
தேவைக்கு அதிகமான சுமையை நம் உடல் மீது சுமப்பது என்பது என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். அத்தகைய பாரம் அகற்றப்படுவதில் அல்லது இறக்கி வைக்கப்படுவதில் உள்ள மகிழ்வையும் நாம் அனுபவப்பட்டிருக்கிறோம்.
தங்களுடைய பெட்டியறைகள், நிலைப்பெட்டிகள், அறைகள் அனைத்தையும் குப்பை கூளங்களால் நிறைத்து வைத்திருப்பவர் உண்டு.
வீட்டை நல்ல முறையில் தூய்மைப்படுத்த முடியாத இந்நிலையை சில வேளைகளில் நோய்ப் பரப்பும் கிருமிகள் சேர்ந்துவிடுகிற அளவிற்கு அழுக்கடைய விட்டுவிடுவதும் உண்டு.
குப்பையில் எவ்விதப் பயனும், இல்லை. ஆனால், அழுக்கை அகற்றுவதால் நோய் பரப்புக் கிருமிகளை நீக்கிவிடலாம் என்றாலும் கூட அதை அவர்கள் செய்வதில்லை. குப்பைகளை அகற்றுவதில்லை.
வேறு பலர் வீடுகளில் இப்படி அடைசல் இன்றி தூய்மையாக இருப்பதைக் கண்டும் தாங்கள் வைத்துக் கொண்டிருக்கின்றார் அல்லது என்றைக்கேனும் ஒருநாள் அது ஏதேனும் பயன்படக்கூடும் என்றோ, அல்லது மதிப்புடையதாக மாறிவிடலாம் என்றோ, அல்லது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கிறது என்றோ கருதி அவைகளை வைத்துக்கொண்டு, அதற்கு மேற்படி காரணங்களுள் ஒன்றையும் கூறி மகிழ்ச்சி அடைகின்றனர்.
இனிமையாக, ஒழுங்காக, நன்கு வைக்கப்படுகிற ஒரு வீட்டில் அழுக்கு. நலக்கேடு, கவலை ஆகியவற்றைக் கொணர்கிற தேவையற்றவற்றைக் குவியவிடுவதில்லை.
ஒருவேளை குவிந்து விடினும், வீட்டைத் துடைத்து துப்புரவு செய்து, சீர்படுத்தி அதற்கு ஒளி, வசதி, விடுதலை ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதும், குப்பை, தீயிலோ அன்றி குப்பைகொட்டும் தொட்டியிலோ கொட்டிவிடப்படுகிறது.
இதைப்போல, தங்கள் மனங்களில் எண்ணக் குப்பைக் கூளங்களைத் திரட்டி வைத்து, விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்பதோடு அதை இழப்பதற்கும் அஞ்சுகின்றனர், சிலர்.
அவர்கள், நிறைவடையாத ஆசைகள், சட்டப் புறம்பானதும் இயற்கை அற்றதுமான இன்பங்களுக்கான ஏக்கங்கள் கடந்த கால நிகழ்ச்சிகள், தெய்வங்கள், தேவதைகள், பேய்கள். முடிவற்ற சமய சித்தாந்த சிக்கல்கள் பற்றிய முரண்பாடு, நம்பிக்கைகள் ஆகியவைகளால் அவதியுறுகின்றனர்.
இத்தகைய துன்பம் தரும் முரண்பாடுகள், இச்சைகள் அளவிற்கு மிகுந்த கருத்துப்பொதிகள் ஆகியவற்றை ஒழித்து நிலையானதையும் இன்றியமையாதவற்றையும் மட்டும் கைக் கொள்வதிலேயே எளிமை அடைந்து கிடக்கிறது.
அறம் ஒன்றே நிலையானது; குணவியல்பு ஒன்றே இன்றியமையாதது.
எனவே, தேவையின்மை அனைத்திலிருந்தும் விடுபட்டு சரியாகப் புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் வாழ்வை நடத்தினால், வாழ்வு எளிமையானதாக இருக்கும்.
எளிமையான வாழ்வு அதன் பகுதிகள் அனைத்திலும் எளிதானதாகவே இருக்கிறது. ஏனெனில், அதை ஆளுகின்ற இதயம் தூய்மையானதாக, வலிமையானதாக மாறிவிடுவதோடு உண்மையை மையமாகக் கொண்டு அதிலேயே வாழ்கிறது.