உங்கள் இலக்குகளை இரட்டிப்பாக்க: யார் யாருடன் இணைய வேண்டும்?

Victory is yours
Motivational articles
Published on

ரு மூளையை விட இரண்டு மூளைகள் அதிக பலன் தரும். என்ற ஆங்கிலேயப் பழமொழி உண்டு. பிறரை யோசனை கேட்க நாம் கூச்சப்படுகிறோம். காரணம், நம்மை ஒன்றும் தெரியாதவன் என நினைத்து விடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மைதான் காரணம்.

கூட்டு ஆலோசனைக்குழு நம் நிறுவனத்திலோ அல்லது வெளியிலோ  நமக்கு உதவத் தயாராக இருக்கவேண்டும். ஒரு மண்டபத்தில்  பாட்டுக் கச்சேரி பார்க்கிறோம். ஒரு தனிநபர் நம் வீட்டில் நமக்காக பாடி மகிழ்விப்பதையும் பார்க்கிறோம். பாட்டுக் கச்சேரியில் வயலின் மிருதங்கம் தம்புரா  பாடுபவர் என்று அனைவரும் இணைவதால் களைகட்டுகிறது. அதேபோல்  வயலின் மிருதங்கம்  சரியாக வாசித்தால்தான் நல்லது. இல்லாவிட்டால் கச்சேரி ரசிக்காது.

அதேபோல் ஒரு தொழிலுக்கு உற்பத்தி, விற்பனை, இலாப நஷ்ட கணக்கு நிர்வாகம்  எல்லாம் இணைந்து இயங்க வேண்டும். எது தோற்றாலும் நஷ்டத்தில் கொண்டுவிடும். நம் ஆலோசனை குழுவில் இருப்பவர்களை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு முக்கிய விஷயங்கள். முதலில் உற்பத்தி மேலாளர் அவருக்கு அறிவும் அனுபவமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இரண்டாவது எல்லோருடனும் சுமுகமாக பழகுவாரா இலட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவாரா என்பது. இந்த இரண்டும் இணைந்து செயல்படும்  குணம்தான் முக்கியமாகக் கருதப்படுகிறது.அமெரிக்காவில் வேலைக்கு வருபவர்களிடம் அவர் அனுபவம், அதைவிட அவர் அனுசரித்து இணைந்து பழகி கூட்டாக உழைப்பார்களா என்றே பார்ப்பார்கள். முதல் மதிப்பெண் பெற்றவர்களை கூட வேலைக்கு எடுப்பதில்லை. முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் சகஜமாக எல்லோருடனும் பழகுவதில்லை. தனித்து நிற்கிறார்கள் என்பதுதான் காரணம். 

இதையும் படியுங்கள்:
உண்மையான நட்பு எது? விலக்க வேண்டிய மோசமான நட்புகள்!
Victory is yours

தொழில் என்பது பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பது. வரவு என்ன, கச்சா பொருள்களின் விலை என்ன, நிர்வாக செலவுகள் என்ன, விற்பனை எவ்வளவு? இலாபம் எவ்வளவு? போன்ற எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ளும்  திறமை அவசியம் தேவை. தொழில் முனைவோர்  நல்ல அனுபவம் பெற்ற நண்பர்களையோ அல்லது ஆடிட்டர், வங்கி நிர்வாகி  போன்ற தொழில் துறையில்  நிதி நிர்வாக அனுபவம் பெற்றவர்களையே து‌ணையாகப் பெற்றிருத்தல் அவசியம். அவர்கள் ஆலோசனைக்கு ஒரு பகுதி நேர சம்பளமாக கொடுத்து விடலாம். இப்படி இணைந்து செயல்படும் குழு நம் தொழிலுக்கு என்ன செய்கிறார்கள்?. நிதி நிர்வாகம் மட்டுமல்ல. ஆலோசகர்கள் புதிய புதிய தொழில்களைப் பற்றி கருத்து தெரிவிப்பார்கள்.

இந்த கூட்டு முயற்சி தொழிலுக்கு முழுமை கொடுக்கிறது பிரச்னை முக்கியத்துவம் பெறுகிறது. அதை தீர்ப்பதற்கு  பல்வேறு நபர்களுடைய அனுபவமும் உதவுகிறது. தொழில் முனைவோர் இதன் முலம் நம்பிக்கை பெறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பேராசையைத் தவிர்த்து, நிகழ்காலத்தில் ஆனந்தமாக வாழ..!
Victory is yours

சாதிக்க வேண்டும்  என்ற ஆர்வமும் மனோபாவமும் கொண்ட தொழில் கூட்டணி நம் நிறுவனத்தின் காசாளர். விற்பனை நிர்வாகி உற்பத்தி மேற்பார்வையாளர் தலைமை நிர்வாகி என்ற அனைவரும் பல நிறுவனங்களில் சிறந்த கூட்டணியாக செயல் படுகின்றனர். அப்படிப் பொறுக்கி எடுத்து அவர்களை வளர்த்து பல நிறுவனங்கள்‌ பலன் பெறுகின்றன. திறமைசாலிகளை இணைத்து கூட்டணி அமையுங்கள். வெற்றி உங்களுக்கே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com