
இன்றைய காலகட்டத்தில் பலரும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருசில நேரத்தில் சோர்ந்து போய் போதும் என்று தனது இலக்கைவிட்டு பின்னேறுகின்றனர்.
அது தவறு. இலக்கை அடையவேண்டும் என்றால் சோர்வு பதற்றம் பயம் எல்லாம் நம்மிடம் வந்து செல்லும். அவற்றையெல்லாம் கடந்து நாம் போகவேண்டிய பாதையில் தெளிவு இருந்தால் விரைவில் இலக்கை நம்மால் அடைய முடியும்.
வெற்றி என்ற இலக்கை அடைவதற்கு முதலில் மனசோர்வை தவிர்க்கவேண்டும் மனசோர்வை தவிர்த்தாலே போதும் வெற்றி நிச்சயம் நம்மை தேடிவரும்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் பொழுதுதான் புதுப்புது விதமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். அந்த அனுபவங்களை வைத்து நாம் வெற்றி என்ற கோட்டையை எளிதில் அடைந்து விடலாம். அதற்கு சில யோசனைகள் இப்பதிவில்.
தோல்வி : இதற்கு மேல் என்னால் முயலயிலாது
வெற்றி : தோல்வியை கண்டு பயப்படாதே
தோல்வி: நான் இன்னும் என் பணியை முழுமையாக செய்து முடிக்கவில்லை.
வெற்றி : தேவையில்லாத பயத்தை தவிர்த்து விடுங்கள்
தோல்வி : இதை என்னால் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
வெற்றி : உங்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த குணங்களை பட்டியலிட்டு அவற்றை மேம்படுத்தவும்.
தோல்வி : ஆனால் இதிலிருந்து மீள முடியவில்லை மேலும் இப்போது நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் சோர்வாக உணர்கிறேன்..
வெற்றி : மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்களது நினைக்க வேண்டும் இல்லை அவற்றை செய்ய வேண்டும்.
தோல்வி : எந்த வேலையையும் என்னால் முழுமையாக செய்ய முடியவில்லை.
வெற்றி : உங்களுக்கு பிடித்த விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் கவனத்தை செலுத்தவும் அல்லது பிடித்த பாடலை கேட்டு உங்களது சிந்தனையை ஆனந்தமாக மாற்றவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் தோல்விகளும் உங்களை விட்டு விலகி வெற்றியை நோக்கி பயணம் செய்யும்..!!
வெற்றி என்ற இலக்கை எப்படி சுலபமாக அடையலாம் என்பதை பற்றி விரிவாக படித்து இருப்பீர்களே இவ்வளவுதான் வெற்றியின் சூத்திரம். முதலில் நாம் கற்க வேண்டியது தோல்வியிடம் பாடத்தை. பிறகு வெற்றி கொடி நாட்டுவோம்.