'நான்' என்பதை விட்டு 'நாம்' என்று சொல்லுங்கள் - வாழ்வில் நிம்மதி பெறுங்கள்!

Motivational articles
Get peace in life!
Published on

னித வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பலவிதமான கலவை  குணங்கள் அடங்கியுள்ளது. ஒரு சிலர் எல்லா விஷயங்களிலும் நிதானம் கடைபிடித்து  செயல்படுகிறாா்கள்.

சிலரோ எதிா்மறை எண்ணங்களுக்கு ஆளாகி நிதானமில்லாத நிலைபாடுகளை எடுத்து விடுகிறாா்கள். அதற்கு காரணம் மனித மனங்களை ஆட்டிப்படைக்கும் இரண்டு வாக்கியங்களே,

முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டு ஆட்டிப்படைத்து விடுகிறது.

"சிறிய வாா்த்தைகள்- பொிய சங்கடம்" அந்த வார்த்தைகள் சிறியதாக இருந்தாலும்  அதை நாம் பயன்படுத்தும்போது  அதன் விளைவு பூதாகரமாகிறது.

எந்த விஷயமோ, அல்லது முக்கிய நிகழ்வோ ஒருவர் மூலமாக நடக்கும்போது சிலர் பெருந்தன்மையாக இருப்பாா்கள். சிலருக்கோ நான், எனது, என்ற அகங்காரம் தலைக்கேறி,  என்னால்தான் அந்த நபர் இந்த நிலைக்கு வந்தாா், நான் இல்லாவிடில் அந்த விஷயமே நடந்திருக்காது, என தற்பெருமையாக சொல்ல ஆரம்பிப்பதோடு, அடுத்தவர் மனதையும் காயப்படுத்திவிடுவதும் நிதர்சனமே.

இங்கே விரோதியே நான், எனது என்ற நிலைபாடு, தலைதூக்கி விடுகிறதே, இதனால் என்ன பயன்? உறவும் நட்பும் பாழானதுதான் மிச்சம். அதனால் யாருக்கென்ன லாபம்? பொதுவாகவே அன்பு ஒரு மனிதனை உயர்த்திவிடும்.

அதே நேரம் அகம்பாவம்,மற்றும்  அதிகாரம் அவனை படுகுழியில் தள்ளிவிடும். நான், எனது, என்பதை மறந்து நாம் நமது என்று சொல்லிப்பாருங்களேன் அது சமயம்  அமைதி தேவதையும், அன்பு தேவதையும், நம்மோடு நிலைத்திருப்பாா்கள்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூட நான், எனது, என்று சொல்லும்போது, உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொல்லும்போதுதான்  உதடுகள் ஒட்டிக்கொள்ளும் என்ற சிறப்பான கருத்தை சொல்லியிருக்கிறாா்.

இதையும் படியுங்கள்:
பிறரிடம் கையேந்தாதே: உழைப்பும், தன்னம்பிக்கையும்தான் உன் பெருமை!
Motivational articles

எனவே எவ்வளவு உயர்ந்த நிலைக்கு நாம் வந்தாலும், நான் எனது என்ற ஈகோவை மூட்டை கட்டிவையுங்கள். நாம், நமது என சொல்லுங்கள்.

நமது நாடு,நமது தேசம், நமது  ஆசான், நமது  ஊா், நமது தெரு,  நமது சொந்தம், நமது பந்தம், நமது நண்பர்கள் என அழகாக நயமாக விசால மனதுடன் சொல்லிப்பழகுங்கள். அதுவே வீட்டிற்கும், நமக்கும், சமுதாயத்திற்கும் நல்லதாகும்.

இதைத்தான் ஈரடியில் உணர்த்திய வள்ளுவர் 

"யானென தென்னுஞ் செருக்கருப்பான்  வானோா்க்  குயர்ந்த உலகம் புகும்" (குறள் 346) என சொல்லியிருப்பாா். 

இதையும் படியுங்கள்:
காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவது எப்படி? - உங்கள் வாழ்க்கையை மீட்டெடுங்கள்!
Motivational articles

நான், எனது என்ற மாயையிலிருந்து மனிதன் விலகவேண்டும். அந்த நிலைபாடுகளில் இருந்து விலகுவதே ஆரோக்கியமான மனோநிலைக்கான விதை. நாம் எனும் விதையை நட்டு, நான் எனும் அகங்கார களையை அகற்றுங்கள், நமது என்ற பயிா் தழைத்து வளரும், அப்போது  அன்பு எனும் பயிரை அமோக அறுவடை செய்யலாம்.

அந்த  செயலைச்செய்யும் போதுதான்   மனிதன்  முழு மனிதனாகிறான். அதுவரையில் அந்த நபரை அரை மனிதன்தான் என சொல்லலாமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com