உறவுகளின் விசித்திரங்கள்: காதல், திருமணம், மற்றும் தத்துவங்கள்!

wedding philosophies
The oddities of relationships
Published on

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மை தான். ஆனால்,அதை சொர்க்கமாக வைத்துக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.

- எம்மா டபில்யூ

பெண் தனக்காக என்ன செய்கிறார்கள் என்று எப்போதுமே பார்ப்பதில்லை, என்ன செய்யவில்லை என்பதைத்தான் பார்ப்பாள்.         

-ஜி.கோர்ட்லின்

ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாய் என்று சொல்லாதே ,வேறு எந்தப் பெண்ணும் உன்னைப் போல் இல்லையென்று சொல் எல்லா வழிகளும் உனக்கு திறக்கும்.

- சேம் ஃபோர்ட்

பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவும், மற்ற பெண்களை அதிருப்தி செய்யவும் உடை அணிகிறார்கள்.

 - கோலட்டே .

அவளுக்கு இது முதல் காதலாக இருக்க வேண்டும் என்று ஆண் நினைக்கிறான். அவனுக்கு இதுவே கடைசி காதலாக இருக்க வேண்டும் என்று பெண் நினைக்கிறாள்.

- ஆஸ்கார் ஒயில்டு

பெண்கள் போராடுவது எல்லாம் ஆண்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அல்ல. பெண்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இருப்பதற்குத் தான்.

- ராஷ் பான்.

காதல் என்பது நெருப்பு, உன் இதயம் குளிர் காயப்போகிறதா அல்லது உன் வீடு தீப்பற்றப் போகிறதா என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது.

 -ஜோன் கிராபோர்டு

தேவதையை யாரும் நேசிப்பதில்லை: அவளின் நாற்பதாவது வயதில்.

 -டி.ஹென்றி

சிரிப்பிலேயே பெண்களின் சிரிப்பு தனி ரகம். அந்தச் சிரிப்பில் மயக்கும் சிரிப்பு, மயங்கும் சிரிப்பு என இரு வகை உண்டு.

 - டி.குவின்சி

கணவன் பேச்சிலே மனைவிக்கு கவனம் எப்போது இருக்கும் தெரியுமா? அந்தப் பேச்சு, இன்னொரு பெண்ணைப் பற்றி இருக்கும் போதுதான்.

- பாட்டர்ஸன் புரூஸ்

கல்யாணமானவர்களுக்கு எது ஆச்சரியமான விஷயம் என்றால் பிரம்மச்சாரிகள் பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதே!

-ஸெட்ரிக் ஆடம்

குடும்பத்தில் கோளாறு ஏற்படும்போது பாதித் தவறு  தன் மனைவி மீது என்று கணவன்மார்கள் சொல்கிறார்கள் .இன்னொரு பாதி ? அவளுடைய அம்மா மீது.

- டபிள்யு.கே.டான்.

இதையும் படியுங்கள்:
தோல்வி தந்த அனுபவம்: அது உங்களை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்! எப்படி?
wedding philosophies

டி.வி தொடர்கள் நிறைய பாருங்கள். உங்கள் குடும்பம் எவ்வளவோ தேவலை என்ற ஆறுதல் கிடைக்கும்.

- டால் லாரென்ஸ்

பெண்களுக்கு இயற்கை தரும் முதல் பரிசு அழகு. முதலில் திரும்பி எடுத்துக் கொள்ளும் பரிசும் அதுதான்.

- சார்லஸ் ரீட்

ஆண் பேச எழுந்து நின்றால் முதலில் கேட்கிறார்கள், பிறகு அவனை பார்க்கிறார்கள். பெண் பேச எழுந்து நின்றால் முதலில் அவளைப் பார்க்கிறார்கள் பிடித்திருந்தால் கேட்கிறார்கள்.

-பாலின் ஃப்ரடெரிக்

ஒரு காரணமும் இல்லாமல் ஒருவன் தன் மனைவிக்குப் பூ வாங்கிக் கொண்டு வருகிறான் என்றால் ஏதோ காரணம் இருக்கிறது.

- மில்லி மெக்கீ

புத்திசாலியான பிரம்மச்சாரி, குதிப்பதற்கு முன் பார்த்துக் கொள்கிறான்.பிறகு குதிக்காமலேயே இருந்து விடுகிறான்.

-ப்ளூம்ஸ்பரி

திருமணம் ஆனவர்களை விட பிரம்மச்சாரிகள்தான் பெண்களைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள் இல்லாவிட்டால், அவர்களும் திருமணம் செய்திருப்பார்களே.

-மென்கென்

பெண்களே ! உங்கள் கணவன்மார்கள் உங்களை விட்டுத்தூரமாகப் போகும் போதும் நம்ப வேண்டாம். பிரம்மச்சாரிகள் உங்களை நெருங்கி வரும் போதும் நம்ப வேண்டாம்.

- ஹெலன்

கணவனை எப்போது கண்காணிப்பது, எப்போது கண்காணிக்காதது போல் இருப்பது என்பதை அறிந்தவளே சிறந்த மனைவி.

 -ஹெர்பர்ட்

பெண்களை பிடிக்க மூன்று தூண்டில்கள் உள்ளன. உடம்பு, உணர்ச்சி, உலோகம்.

 -ஏ.சவான்னி

இதையும் படியுங்கள்:
ஒரே ஒரு முடிவு போதும், உங்கள் வாழ்க்கை திசை மாறும்!
wedding philosophies

பெண்ணும், யானையும் காயங்களை ஒருபோதும் மறப்பதில்லை.

 -ஹெக்டர் மவுன்ரே

அலுத்துப்போய் ஆண்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதிசயப்பட்டு பெண்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் முடிவில் இருவரும் ஏமாந்து போகிறார்கள்.

-ஆஸ்கார் ஒயில்டு

அழகான பெண்கள் ஈரம் காயாத பெயிண்டைப் போன்றவர்கள் பார்த்தால் தொடும் ஆசையை அடக்க முடியாது. தொட்டுவிட்டால் அது நம்மை விட்டு லேசில் போகாது.

- விக்டர் ஹியூகோ

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com