
இறைவன் படைப்பில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. அறிவாளிகளும் உண்டு, அறிவிலிகளும் உண்டு.
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற பாடல் வரிகளைப்போல மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம்.
இப்படி பலமுகங்கள் கொண்ட நபர்களிடம், குறிப்பிட்டுச்சொல்லும் நபர்களிடம், நாம் வெகு ஜாக்கிரதையாக பழகவேண்டும். அதாவது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலைபாடுகள்போல யாாிடம் எப்படி பேசவேண்டும், பழகவேண்டும், என்பதைப்போல் அனைத்து நிலைபாடுகளிலும் நாம் கவனமாக இருப்பது நல்லதே! யாாிடமிருந்து விலகி இருக்கவேண்டும். அதில் சில வகைகளாவன.
நம்மை ஏமாற்றும் நபர்கள்
நம்மை ஏமாற்றும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும், நமது பலவீனம் அவர்களுக்கு பலம். ஏமாறும் நபர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றும் நபர்கள் இருந்து கொண்டேதான் இருப்பாா்கள். நாம்தான் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அதுவே நமக்கு நல்லது.
நம்மை மதிக்காதவர்கள்
நம்மை மதிக்காதவர்கள், நமது குரலுக்கு செவி சாய்க்காதவர்கள், நமது வயதிற்கு மரியாதை கொடுக்காதவர்கள் இப்படிப்பட்ட நபர்களிடமிருந்து நமது மரியாதையை நாமே காப்பாற்றிக்கொள்ளும் வகையில் விலகி இருப்பதே நல்லது.
நமது பணத்தையும் உழைப்பையும் சுரண்டும் நபர்கள் நம்மோடு நன்கு பழகுவதுபோல பழகி, நயவஞ்சகமாய் பேசி, நமது உழைப்பையும், நமது பணத்தையும் சுரண்டி, ஏமாற்றும் குணம் கொண்ட குள்ளநரிகளிடமிருந்து விலகியே இருப்பது உசிதமானதே!
நம்மை எள்ளி நகையாடி ஏளனம் பேசி விமர்சிக்கும் நபர்கள்
நமது இயலாமையைக் கருத்தில் கொண்டு நமது முகத்திற்கு நேராக ஒன்றும், நமது முதுகிற்கு பின்னால் ஒன்றும், என நையாண்டி பேசும் நபர்களிடமிருந்து விலகிஇருப்பதே நல்ல காாியமாகும்.
நமக்கு துரோகம் செய்பவர்கள்
நம்மோடு பழகி நமக்கு நல்லது செய்வதுபோல நடித்து, தேவையில்லாத ஆலோசனைகள் சொல்லி, நமது முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் நம்பி கழுத்தை அறுக்கும் நபர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது.
இப்படி வாழ்க்கையில் விலக்கிவைக்க வேண்டியவர்கள் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கு ஒருநாள் போதாது!
மொத்தத்தில் நாம் சூதானமாக நடந்து கொள்வதே எல்லா வகையிலும் நமக்கு உதவியாய் இருக்கும் இதைத்தான் பொியோா்கள் நமக்கு அறிவுறையாக பாா்த்துப் பழகவேண்டுமென என சொல்லுவாா்கள் அப்போது நமக்கு எரிச்சல் வரத்தானே செய்கிறது உண்மை கசக்கிறதே!