தன்னலத்தோடு பொதுநலமும் வேண்டும்!

Want Selfishness and public interest!
Motivational articles
Published on

ம் வீட்டிலும் சரி நம் உறவுகளிலும் சரி, நண்பர்களே நாம் பணியாற்றும் அலுவலகங்கள் என எல்லா இடத்திலும் குறை கூறுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை நாம் கவனித்து பார்த்தால் தெரியும் குறை கூறுபவர்களால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து விட முடியாது. 

ஒருவர் நம்மை குறை கூறுகிறார் என்றால் அதை நாம் அலட்சியப்படுத்த வேண்டாம். அதில் உண்மையில் குறை இருந்தால் அதை திருத்திக்கொண்டு நாம் நம் பயணத்தை தொடர்ந்தால் போதும் வாழ்க்கையில் வெற்றி என்னும் இலக்கை எளிமையாக அடைந்து விடலாம். 

இதையும் படியுங்கள்:
மனதிற்கு நிறைவைத் தருவது எவை தெரியுமா?
Want Selfishness and public interest!

மனிதர்களுக்கு இடையில் ஒருவரையொருவர் வெறுப்பதற்கும், இதமான உறவு இல்லாமல் போவதற்கும் சரியான, தெளிவற்ற, தவறான புரிதல்கள்தான் காரணம். மற்றவர்களை தவறாக எண்ணுவதற்கு காரணமாக இருப்பது தேவையற்ற அய்யப்பாடுகளும் அவதூறு பரப்புதலும்தான் என்றால் அது மிகையில்லை.

கெட்ட எண்ணத்தில் ஆதாரம் இல்லாமல் நாம் பேசும்பொழுது நிறைய பொய்களை சேர்த்து பேசவேண்டிய நிலை உருவாகிவிடுகின்றது. அவர்களைப் பற்றி தேவையில்லாமல் துருவித் துருவி ஆராய வேண்டிய நிலையையும் உருவாக்கிவிடுகின்றோம். 

மனிதர்களில் எவரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. எனவே!, பிறரின் குறைகளையும், அவர்களின் அந்தரங்க செயல்களையும் எக்காரணம் கொண்டும் துருவித் துருவி ஆராயமல் இருப்பது மிக நல்லது.

சிலர் தங்கள் பொன்னான நேரத்தை, தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் அடுத்தவர்களின் குறைகளை கண்டுபிடிக்கவே செலவிட்டுக் கொண்டிருப்பார்கள்

அவர்களின் கண்களுக்கு மற்றவர்களிடம் இருக்கும் நிறைகள் தெரியாது. குறைகள் மட்டுமே தெரியும். அடுத்தவர்களின் குறைகளை கண்டுபிடிக்கவும், அதுபற்றி பேசவுமே தங்கள் மூளையை பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அவர்களது மூளை அதற்கு அப்பால் சிந்திக்கும் திறனை இழந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
இலக்கு என்பது எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?
Want Selfishness and public interest!

மற்றவர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பவன், தனக்குத்தானே குழி பறித்துக் கொள்கிறான். மற்றவர்களின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு, தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்குப் பெயர்தான் ''தன்நலம்''.

ஒவ்வொரு மனிதருக்கும் தன்நலம் இருக்க வேண்டியதுதான். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் தன்னலத்தோடு கலந்து பொதுநலமும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையில் நீங்கள் மதிக்கப் படுவீர்கள். தன்னலத்தோடு பொதுநலத்தையும் சேர்த்துப் பாருங்கள் வாழ்க்கை இனிமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com