
நம் வாழ்க்கை என்றும் நம் கையில். இன்பமும் துன்பமும் நமக்குள்தானே தவிர நம்மைச் சுற்றி இல்லை. இதை அறிந்துகொள்ளாத பலர் அடுத்தவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணத்துடனே வாழ்ந்து தம் வாழ்வை வீணாக்கி கொள்கின்றனர். அவர்களுக்காகவே இந்த எளிய ஆலோசனைகள்.
பிறரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள் அவைகள் உங்களை பாதிக்காத வகையில் இருக்கும்போது மட்டும்.
பிறருக்காக விட்டுக் கொடுத்து வாழுங்கள். ஆனால் அதற்காக சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருக்கும்வரை மட்டும்.
பிறருக்காக உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம் அதனால் தீமைகள் நிகழாது என்றால் மட்டுமே.
பிறரிடம் கீழ்ப்படிந்து இருக்கலாம் ஆனால் அவர்களின் அடிமையாய் மாறிவிடாமல் இருக்கும் வரை மட்டும்.
பிறருக்காக உங்களை தாழ்த்திக் கொள்ளலாம் அதில் நன்மை நடக்கும் என்றால் மட்டும்.
பிறருக்காக நேரம் ஒதுக்கலாம் அதனால் நம் நேரம் வீணாகாமல் இருக்கும் என நினைத்தால் மட்டும்.
பிறருக்கு ஆதரவாக இருக்கலாம் அதில் அவர் மேல் தவறு இல்லாதவரை மட்டும்.
பிறரின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கலாம் ஆனால் அது உங்கள் மனதை புண்படுத்துவதாக இருக்காதவரை மட்டும்.
பிறர் உங்கள் சொந்த வாழ்க்கையில் தலையிட்டால் பொறுமையாக இருங்கள் ஆனால் அது எல்லை தாண்டாமல் இருக்கும் வரை மட்டும்.
"உங்களுக்காக நீங்கள்" என்பதை மனதில் வைத்து "பிறருக்காக" என்ற வார்த்தையை கூடுமானவரையில் உபயோகிக்காதீர்கள்.
உங்களுக்காகவே நீங்கள் வாழும் வாழ்க்கைதான் உங்கள் மனதிற்கு திருப்தியையும் நன்மையையும் தரும்.