உங்கள் நிம்மதி உங்கள் கைகளில்: உற்சாகமாக வாழ எளிய வழிகள்!

Motivational articles
Live excitedly...
Published on

ம்மால் கட்டுப்படுத்த முடியாத பல விஷயங்களை நினைத்து நிறைய பேர் கவலைப்படுவார்கள். உக்ரைன் போரை நினைத்து , காவிரி பிரச்னையை நினைத்து, தங்கம் விலை உயர்வை நினைத்து, விலைவாசி நினைத்து, இப்படி  தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பல விஷயங்கள் அவர்களின் நிம்மதியை குறைத்துவிடும். நம்மால் என்ன முடியும்? நம் கைக்குள்என்ன இருக்கிறது? என்று யோசித்து அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தால் உற்சாகம் நிரந்தரம் .அப்படி செய்ய வேண்டிய சில விஷயங்கள்.

சவால்கள்

ஒரு தேவை ஏற்படும்போது நம்மால் செய்ய முடியவில்லையே? என்று விரக்தியில் தடுமாறி நிற்க தேவையில்லை. கூச்சத்தை தவிர்த்து யாரிடம் எப்போது கேட்டால் உதவி கிடைக்கும் என்று யோசிப்பதே சரியான வழி! சவால்கள் வாழ்வில் குறிப்பிடலாம். அந்த சவால்களை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறோம் என்பதில் தான் நம் நிம்மதி இருக்கிறது!

ஓய்வு

கடினமான ஒரு வேலையைச் செய்யும்போது களைப்பு ஏற்படும். இந்த சோர்வுடன் அதை தொடர்ந்தால் வேலை செய்ய முடியாது! சரியான நேரத்தில் ஓய்வெடுத்தால் அதன் பின் உற்சாகத்துடன் உழைக்க முடியும்! சங்கடமான சூழல்களும் நெருக்கடியான தருணங்களும் நிறைய வரும். அந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோம்? என்பது முக்கியம். நிதானம் தவறாமல் செயல்பட்டால் எதையும் நேர்த்தியாக சமாளிக்கலாம்!

நிறைவான திருப்தி

அரை மனதோடு ஒரு செயலை செய்தால் அது திருப்தியாக இருக்க முடியாது! ஒரு சாதாரண வேலையாக இருந்தாலும் அதில் 100% உழைப்பை கொடுக்கவேண்டும். அப்போதுதான் நிறைவும் திருப்தியும் கிடைக்கும். நம்மால் முடிகிற வேலைகளை நான் செய்கிறேன், என்று முன்வந்து ஏற்கவேண்டும்! பொறுப்புகளை ஏற்கும் பொழுது உயர்வு தானாக வரும். என் உழைப்பால் கிடைத்தது என்று அந்த உயர்வுகளை பெருமையுடன் ஏற்க முடியும்!

இதையும் படியுங்கள்:
காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!
Motivational articles

நேர்மறை எண்ணங்கள் வேண்டும்

அடுத்தவர்கள் உதவி தேவைப்படும் நேரங்களில் எனக்கு இதைச் செய்து கொடுக்க முடியுமா என்று தயக்கம் இல்லாமல் கேட்க வேண்டும். எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்று சுய இரக்கம் கொள்ளக்கூடாது. கேட்டால் சில விஷயங்கள் கிடைக்கும்!

தவறுகள் நேர்ந்துவிட்டால் அடுத்தவர்கள் மீது பழி போடக்கூடாது ! அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கவேண்டும். எந்த விஷயத்தையும் எதிர்மறையாக பார்க்காமல் அதில் இருக்கும் நேர்மறையான அம்சங்களை பார்க்க வேண்டும்!

தேவையின்றி தலையிடக்கூடாது

அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தேவை இன்றி தலையிடக்கூடாது. அதேபோல் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாரையும் தலையிட அனுமதிக்காதீர்கள்! நிம்மதியான வாழ்வுக்கு முக்கியமான சூத்திரம் இது! இன்றைய நாளில் நம் வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை நாம் எப்படிப்பட்ட மனநிலையுடன் அனுபவிக்கிறோம் என்பது முக்கியமானது. இந்த கணத்தில் வாழுங்கள்! ரசித்து வாழுங்கள்!

இதையும் படியுங்கள்:
காற்றாடியைப் போலத்தான் நம் வாழ்க்கையும்..!
Motivational articles

செய்யும் வேலை, தொழில், வியாபாரம் என்று எல்லாவற்றையும் என்னால் முடியும்! என்று முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள்! அந்த நம்பிக்கையே உங்களை கைப்பிடித்து முன்னேற்றி கொண்டு சென்று விடும்! நம்  உற்சாக வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது!

உற்சாகமான வாழ்க்கையை நினைத்து, தடங்கலை உடைத்து வெற்றி அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com