
பேசுவது ஒரு கலை. நயம்பட பேசி காரியத்தை சாதித்துக்கொள்ள ஒரு சிலருக்கு கைவந்த கலை.
பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்வது பற்றி சில தகவல்களை காண்போம்.
பேசும்பொழுது தட்டுத், தடுங்காமல் பேச தனி தன்னம்பிக்கை வேண்டும். இதற்கு மனஉறுதியும், இடை விடா பழக்கமும் உதவி செய்யும்.
பொருள்பட பேசுவதற்கு தயார் செய்துக்கொள்ள வேண்டும். அதற்கு முக்கியமான தேவை சிறந்த சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வது.
படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவேண்டும். பிறர் எப்படி உரையாடுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும்.
விவரங்கள் அறிந்தவர்களுடன் விவாதத்தில் ஈடுபட வேண்டும். இந்த வகை சந்தர்ப்பங்களை தவற விடக்கூடாது.
பட்டிமன்றம், மேடைப்பேச்சு நிகழ்சிகளை நேரிலோ, டிவி, வீடியோக்களில் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி பேசலாம், பேசக்கூடாது என்பவை பற்றி.
சந்தர்ப்பம் அமையும்பொழுது பிறரை பேச அனுமதித்து அவர்கள் பேசும் முறை, திறமை, பேச்சு இவற்றை மவுனமாக பின் பற்றி கேட்கவேண்டும்.
மவுனமாக.கேட்பவர் பேச்சு திறனை சிறப்பாக வளர்த்துக் கொள்பவர் என்பதை நம்பிக்கையோடு கற்றுக்கொள்ள முற்பட வேண்டும்.
பொறுமை மிக அவசியம். என்னாலும் சிறப்பாக பேசமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நாளடைவில் தேவையான பலனை அளிக்கும்.
பக்கம் பார்த்து பேசு, என்று முன்னோர் கூறியது பொருள் மிக்கது அதை கடைப்பிடிக்க வேண்டும். சூழ்நிலை புரிந்துக்கொண்டு உரையாடவும் என்று அதற்கு பொருள்.
பேசுவது கடினமில்லை. தேவைக்கு பொறுத்தமாக பேசுவதும் அவ்வளவு சுலபமில்லை என்பதை மறக்கக் கூடாது.
சுருக்கமாகவும், விவரத்தோடும் முயற்சி எடுத்துக் கொண்டு மனோதைரியத்தோடு பேசுபவர்களுக்கு பேசும் கலை நாளடைவில் பிடிப்படும்.
பேசும் பேச்சு கவரும் வண்ணமும், பலனளிக்கும் மாதிரியும் இருக்க வேண்டியது பேசுபவர்களின் பேச்சு திறமையில் உள்ளது.
சிறப்பாக பேசுபவர்களுக்கு தேவையான அடிப்படை விவரம், பிறர் பேசுவதை, கூற வருவதை இடை மறிக்காமல் கூர்ந்து கேட்கும் திறமை உடையவராாக திகழ்வதுதான்.