
முன்னேறுவதற்கு தேவையான பின் பற்றக் கூடிய சில யோசனைகள்.
உங்கள் இலக்கை அடைவதில் உறுதியாக இருக்கவும். அதற்காக சிந்தியுங்கள், தயார் செய்து கொள்ளவும்.
பொறுமையை கடைப்பிடிக்கவும். எல்லாம் உடனடியாக நடந்து விடும் என்ற எண்ணத்தை காற்றில் பறக்கவிடுங்கள்.
பொறாமை வேண்டாம். பயனளிக்காது. படுத்தி எடுத்துவிடும்.
அடுத்தவர் எப்படி முன்னேறினார் என்று அறிந்துக் கொள்ளவும். அதே முறையில் தங்களுக்கும் உதவும் என்பதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை என்று உணர்ந்து செயல்படவும்.
ஒவ்வொருவரின் தன்மை (உங்களது உட்பட) மாறும். அதற்கு ஏற்ப செயல்பாடும் (out put) இது இயற்கையின் நியதி.
வெற்றி படிகளில் தடங்கல்களை எதிர்கொள்ளாமல், சந்திக்காமல்,
வேகமாக சென்று கொண்டு இருந்தால் எங்கோ விவாகரமோ அல்லது விபரீதமோ நடந்துள்ளது என்பதற்கு அறிகுறி என்று உணர்ந்து, சிந்தித்து அடுத்த கட்டத்திற்கு நகரவும்.
Smooth sailing is not an easy task என்ற அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்பாராத தடங்கல்கள், பிரச்னைகள் எந்த நேரத்திலும், உருவத்திலும் வந்து தொந்தரவு செய்வதுடன் உங்கள் பிளானை செயல் படுத்த சவாலாக பிரச்சனைகள் வரிசைக் கட்டிக்கொண்டு தலை தூக்கி திணறடிக்கும், நடைமுறை வாழ்கையில்.
இவ்வகை நடவடிகைகளுக்கு முற்றிலும் தயார் நிலையில் இல்லாவிட்டாலும். எதிர்கொண்டு கடந்து வரவேண்டிய காட்டாயம் வேறு அழுத்தம் அளிக்கும்.
இத்தகையயை சூழ்நிலையை, நிலையாக நின்று செயல்பட்டு முடிவு பெறுவது அவ்வளவு சுலபமில்லை.
அதே சமயம் முடியாததும் இல்லை என்ற எண்ணத்துடன், முன்னுரிமை கொடுக்க வேண்டிய அடிப்படையில் (proritize basis) தேவைக்கு ஏற்ப செயல்படுவது முக்கியம்.
நேரம் ஒதுக்கிடுவது (time allocation) முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை மறுக்கவும், மறக்கவும் கூடாது.
அதற்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டியது முன்னேற துடிப்பவர்களின் கடமை என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
பிறர் செயல்பாடுகள கூர்ந்து கவனித்தால், எப்படி செயல்பட வேண்டும், செயல்படக் கூடாது என்ற விவரங்கள் புலப்படும். அவற்றில் சில உபயோகப்படும்.
எப்பொழுதும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டால், நம்மை சுற்றி வாய்ப்புக்கள் காத்துக்கொண்டுதான் இருக்கும்.
உதவும் குணத்தை வளர்த்துக்கொண்டு செயல்பட்டால் தேவை ஏற்படும் பொழுது உதவி கிட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன.
முடியும் என்ற மந்திர சொல் முயல வைத்து கட்டாயம் முன்னேற வழி வகுக்கும்.
முயற்சி உந்து கோலாக இடைவிடாமல் பயணம் செய்ய பழகிக் கொள்வது, இன்றைய போட்டிகள் நிறைந்த உலகத்தில் அத்தியாவசியமாகின்றது.
முயற்சி செய்வதை எந்த காரணம் கொண்டும் நிறுத்தாமல் இருந்தால் அதுவே ஒரு முக்கிய முதலீடாக செயல்பட்டு முன்னேற வைக்கும்.