
வினாடிக்கு வினாடி புதிய தகவல்கள் பெறக்கூடிய வெகு வேகமாக செல்லும் சூழ்நிலையில் நாம் வசித்து வருகின்றோம்.
பல வகை சாதனாங்கள் நம்மை சுற்றி இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
அறிந்துக்கொள்ள வேண்டும், தெரிந்துக்கொண்டு அறிவை விருத்தி செய்து கொள்ள இவை எல்லாம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இன்றைய கால கட்டத்தில் அறிவு பெற்று, அறிவு பூர்வாக சிந்தித்து செயல்படுவது முக்கியமான ஒன்றாக கருத்தப்படுகின்றது.
புதுப் புது விவரங்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன.
பல கண்டுப்பிடிப்புக்கள், இருப்பவைகளை மேலும் மேலும் சிறப்பாக செயல்படவும், பயன்படவும் செய்யும் முயற்சிகள் தொடர்ந்த்து நடைப் பெற்று வருகின்றன.
இவையெல்லாம் சந்தர்ப்பங்கள அதிரிக்கச் செய்கின்றன.
அத்தகைய புதுப் புது வாய்ப்புக்கள் சுண்டி இழுக்கின்றன பலரை, பயன்படுத்திக் கொள்ளும்படி.
இருந்தும் ஒரு சிலரால் மட்டும் தான் இத்தகையை மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள், வாய்ப்புக்களை சரிவர உபயோகித்துக்கொள்ள முடிகிறது.
பெரும்பாலானோர் வாய்ப்புக்களை தவற விட்டு விட்டு வருந்துகிறார்கள்.
ஏன் அவர்களால் முடிவதில்லை. காரணம் அவர்களது இயலாமையே பெரும்பங்கு வகிக்கின்றது.
கற்றுக்கொண்டு அவர்களது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும என்ற எண்ணம், சிந்தனை துளிக்கூட இத்தகையவர்களுக்கு இல்லை.
அதைத் தவிர முன்னேற தேவையான கடின உழைப்பு, முயற்சி, பயிற்சி எடுப்பது ஆகிய அடிப்படை குணங்கள் இவர்கள் அகராதியில் இடம் பெறுவதே இல்லை.
எந்த வகை முயற்சிகள் எதுவும் எடுக்காமல் பலன்களை மட்டும் அனுபவிக்க தயார் நிலையில் இருந்தால் இந்த போட்டிகள் நிறைந்த உலகத்தில் முன்னேறுவது என்பது எப்படி சாத்தியமாகும்.
முதலில் கனவுலகில் சஞ்சரிக்காமல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு முடிப்போம் என்ற நேர்மறை சிந்தனையுடன் களம் இறங்கவேண்டும்.
அது மட்டும் போதாது. எந்த வகை சூழ்நிலையிலும் தொடர்ந்து முன்னேற பாடுபடுவேன் என்று உறுதி பூண்டு அந்த உறுதியை செயலில் காட்டவேண்டும்.
தேர்ந்து எடுத்த துறையில் ஆர்வத்துடன் பணி புரிவதுடன், இடை வெளிவிடாமல் மேலும் மேலும் அத்துறை சார்ந்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தெரிந்துக் கொண்டு மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
படித்து, பார்த்து, செயலில் ஈடுபட்டு மேம் படுத்திக் கொள்ளலாம்.
விவரம் அறிந்தவர்கள், அத்துறையில் அனுபவம் மிக்கவர்கள் ஆகியோருடன் விவாதித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுதல், தெளிவு படுத்திக்கொள்ளுதல் காலத்தின் கட்டாயம்.
அப்படி செய்து எப்பொழுதும் புதுப்பிதுக் கொண்டால் தான் பந்தயத்தில் பயணிக்கலாம். இல்லாவிட்டால் விரைவில் பின்னுக்கு தள்ளப்பட்டு காணாமல் போய்விடுவார்கள்.
எனவே பயின்றுக் கொண்டு அறிவை தொடர்ந்து வளர்த்துக் கொள்வது என்பது அடிப்படை அத்தியாவசமாகின்றது என்பது இன்றைய சூழ்நிலையின் நியதி ஆகிவிட்டது.
எனவே முன்னேற துடிப்பவர்கள் ஆர்வத்தை அதிகபடுத்திக் கொண்டு அறிவை புதுபிக்க முற்பட்டால் வளர்ச்சி என்ற பாதை வழி காட்டி பலனை சுவைக்க வழி வகுக்கும்.