தாக்குப் பிடிக்கவும் தக்க வைத்துக்கொள்ளவும் வித்தியாசமாக யோசியுங்கள்..!

Think differently...
Motivational article
Published on

யோசிப்பது என்பது ஒரு கலை. வித்தியாசமாக யோசிப்பது என்பது இன்றைய போட்டிகள் மிகுந்த உலகில் தேவையானதாகிவிட்டது. தாக்குப் பிடிக்கவும் தக்க வைத்துக்கொள்ளவும். (to sustain and to retain)

வித்தியாசாக யோசிப்பது பற்றி சில் விவரங்களை தெரிந்துக் கொள்வோம்.

அடுத்த கட்டத்திற்கு செல்ல மற்றும் முன்னேற துடிப்பவர்களுக்கு பெரிதும் உதவும் அருமருந்து வித்தியாசமாக யோசிப்பது ஆகும்.

வித்தியாசமாக யோசித்து புது வகை உபயோகம் மிக்க பொருட்கள் தயார் செய்தால், அவ்வாறு தயார் செய்யப்படும் பொருட்கள் காந்தம்போல் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பத்துடன் விற்பனை அத்தகைய பொருட்களுக்கு அதிகரிக்க வாய்ப்புகள் கிட்டும். (to attract like magnet)

உபயோகிக்கிறவர்களும் புதுமை மற்றும் அட்ராக்க்ஷன் மிக்க பொருட்கள் மீது நாட்டம் கொள்கிறாார்கள்.

அவர்களது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய வித்தியாசமான யோசனைகள் கை கொடுக்கிறன.

எதிர்கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறிவரும் டிமாண்டுகளை எதிர் கொள்ளவும், புதுமை புகுத்தவும் புதிய சிந்தனைகள் செயல்படுத்தவும்

அடித்தளமாக அமைவது வித்தியாசமான யோசனைகளில் உதிக்கும் கருக்களே ஆகும். (to serve as foundation)

இப்படி வித்தியாசமான யோசனைகளில் ஈடுப்படு பவர்கள் யோசிப்பதை விரும்புவது மட்டும் அல்லாமல் அதை தங்கள் தலையாய கடமையாக மகிழ்ச்சியுடன் கடைப்பிடிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்களிடமே இருக்கிறது ஒரு உற்சாக ஊற்று!
Think differently...

நம் நாட்டில் மட்டும் அல்லாமல் மற்ற தேசங்களில் பயன் தரும் புதுமை அம்சங்கள் பற்றி நுனிவிரலில் விவரங்கள் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.

ஒரு சிலர் வித்தியாசமாக சிந்திப்பதை ஹாபியாகக் கூட வைத்துக் கொள்வார்கள்.

மாற்றம் எப்படி, எதில், எவ்வாறு, எப்பொழுது செய்யலாம், புகுத்தலாம் என்பதில் முழு ஈடுப்பாட்டுடன் இயங்குவார்கள்.

இப்படிப்பட்டவர்களால் எந்த யோசனை இருந்தாலும் பயன்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கை மிக்க மனோபாவத்துடன் வலம் வர முடியும்.

அத்தகையை நேர்மறை எண்ணங்களே அவர்களை ஊக்குவிக்கவும் முன் நோக்கி நகரவும் பெரியதாக உதவும். (motivate and push them ahead )

வித்தியாசமாக சிந்திப்பவர்கள் தங்களால் முடியும் என்ற குறிக்கோளுடன் செயல்படுவதால், தடங்கல்கள், தோல்விகளை சந்தித்தாலும் அவற்றின் காரணகாரியங்களை அறிந்து அவற்றை சரி செய்ய அதற்கு ஏற்ப தயார் நிலையில் இருப்பார்கள்.

இவர்களுக்கு வெற்றி, தோல்வி இரண்டும் கற்றுக்கொள்ளவும், புதுமை புகுத்தவும் கிடைக்கும் சந்தர்ப்ப மேடையாக கருதுவதால், இவர்காளால் எந்த சூழ்நிலையிலும் மாற்றி யோசிக்கவும், சிந்தித்து செயல்படவும் முடியும். அவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்ட ரிசல்ட்டை அடையவும் முடியும். (use as opportunity table introduce new / different ideas)

இதையும் படியுங்கள்:
திரும்பத் திரும்ப வரும் பிரச்னைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
Think differently...

வித்தியாசமாக யோசிப்பவர்கள் சுறு சுறுப்பாக செயல்படுவதுடன், எதையும் வீணாக்குவதை விரும்பவே மாட்டார்கள்.

மேலும் மறுசுழற்சி முறைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

வித்தியாசமாக யோசிப்பவர்கள் ஈடுபட்டு வந்தால் பயனுள்ள புதுமை பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படாது, உடன் புது யோசனைகளுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com