அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்..!

Move to the next level..!
Motivational articles!
Published on

வாழ்க்கைப் பயணத்தில் எது  நகர்கின்றதோ  இல்லையோ கட்டாயம் நேரம் நகர்கின்றது.

இந்த போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ப்பவர்கள் தாக்குப்பிடித்து நினைத்ததை சாதிக்க முயல்கிறார்கள். பலர் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள். அதற்கு தேவையான சில அடிப்படை விவரங்கள் குறித்து காண்போம்.

கனவு கண்டால் மட்டும் போதாது. கண்ட, காணும் கனவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்றுசிந்திக்க வேண்டியது முதல் படி.

அவ்வாறு சிந்தித்தால் மட்டும் போதாது. நம்மால் முடிய செய்ய  வேண்டியவை எவை என்பதை பட்டியல் போடவேண்டும்.

அடுத்து போட்ட பட்டியலில் செயல்படுத்த வேண்டிய ஆதரவு எங்கிருந்து கிடைக்கும் என்ற விவரங்கள் குறித்து ஆராயந்து முடிவு செய்யவேண்டும்.

அவற்றைப்பெற தேவையான பணம், பொருள், ஆள் பலம், பெற வேண்டிய ஒப்புதல்கள் போன்ற அத்தியாவசிய  விவரங்கள் தயார் செய்யவேண்டும். 

அவற்றை அடைய  தேவையான நடவடிகைகள் காலம்  தாழ்த்தாமல், காலத்தை தள்ளிப் போடாமல் (without any delay / without postponing ) எடுப்பது முக்கியம்.

ஒருவேளை, அடுத்த கட்டத்திற்கு  நகர்வதற்கு தேவையான அறிவு, திறமை போதிய அளவு இல்லாவிட்டால் (adequate knowledge, skill) அதை எப்படி சரி கட்டுவது என்று யோசித்து முடிவு எடுத்துச் செயல் படுத்துபவர் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான தகுதியை பெறுகிறார்.

வெகுவேகமாக  செல்லும் தற்பொழுதிய சூழ்நிலையில் தோதானவர்களை  தேர்ந்து எடுத்து வேலையை பிரித்துக் கொடுத்து பெற்று முன்னேறுபவர்கள்  அடுத்த கட்டத்தில்.பயணம் செய்து  பலன்  தகுதி  பெற்றவர்கள் ஆகின்றனர். (identify suitable persons and get the respective  work done  from them helps a lot to move to next stage).

இதையும் படியுங்கள்:
பக்குவப்பட்ட மனசு என்பது எது தெரியுமா?
Move to the next level..!

கால மாற்றத்திற்கு இடம் அளித்து அதன் உடன்  பயணிப்பது புத்திசாலிதனம் மட்டும் அல்ல, மாறி வரும் இன்றைய சூழ்நிலைக்கு அத்தியாவசியமும்  கூட.

அடுத்த கட்டத்திற்கு நகர துடிப்பவர்களுக்கு இது பற்றி நன்கு தெரியும். மேலும் அவர்கள் செயல்பாடுகள் அவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும்.

யோசனைகள் செய்வது மட்டும் அல்லாமல், பிறர் யோசனைகளை வரவேற்கவும் வேண்டும்.

யோசனை கூற முன் வருபவர்களை ஊக்குவித்து பாராட்டி பலன் பெற முயற்சி செய்யவேண்டும். 

பிறரின் யோசனையை உபயோகித்தாலோ, பின்பற்றினாலோ அத்தகையயை யோசனை அளித்தவருக்கு  உரிய மரியாதை, பாராட்டுத்தலுடன், பொறுத்தமான சன்மானம் அளிக்க  ஒரு பொழுதும் மறக்க கூடாது.

தனிப்பட்ட முயற்சியில் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது இயலாது என்பதை உணர்ந்து செயல்படுவது சால சிறந்தது.

இதையும் படியுங்கள்:
மற்றவரைத் துச்சமாகப் பார்ப்பதை விடுங்கள்!
Move to the next level..!

முயற்சியுடன், கூட்டு முயற்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல பெரிதும் உதவும்  என்பது யதார்த்த வாழ்க்கை பகுதியின் உண்மை அம்சம் ஆகும்.

அடுத்த கட்டத்திற்கு செல்ல முற்படுவர்கள் செயல் பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது  அத்தியாவசியம் என்பதை.உணர்ந்து செயலில் பின்பற்ற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com