
ஒரு கல்லூரியில் பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். தத்துவவியல் (philosophy) பற்றிய பாடம் அது. ஒரு பெரிய கண்ணாடி குவளையை மேஜை மீது வைத்திருந்தார். (Motivational articles)
அந்தக் கண்ணாடி குவளையில் சின்னஞ்சிறு கூழாங்கற்களைப் போட்டார். கண்னாடி குவளை சிறு கூழாங்கற்களால் நிரப்பப்பட்டதும் மாணவர்களிடம் கேட்டார்.
கண்ணாடி குவளை முழுவதும் நிரம்பிவிட்டதல்லவா?" எனக் கேட்டார்.
பேராசிரியரின் கேள்விக்கு "ஆமாம்" என அனைவரும் பதில் தந்தார்கள்,
மீண்டும் சில சின்னஞ்சிறு கூழாங்கற்களை அந்தக் கண்ணாடி குவளைக்குள் போட்டார். இப்போது ஓரிரு கூழாங் கற்களைத்தவிர மற்றவைகள் வெளியே விழுந்தன. கண்ணாடிக் குவளையை எடுத்து சற்று குலுக்கினார்.
தண்ணாடிக் குவளை நிரம்பிவிட்டதல்லவா?" என்று கேட்டார். மாணவ மாணவிகள் அனைவரும் "ஆமாம்" என ஒரே குரலில் பதில் தந்தார்கள்.
பேராசிரியர் இப்போது ஒரு பெட்டியிலிருந்து மணலை எடுத்து அந்த கண்ணாடி குவளைக்குள் தூவினார். கூழாங்கற்களால் நிரப்பப்படாத இடங்களை அந்த மண் துகள்கள் நிரப்பியது. இப்போது கண்ணாடி குவளை நிரம்பிவிட்டதல்லவா?" என மீண்டும் கேட்டார். மாணவ - மாணவிகள் இப்போதும் "ஆமாம்" என பதில் கூறினார்கள்.
மீண்டும் பேராசிரியர் பேசத்தொடங்கினார்.
இந்தக் கண்ணாடிக் குவளையைப் போன்றதுதான் நமது வாழ்க்கை. இந்தக் கண்ணாடி குவளையில் முதலில் நான் சின்னஞ்சிறு கூழாங் கற்களைப்போட்டு நிரப்பினேன். இந்த கூழாங் கற்களைப் போலத்தான் உங்கள் குடும்பம், உங்கள் வாழ்க்கைத்துணை, உங்கள் உடல்நலம், உங்கள் குழந்தைகள் போன்றவைகள் ஆகும்.
இந்தக் கண்ணாடி குவளையை கூழாங் கற்களால் நிரப்பிய பின்புதான் மணலைத் தூவினேன். இந்த மணல் துகள்கள்தான் உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் மோட்டார் சைக்கிள், உங்கள் கார் போன்றவைகள் ஆகும். மணல்கள் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும்.
இந்தக் கண்ணாடி குவளையில் முதலில் மணலைப் போட்டு நிரப்பியிருந்தால் பின்னர் கூழாங்கற்களை கண்ணாடிக் குவளையினுள் போடமுடியாது. இதேபோன்றதுதான் உங்கள் வாழ்க்கை. நீங்கள் உங்கள் நேரம் மற்றும் சக்தி ஆகியவற்றை சின்னஞ்சிறு விஷயங்களில் அதிகமாக செலவிட்டால் தேவையான பெரிய செயல்களுக்கு நேரத்தையும், சக்தியையும் செலவிடுவதற்கு வாய்ப்பே இருக்காது.
எனவே, உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். உங்கள் செயல்களில் எது முக்கியமானது? என்பதைத் தெரிந்துகொண்டு அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க பழகிக்கொள்ளுங்கள். கண்ணாடி குவளையில் கூழாங்கற்களை நிரப்பியதுபோலவே, முதலில் முக்கியமான செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் பழகுங்கள். அதன் பின்னர் மற்ற செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது" என்றார் பேராசிரியர்.
இந்த சம்பவம் ஒரு முக்கிய கருத்தை நமக்கு உணர்த்துகிறது. எந்த செயலுக்கு எப்போது, எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதை புரிந்துகொண்டு உழைக்கத் தொடங்கியவர்கள் வெற்றியை எளிதில் பெறுகிறார்கள்.
வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமான குடும்பம், உடல்நலம், நண்பர்கள், உறவினர்கள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் இளம்வயதிலேயே கொடுப்பதை பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்பின்னர்தான், நல்ல வேலை, புது வீடு, மோட்டார் சைக்கிள், கார் போன்ற தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.