மனிதர்களை புரிந்து கொண்டு பழகுவது முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.
8. அடுத்தவர்கள் உங்களை மதிப்புடன் பார்க்க எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாக இல்லாமல் சில விஷயங்களை புதிராகவே வைத்திருங்கள்.
9. நீங்கள் செய்யும் வேலை, தொழிலுக்கு தேவையான திறன்களை கற்றுக்கொள்வதோடு, அதற்கான பயிற்சிக்கு நேரம் செலவிட்டு, ஆர்வம் காட்டுவதோடு மற்றவர்களை விட அதிகமாக கேள்வி கேட்டு கற்றுக்கொள்ள வேண்டும்.
10. ஒட்டுமொத்த வளர்ச்சியை தனிப்பட்ட ஒழுக்கமே தீர்மானிக்கிறது என்பதால் எத்தகைய சூழ்நிலையிலும் ஒழுக்க நெறியில் இருந்து தவறக்கூடாது.
11. உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதோடு அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்போது பல புது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
12. எந்த வேலை செய்தாலும் 100% உழைப்பை கொடுப்பது முன்னேற்றத்திற்கான வழியாகும். அதேசமயம் தவறான பாதையில் செல்கிறோம் என்று தெரிந்தால் தயக்கமின்றி திரும்பி வரவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
13. உங்கள் துறையின் ஜாம்பவான்களின் அறிமுகம் மற்றும் அவர்களுடன் நேரம் செலவிடுவதால் அவர்களது வார்த்தைகள் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
14. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் 70 ஓடு பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் செலவு செய்வது வளர்ச்சிக்கு வித்திடும்.
15. உடல் ஆரோக்கியம், மனஆரோக்கியம் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாது என்பதால் உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்யும் நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பது ஊக்கத்திற்கு வழிவகுக்கும்.
மேற்கூறியவற்றை செய்யும்பொழுது ஒருவர் தாங்கள் நினைத்த வேலையிலும், தொழிலிலும் வாழ்விலும் விரைவான முன்னேற்றத்தை அடையலாம் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.