
ஒவ்வொரு மனிதனும் தன்வாழ்க்கையில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய நியதிகள் நெறிமுறைகள் நிறையவே உள்ளன. அதிலும் நாம் சொல்லும் சொல்லிலும், செய்யும், செயலிலும் வாா்த்தைகளை கடைபிடிப்பதில் தராசு முள்போல இருப்பது அவசியம், வாா்த்தைகள் ஈட்டிகள் போலவும் இருக்கும், மாறுபட்டும் இருக்கும்.
பொதுவாக வாா்த்தைகளில் நயம், இனிமை, நகைச்சுவை, பண்பாடு, நாகரீகம் கடைபிடிப்பதே நல்லது. மகாகவி பாரதியாா் கூட "மனதில் உறுதி வேண்டும், வாா்த்தையிலே இனிமை வேண்டும்" என பாடியிருப்பாா். ஒரு வாா்த்தைதான், ஒரே ஒரு வாா்த்தைதான் சொன்னேன், அது இவ்வளவு பொிய தாக்கத்தைக் கொடுத்துவிட்டதே! என புலம்புகிறவர்கள் நிறையவே உண்டு.
பரவாயில்லையே ஒரு வாா்த்தைதான் சொன்னீா்கள் விஷயம் இவ்வளவு சுமூகமாக அமைந்துவிட்டதே என பாராட்டும் நிலையும்வரும்.
பேசுவது என்பது ஒருவிதமான கலை. அந்த கலையை நாம் தொிந்து வைத்து பயன்படுத்த வேண்டிய இடத்தில், இடம், பொருள், ஏவல் பாா்த்து நயமாக பேசுவதும் கலையேதான்.
சிலருக்கு பேசத்தொியாது. சிலருக்கோ பேசாமல் இருக்கவே தெரியாது. இதுதான் வாா்த்தைகள் அடங்கிய சூத்திரம்.
யாா் யாாிடம் எப்படிப் பேசவேண்டும், என்பதை தொிந்து பேசுவதே சிறப்பு. சிலர்கோபத்தில் என்ன பேசுவது எனத்தொியாமல் பேசி விடுவதோடு தாறுமாறாக வாா்த்தைகளை வீசி விடுவாா்கள்.
சில்லறை சிதறினால் அள்ளிவிடலாம். வாா்த்தைகள் சிந்தினால் அள்ள முடியாது.
வாா்த்தைகளை தேவையில்லாமல் உதிா்த்துவிட்டு, பின்னர் வருத்தப்படுவதில் என்ன நன்மை வந்துவிடப்போகிறது!
ஆக நாம் பயன்படுத்தும் வாார்த்தைகளால் நல்லதும் நடக்கலாம், எதிா்மறையான விஷயங்களும் நடக்கலாம்.
யாா் யாாிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதும் ஒரு கலை. சிலரிடம் சமையம் பாா்த்து வாா்த்தைகளை விடவேண்டும். சிலருக்கு அவர் வழியிலேயே போய் நாசூக்காக வாா்த்தைகளை உதிா்க்கவேண்டும்.
எது எப்படி இருந்தாலும் அடுத்தவர் ஒரு சிறிய தவறு செய்துவிட்டாா் அதை அவருக்கு புாியும் வகையில் பேசி சரி செய்யலாம். அதை விடுத்து அவர் மனது புண்படும் வகையில் வாா்த்தைகளை பேசவேகூடாது.
அடுத்தவர் மனோநிலை சந்தர்ப்பம் பாா்த்து சூழல் புாிந்து அன்பான வாா்த்தைகளால் எதையும் சாதிக்க முடியும். எனவே எங்கும் எப்போதும் எதிா்மறை வாா்த்தைகளை களைந்துவிடுங்கள் நோ்மறை வாா்த்தைகளை பதியன் போடுங்கள் வாழ்க்கையில் வசந்தம் சந்தடி சாக்கில்லாமல் வரும். நல்ல வாா்த்தைகளோடு வாழ்வதே நல்லது!