
ஒற்றுமையே பலம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியும் இந்த இரண்டு பழமொழியும் ஒன்றிணைந்து செயல் படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
மக்கள் நன்றாக சேர்ந்து செயல்படும்போது அவர்கள் தனித்தனியாக செயல்படுவதைவிட அதிக வலிமை பெறுவார்கள் என்பது ஆகும்.
இது பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்றுபட்டு இருந்தால் எந்த ஒரு செயலையும் எளிதாக செய்து முடிக்க முடியும் என்பதையும் எந்த ஒரு பிரச்னைகளையும் சமாளிக்க முடியும் என்பதையும் வலியுறுத்துகிறது.
குறிப்பாக ஒரு குடும்பம், ஒரு சமூகம், ஒரு நாடு ஒற்றுமையாக இருந்தால் அது பல வெற்றிகளை முன்னேற்றத்தையும் அடையும் என்பது இதன் முக்கிய கருத்தாகும்.
ஒற்றுமையே வலிமை
ஒற்றுமையே வலிமை. ஒற்றுமையே உயர்வு தரும். உலக நாடுகள் இந்த ஒற்றுமைக்காகவே பாடுபடுகின்றன. விளையாட்டுக்கள் இந்த உலக ஒற்றுமையை நிலை நாட்டவே முத்தம் முயல்கின்றனர்.
குழந்தைகள் குடும்பத்தில் பலரோடு சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பண்பினை கற்றுக்கொள்ளத் தொடங்குகின்றன. இங்கு ஆரம்பமாகின்ற அவர்கள் அனுசரித்துப்போகும் போக்கு அறிவு அனுபவம் நடத்தப்படும் பள்ளிகளில் மற்றும் கூட்டமாக கூடும் பொது இடங்களில் வளர்ந்தும் மாறாத போது திருத்தமும் பெற்றுக் கொள்கின்றனர்.
அனுபவங்களால் பெறுபவை
கூட்டமாக உள்ளவர்களில் இருந்து தனிப்பட்டவர்கள் பெரும் அனுபவங்களும் தனிப்பட்டவர்களில் இருந்து மற்றவர்கள் பெரும் அனுபவம்தான் என்று மாறி மாறி ஒன்றி விடுகின்றன. இப்படிப்பட்ட வாய்ப்புகேளே சமுதாய அமைப்புகளை கட்டுக்கோப்பாக இருக்க உதவிபுரிகின்றன.
குழந்தைகள் தாங்கள் பிறந்தது முதல் ஏதாவது பலர் கூடிய இடங்கள், பள்ளிகள் வெளியிடங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் கற்றுக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். சமுதாயத்தில் நிலவுகின்ற சமூக காரியங்கள் மதவிழாக்கள் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெரிந்துகொள்ள முடிகிறது.
இதற்கு உதாரணமான கதை
ஒரு கிராமத்தில் வயது முதிர்ந்த விவசாய ஒருவற்கு நான்கு மகன்கள் இருந்தனர். நால்வரும் ஒற்றுமை இல்லாமல் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர். இவர்கள் இப்படி இருந்தால் குடும்பம்சிதறி போகும் என்று வருந்தினார் தந்தை.
அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர் நால்வரும். ஒருநாள் மகன்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை.
அவர்கள் கட்டிலை சுற்றி நின்றனர். தன் காலடியில் கிடந்த மூங்கில் கட்டு ஒன்றை மூத்த மகனிடம் கொடுத்து, 'இதை உடை' என்றார்.
தன் பலம் முழுவதையும் பயன்படுத்தினான், ஆனால் அவனால் உடைக்க முடியவில்லை.
இரண்டாவது மகன், மூன்றாவது மகன், நான்காவது மகன் மூவரும் இணைந்து பார்த்தும் ஒருவராலும் உடைக்க இயலவில்லை.
பிறகு கட்டை பிரித்து ஆளுக்கொரு குச்சியை கொடுத்தார்.
நால்வரும் சுலபமாக முறித்துவிட்டு நின்றனர். இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும். நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் உங்கள் வாழ்க்கை உறுதியாக விளங்கும். எவர் உங்களை ஏமாற்ற முடியாது சண்டை சச்சரம் செய்து தனித்தனியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பீர்கள் என்றால் சிதறிப் போவீர்கள் ஒற்றுமையே வலிமை அளிக்கும் என்றார் தந்தை.
உடனே மகன்கள் அதனை உணர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு நல்ல வாழ்வை பெற்றனர்.
பாரதியார் எழுதிய கவிதையும்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவருக்கும் தாழ்வே என பாடியுள்ளார்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை !
ஒற்றுமையே பலம்!
ஊருடன் கூடி வாழ்!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை !
ஒற்றுமை இல்லா குடும்பம் ஒருமிக்கக் கெடும்.
நாட்டின் ஒற்றுமையால்
ஊர் வளர்ச்சி அடையும்:
ஒன்றே குலம் ஒருவேனே தேவன்!
என்பதை மறவாமல் அனைவரிடத்திலும் ஏற்றத்தாழ்வு இன்றி பழக வேண்டும்.