மன அமைதி: வெற்றியைத் தக்கவைக்கும் திறவுகோல்!

peace of mind
Motivational articles
Published on

வ்வொரு மனிதருக்கும் ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கே அவனுடைய பசியாகவும் தாகமாகவும் மாறும். அதனை அடையும்போது மட்டும்தான் அந்த பசி, தாகம் எல்லாம் தனியும். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் பிடிக்காத வேலையை எப்படி பிடித்து செய்யமுடியும். எந்த வழியில் சென்றால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியாமல் சிலர் கிடைத்த வேலையை செய்வார்கள். ஆனால் சிலருக்கு பிடித்த வேலைக்கான வழியில் சென்றாலும் மனநிம்மதி இருக்காது. வெற்றியைக் கொடுக்கும் மன நிம்மதியை காக்க சில வழிகள்:

 1. ம்முடைய இலக்கு மிகப்பெரியதாக இருந்தாலும் சரி, மிக சிறியதாக இருந்தாலும் சரி அதற்கான வழியில் செல்லும்போது உடன் வேலை பார்ப்பவர்கள் ஆயிரம் வெவ்வேறு நேர்மறையான கருத்துக்களை கூறுவார்கள்.  “இவ்வளவு நாள் இங்கே தான் வேலை பாக்குறேன்,பாரு! நல்லாவா இருக்கேன்?நீ போயிரு, வாழ்க்கைய தொலைச்சிறாத” என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் உன்னுடைய இலக்கு உறுதியானது என்றால் இது போன்ற வார்த்தைகளை எல்லாம் காதோடு விட்டுவிடுவது நல்லது. மனதுக்கு கொண்டு போனால் மன நிம்மதிதான் கெடும்.

2. பிரம்மிக்காதே! உன்னுடைய இலக்கு பெரியதாக இருக்கும்போது உன் முன்னேற்ற பாதையில் பெரிய ஆட்களையும், பெரிய அனுபவங்களையும் சந்திப்பாய். அப்போது” அய்யோ!! இவ்வளவு பெரிய வேலையா? எப்படி சமாளிப்பது?அவ்வளவு பெரிய ஆட்களுடன் எப்படி பேசுவது? “ போன்ற எண்ணங்களை கைவிட்டே ஆக வேண்டும்.

உதாரணத்திற்கு நீ ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்று ஒரு குறும்படம் எடுக்கிறாய், சற்றும் எதிர்பாராத விதமாக அதை ஒரு பெரிய தயாரிப்பாளர் பார்த்து உன் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறி ஒரு பெரிய நடிகரை நடிக்க அழைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது “இவ்வளவு பெரிய நடிகருடன் எப்படி வேலை செய்வது?”, “ இவ்வளவு பெரிய டீமை எப்படி வழிநடத்துவது? “என்று கண்டதையும் யோசித்துக் கொண்டு மனநிம்மதியையும் நசுக்கிக்கொண்டு இருந்தால் வெற்றியின் வழி என்னாவது?

இதையும் படியுங்கள்:
தொடங்குவது சுலபம்; தொடர்வதே சவால்!
peace of mind

3. பிடித்த இலக்கிற்காக பயணிக்கும்போது வீட்டின் சூழ்நிலைகள், உன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் போன்றவை ஒன்றாக சேர்ந்து நிம்மதியை கெடுக்கலாம். இலக்கை பார்ப்பதா? இல்லை வீட்டின் சூழ்நிலையை பார்ப்பதா? என்று திக்குமுக்காடி கொண்டிருப்பாய். அப்போது கண்ணை மூடிக்கொண்டு ஒரு பத்து நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இருங்கள்.

அதன்பிறகு ஒரு தெளிவான முடிவை எடுங்கள். மனத்தில் ஒரே சமயத்தில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தால் தெளிவான வழியை தேர்ந்தெடுக்க முடியாது. மன நிம்மதியுடன் இருக்கும் ஒரு நிமிடம் கூட தெளிவான வழியை காண்பிக்கும்.

4. வெற்றியின் வழியில் பயணிக்கும்போது சக பணியாளரிடம் வெளிப்படையாக பேசுங்கள். எவ்வளவு சிறிய யோசனையயாக இருந்தாலும் தயக்கமில்லாமல் கூறுங்கள் எதிரே இருப்பது எவ்வளவு பெரிய ஆளாயினும் சரி. அவர்களும் வேலைதான் செய்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு பேசுங்கள்.அவர்கள் பேசுவது தவறாக இருந்தால் கேள்வியும் கேளுங்கள்.ஒருவேளை உங்கள் யோசனை கேட்டு சிரிப்பார்களோ அல்லது திட்டுவார்களோ என்ற தயக்கம் இருக்கும். சஅதனால் உங்களுக்கு ஒரு நஷ்டமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை . ஆகையால் தைரியமாக பேசுங்கள்.

5. வெற்றிக்கான வழிகள் அதிகம்.. உங்கள் இலக்கிற்கான பாதைகள் அதிகம். இந்த வழியில் செல்லலாமா? வேண்டாமா? என்ற முடிவைகளை குழப்பம் கொள்ளாமல் திடமாக எடுங்கள்.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் பாடம்: நாம் கற்க வேண்டிய நற்பண்புகள்!
peace of mind

உங்கள் கருத்துக்களை மதிக்காத வழி, உங்கள் பேசும் சுதந்திரத்தை பறிக்கும் வழி, உங்களின் திறமைகளை சற்றும் பொருட்படுத்தாத வழி, உங்கள் சுயமரியாதையை கெடுக்கும் வழி தவறான வழிகளே! கண்ணை மூடிக்கொண்டு அந்த வழியில் பயணிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுங்கள். மனநிம்மதி இல்லாத வெற்றிப்பாதை உண்மையில் வெற்றிக்கான பாதையே இல்லை. மீண்டும் முதலில் இருந்தே தொடங்குங்கள். அதிக நேரம் ஒன்றும் சென்று விடவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com